Pages

Sunday, April 01, 2018

துல்லியமான மாங்கல்ய தாரண காலம் (தாலி கட்டும் நேரம்)
முகூர்த்த விதானம்
பொதுவாக முகூர்த்த லக்னம் குறித்தாலும் அந்த லக்னத்திலும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே மிகவும் தெய்வாம்ஸம் பொருந்திய நேரமாக அமைகிறது.
லக்னம் அதன் தன்மைக்கேற்ப அக்னி, வாயு, ப்ரத்வி, ஜலம் என்று 4 வகைகாளக பிரிக்கப்பட்டு முறையே அதன் லக்ன மொத்த பாகையில் (30°) 21, 14, 24, 7 பாகை காலம் மிகவும் உன்னதமான காலமாக கருதப்படுகிறது.
லக்னத்தின் கால அளவு அட்சரேகை அடிப்படையில் மாறுபடும். இதனை நன்கு அறிந்து குறித்துக்கொண்டு அதன் அடிப்படையில் திருமண மண்டபம் அமைந்த இடத்திற்கு ஏற்ப லக்னம் கணித்து அதன் துருவ அடிப்படையில் தாலி கட்டும் நேரம் கணிக்க வேண்டும்.
பொதுவாக தமிழகத்தில் மட்டும்தான் ராகு-எம கண்ட காலம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. லக்னத்தின் உன்னதமாக காலத்தில் ராகு-எம கண்டம் இருப்பினும் அதை பொருட்படுத்த தேவையில்லை. ( சிலருக்கு இதில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதை மறுக்க விரும்பவில்லை)
பாலு சரவண சர்மா
பஞ்சாங்க கணிதக்ஞர், புரோகிதர், ஜோதிடர்
9840369677