வக்கிர குரு பலன் 2009
திருமணத்திற்கு உகந்த "குருபலன்" காலத்தினை ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் நின்ற இராசியில் இருந்து குரு கிரகம் இருக்கும் இடத்தை வைத்துதான் கூறமுடியும்.
திருமணத்திற்கு உகந்த "குருபலன்" காலத்தினை ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் நின்ற இராசியில் இருந்து குரு கிரகம் இருக்கும் இடத்தை வைத்துதான் கூறமுடியும்.
இவ்வருடம் குரு கிரகம் நிராயண முறையில் (Sidereal Longitude ) 1 மே 2009 முதல் 30 ஜூலை 2009 வரை வக்கிர கதியாக (Retrogression) கும்ப ராசியில் ( Aquarius) வசிக்கிறார். பின்னர் மீண்டும் மகர ராசிக்கே( Capricorn) திரும்புகிறார்.
குரு வக்கிர கதியில் இருக்கும் பொழுதும் சில இராசிகளுக்கு தற்காலிகமாக திருமணத்திற்குரிய நல்ல சூழலை தருவார் இந்த கால கட்டத்தில் எடுக்கப்படும் திருமண முயற்சிகளும் பெரும்பாலும் வெற்றி தரும். இடையில் வரும் குரு வக்கிரத்தில் பெண்-பிள்ளை சம்மதம் தெரிவித்தவுடன், நிச்சிய்ம் செய்து குரு வக்கிர கதியில் முடியும் முன்னர் திருமணம் செய்தல் நன்று. அப்படி இயலாத நிலையில் குரு முழுமையாக நல்ல பலன் தரும் காலத்தில் திருமணத்தை நடத்தல் மிகநன்று.
பொதுவாக திருமண காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் "குரு பலன்" இருப்பது மிகநல்லது, ஆனால் சில தம்பதிகளுக்கு அப்படி அமைவதில்லை அப்படிப்பட்டவர்கள் மட்டும் பரிகார தானங்களை (ஆதரவற்றோர் இல்லங்களுக்கு) செய்து பின்னர் திருமணத்தை நடத்தலாம். திருமணத்தில் அதிக முக்கியத்துவம் பெண்ணுக்குத்தான் தரப்படுகிறது, ஜாதகங்களும் பெண்ணுக்கு ஆண் பொருந்துகிறானா என்றுதான் கணிக்கப்படுகிறது. திருமண முகூர்த்த கணண விதானத்தில் தாராபலன், சந்திரபலன் எல்லாம் கண்டிப்பாக பெண்ணுக்கு இருத்தல் வேண்டும்.
ஆண், பெண் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,11ல் குரு இருக்கும் காலம் திருமணத்திற்கு உகந்த மிக நல்ல காலம் ஆகும். அந்த வகையில் தற்பொழுதய குரு வக்கிர காலகட்டத்தில் மேஷம், மிதுன, சிம்மம், துலாம், மகர ராசிகளுக்கு திருமணம் கூடிவரும்.
ஆண்களுக்கு திருமணம் நடைபெற சூரியனின் பார்வைதான் மிக முக்கியமானதாகும். அடுத்த முக்கியத்துவம் தான் குருவிற்கு தரப்படுகிறது. ஆணின் சந்திரன் நின்ற ராசிக்கு சூரியன் 3,6,11ல் வசிக்கும் காலமே திருமணத்திற்கு உகந்த காலம் ஆகும். அதே நேரத்தில் குருவின் பார்வைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு திருமணம் நடத்துதல் மிகவும் சிறப்பானதாக அமையும்.
குரு பலன் இருந்தால் தோஷம் உள்ள ஜாதகத்தினரின் திருமணமும் தடை நீங்கி கூடும்.
பரிகாரங்கள்:
வியாழன் கிழமைகளில் குளத்துடன் உள்ள ஆகம முறையிலான சிவன் கோவிலில் இருக்கும் தட்சக்ஷிணா மூர்த்தி அல்லது குரு கிரகத்திற்கு முன் அமர்ந்து தட்க்ஷிணா மூர்த்தி ஸ்லோகம், குரு காயத்ரி மந்திரங்களை ஜபிக்கவும்.
ஆதரவற்றோர் இல்லத்திற்கு மூக்குகடலை 2கிலோ வாங்கி தரவும். ஜென்ம நட்சத்திரம், ஜென்ம வாரத்தில் மஞ்சள் நிற ஆயத்தஆடைகளை (Ready Made Dress) வாங்கித்தந்து தானம் செய்யவும்
பரிகாரங்கள் தர்ம சிந்தனை அடிப்படையில் அமைந்தால் பலன் நிச்சியம் உண்டு
ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வக்கிர குரு(Retrogression) மற்றும் நேர் குரு(Direct) பலன்(சந்திரன் நின்ற இராசிக்கு) .................இது குறித்து மேலும் முழு தகவல் அறிய
www.prohithar.com