Pages

Monday, October 28, 2013

2014 Eclipse (கிரகணம் 2014ம் ஆண்டு)

2014_Lunar_solar_eclipse_chennai_tambaram
2014 Eclipse (8.10.2014 ) Chennai - Tambaram Astronomy Club
2014 Eclipse (கிரகணம் 2014ம் ஆண்டு)

இந்த ஆண்டு இரண்டு முழுசந்திர கிரகணங்கள், ஒரு குறை சூரிய கிரகணம், ஒரு பகுதி சூரிய கிரகணம் என நான்கு கிரகணங்கள் நிகழும்
தமிழகத்தை பொருத்த மட்டில் 8.10.2014 அன்று நிகழும் முழு சந்திரகிரகணம் (Total Lunar Eclipse) மட்டும் சென்னையில் தெரியும். மற்ற மூன்று கிரகணங்கள் தெரியாது
8.10.2014 அன்று பகலில் சூரியன் இருக்கும் பொழுது இந்திய நேரப்படி பகல் 1:42 மணிக்கு புறநிழல் கிரகணம் துவங்கி, பகல் 2:44 மணி அளவில் நிஜநிழல் கிரகணமாக பிரவேஸிக்கிறது, . கிரகணம் உச்சகட்டமாக மாலை 4:25க்கு அடைகிறது.
பகலில் நிகழும் சந்திரகிரகணம் தெரியாது அஸ்மனத்தில் மட்டுமே இது தெரியும். அன்று சென்னையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே அதாகில் மாலை 6:04 வரை மட்டுமே நிஜ நிழல் கிரகணம் தெரியும், பின்னர் புறநிழல் (Umbral) கிரகணம் இரவு 7:05 வரை தெரியும் (சுமார் 1 மணி 11 நிமிடங்கள்)
சூரியமறைவின் பொழுது அடிவானில் மேகமூட்டம், வளிமண்டல ஒளிச்சிதைவு காரணமாக நிஜகிரகணத்தினை காண்பது அரிதாகும், ஆயினும் புறநிழல் கிரகணத்தை காணலாம் (சந்திரனின் ஒளி சற்று மங்கலாக இருக்கும்). இதை வெறும் கண்களால் கிழக்கு திசையில் காணலாம்.

2014 Apr 15: Total Lunar Eclipse
2014 Apr 29: Annular Solar Eclipse
2014 Oct 08: Total Lunar Eclipse
2014 Oct 23: Partial Solar Eclipse
2014 Apr 15: முழு சந்திர கிரகணம் Total Lunar Eclipse
2014 Apr 29: குறை சூரிய கிரகணம் Annular Solar Eclipse
2014 Oct 08: முழு சந்திர கிரகணம் Total Lunar Eclipse
2014 Oct 23: பகுதி சூரிய கிரஹணம் Partial Solar Eclipse
Chennai - Tambaram Astronomy Club