 |
Tambaram Astrolgoer, Prohithar, Sri Thanigai Panchangam |
சென்னையில் 25.4.2015 அன்று உச்சிக்கு வந்த சூரியன் வடக்கில் பயணம் செய்து 21.6.2015 அன்று தெற்கு நோக்கி வருகிறார் 18.8.2015 அன்று சென்னைக்கு உச்சிக்கு வரும் அவர் பின்னர் தென்தமிழகத்திற்கு உச்சிக்கு வருவார் இக்காலம் வரை வெயில் தாக்கம் இருக்கும்.
கடல்(ஆடி)காற்றால் வெயில் தாக்கம் குறையலாம். ஆயினும் சிலநாட்களில் அக்னிநட்சத்திரகாலம் போன்று வெயில் 110 பாகையை தாண்டும்.
இது ஒரு வழக்கமான ஒன்று. எண்ணிலடங்கா வாகன புகை, இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, பக்கத்து வீட்டுக்காரனின் மரத்தையும் சண்டை போட்டு வெட்டி, தார்சாலைகளை சிமிண்டு சாலைகளாக மாற்றியதால் சென்னையில் வெப்பம் அதிகரித்துள்ளது.
அடிக்கடி உப்பு, சர்க்கரை கலந்த நீரை பருகுவது நன்று. எக்காரணம் கொண்டும் கோகோ கோலா, பேண்டா போன்றவற்றை பருக வேண்டாம், மாறாக பழச்சாறு, இளநீர் நன்று
வாழ்க வளமுடன்
Tambaram Astrolgoer Balu Saravanan 9.7.2015 www.prohithar.com