Pages

Tuesday, May 07, 2019

அப்படி என்ன இருக்கு ஆயாதி கணிதத்தில்..

vasthu book, Vastu sastra, வாஸ்து நூல், ஆயாதி நூல், வாஸ்து பரிகாரம், வாஸ்து பூஜை

நவீன கணிதத்தில் எந்தவிதமான சமன்பாடுகள், கோட்பாடுகள் உள்ளதோ அவைத்தான் ஆயாதி கணிதத்திலும் உள்ளது
இந்திய கட்டிடக்ககலை பொறியியல் துறையின் அற்புதமான அங்கம்
வெள்ளைக்காரர்களை காட்டிலும் இந்த விஷயத்தில் நாம் மேம்பட்ட நிலையில் இருந்தோம்...!
ஒரு ஜன்னல் எப்படி இருக்கவேண்டும்? அதன் அளவு என்ன? தரையில் இருந்து எவ்வளவு உயரத்தில் அமைக்க வேண்டும்? எந்த திசையில் இருக்க வேண்டும்.? எந்த மரத்தால் செய்ய வேண்டும்? சுவர் தடிமன் எவ்வளவு? சுவரில் என்ன கலவை பயன்படுத்த வேண்டும் .....!
இதைத்தான் ஆயாதி கூறுகிறது.....!
இன்று மேலைநாட்டுக்கல்வியை படித்தாலும் அதில் என்ன உள்ளதோ அதுதான் நமது ஆயாதி கணிதமும்
பஞ்சாங்கம் என்று சொன்னால் முகம் சுளிப்பது "நாஸா தகவல்" என்று சொன்னால் பெருமையாக நினைப்பது....
எல்லாமே கணிதம்தான் அது இல்லாமல் இந்தியா இல்லை இந்து கட்டிடக்கலை இல்லை
மரபுக்கட்டக்கலையை அறிந்துக்கொள்ள விரும்பினால் வாஸ்து சாஸ்திரம் என்பதை முழுமையாக படித்து கணிதம் அறிவதுதான்
நாம் என்றும் மேம்பட்டவர்களாகவும் அறிவார்த்த சமூகமாகவும் இருப்போம்

இதுதான் வருத்தமான உண்மை...!



tamil vastu book, தமிழ் வாஸ்து நூல், வாஸ்து பூஜை, வாஸ்து பரிகாரம்

வாஸ்து நூல் என்பது 100% கணிதம் சார்ந்தது
அதில் அனைத்துவிதமான கணிதங்களும் உள்ளடக்கியதாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் 22க்கும் மேற்பட்ட "வாஸ்து" எனும் பெயரில் நூல்கள் வந்தாலும்.
ஸ்தபதியார் எழுதிய நூல் மட்டுமே கணிதம் தாங்கி வந்துள்ளது மற்றவை துளிகூட கணிதம் சாராதவை
இந்திய பாரம்பரிய கட்டிட பொறியியல் கலையைத்தான் "வாஸ்து" எனும் பெயரில் அழைக்கிறோம்
ஆனால் தற்பொழுது வெளிவந்துள்ள நூல்களில் கட்டிடக்கலையை தவிற பயமுறுத்தல், பரிகாரம், மிகைப்படுத்தல் எனும் மனம் - வழிபாடு சார்ந்த விஷயங்கள் மட்டுமே முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை ஆக்ரமித்துள்ளது
துவக்க நிலைக்கு இந்த புஸ்தகங்கள் ஒரு அறிமுகம் அவ்வளவுதான் மேம்படுத்திய நிலைக்கு செல்ல ஆசைப்பட்டால்...
தரமான "மூலவாஸ்து" நூல்களை படித்து "கணிதம்" அறிய குறைந்தபட்சம் 4வருடங்களாவது ஆகும் பின்னர் செயல்முறையில் ஈடுபட்டு மேலோங்க பலவருடங்களாகும். இதுதான் நிஜம்
எந்த ஒரு வாஸ்து விதியும், கணிதமும் பொதுவானதல்ல அது இடத்திற்கு இடம் மாறும் மதிப்புடைய பல்வேறு சமன்பாடு( Equation)களை கொண்டது
இன்னும் சொல்லப்போனால் கன்னியாகுமரிக்கு செய்த வாஸ்து கணிதம் மதுரைக்கு பொருந்தாது. வாஸ்து என்பது முற்றிலும் புவிநிலை, சூரியனின் வீச்சு தொடர்பானது
தயவு செய்து நன்கு வாஸ்து கணிதம் அறிய மாமல்லபுரம் சிற்பக்கலை கூடம் சென்று அங்குள்ள நூல்களை படித்து அறியுங்கள் அல்லது காஞ்சி மடத்தின் சிற்பகல்லூரி சென்று மூலகணிதம் நூல்களை படித்து அறிந்து நிஜமான பாரம்பரிய கட்டிடக்கலையை போற்றுங்கள்.
சில்பசாஸ்திர வாத்யார் அல்லது ஸ்தபதியிடம் கணிதம் கற்று வாஸ்து எனும் விஷயத்தை நிஜமாக சுவாசியுங்கள்
கிரி டிரேடிங்கிலும், ஹிக்கின்பாதம்ஸ்ஸிலும், இணையத்திலும் "நிஜமான மூலவாஸ்த சாஸ்திர நூல்" கிடைக்காது.
பாலு சரவண சர்மா