Pages

Showing posts with label தமிழ் வாஸ்து நூல். Show all posts
Showing posts with label தமிழ் வாஸ்து நூல். Show all posts

Tuesday, May 07, 2019

இதுதான் வருத்தமான உண்மை...!



tamil vastu book, தமிழ் வாஸ்து நூல், வாஸ்து பூஜை, வாஸ்து பரிகாரம்

வாஸ்து நூல் என்பது 100% கணிதம் சார்ந்தது
அதில் அனைத்துவிதமான கணிதங்களும் உள்ளடக்கியதாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் 22க்கும் மேற்பட்ட "வாஸ்து" எனும் பெயரில் நூல்கள் வந்தாலும்.
ஸ்தபதியார் எழுதிய நூல் மட்டுமே கணிதம் தாங்கி வந்துள்ளது மற்றவை துளிகூட கணிதம் சாராதவை
இந்திய பாரம்பரிய கட்டிட பொறியியல் கலையைத்தான் "வாஸ்து" எனும் பெயரில் அழைக்கிறோம்
ஆனால் தற்பொழுது வெளிவந்துள்ள நூல்களில் கட்டிடக்கலையை தவிற பயமுறுத்தல், பரிகாரம், மிகைப்படுத்தல் எனும் மனம் - வழிபாடு சார்ந்த விஷயங்கள் மட்டுமே முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை ஆக்ரமித்துள்ளது
துவக்க நிலைக்கு இந்த புஸ்தகங்கள் ஒரு அறிமுகம் அவ்வளவுதான் மேம்படுத்திய நிலைக்கு செல்ல ஆசைப்பட்டால்...
தரமான "மூலவாஸ்து" நூல்களை படித்து "கணிதம்" அறிய குறைந்தபட்சம் 4வருடங்களாவது ஆகும் பின்னர் செயல்முறையில் ஈடுபட்டு மேலோங்க பலவருடங்களாகும். இதுதான் நிஜம்
எந்த ஒரு வாஸ்து விதியும், கணிதமும் பொதுவானதல்ல அது இடத்திற்கு இடம் மாறும் மதிப்புடைய பல்வேறு சமன்பாடு( Equation)களை கொண்டது
இன்னும் சொல்லப்போனால் கன்னியாகுமரிக்கு செய்த வாஸ்து கணிதம் மதுரைக்கு பொருந்தாது. வாஸ்து என்பது முற்றிலும் புவிநிலை, சூரியனின் வீச்சு தொடர்பானது
தயவு செய்து நன்கு வாஸ்து கணிதம் அறிய மாமல்லபுரம் சிற்பக்கலை கூடம் சென்று அங்குள்ள நூல்களை படித்து அறியுங்கள் அல்லது காஞ்சி மடத்தின் சிற்பகல்லூரி சென்று மூலகணிதம் நூல்களை படித்து அறிந்து நிஜமான பாரம்பரிய கட்டிடக்கலையை போற்றுங்கள்.
சில்பசாஸ்திர வாத்யார் அல்லது ஸ்தபதியிடம் கணிதம் கற்று வாஸ்து எனும் விஷயத்தை நிஜமாக சுவாசியுங்கள்
கிரி டிரேடிங்கிலும், ஹிக்கின்பாதம்ஸ்ஸிலும், இணையத்திலும் "நிஜமான மூலவாஸ்த சாஸ்திர நூல்" கிடைக்காது.
பாலு சரவண சர்மா