http://www.prohithar.com/virothi/karthigai2009.pdf
சென்னையில் ஐப்பசி மாதம் இறுதி நாள் 16.11.2009 திங்கள் அன்று சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசிக்கிறார். எனவே மறுநாள் 17.11.2009 செவ்வாய் கார்திகை முதல் தேதி என கணணம் செய்யப்படுகிறது
கார்திகை மாதப்பிறப்பும் சித்தாந்த முறைகளும்
ஆரியபட்டீயம் சித்தாந்தம் 30:40 (மாலை 6:24 மணி) அளவில் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசம் ஆதாவது கார்திகை மாதபிறப்பு
வரருசி சித்தாந்தம்: 30:49 (மாலை 6:28 மணி) அளவில் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசம் ஆதாவது கார்திகை மாதபிறப்பு
சுத்த திருக்கணிதப்படி (அறிவியல் பூர்வமாக) 16.11.2009 திங்கள் அன்று பகல் 11:09 மணிஅளவில் விருச்சிக ராசியில் சூரியன் பிரவேசிக்கிறார் எனவே அன்று தான் கார்திகை மாதம் முதல் தேதி ஆகும் ஆனால் தமிழகத்தில் மாதப்பிறப்பினை சுத்த திருக்கணிதப்படி கணக்கிடுவதில்லை மாறாக வாக்கிய முறைப்படி மற்றும் ஆரியசித்தாந்தம் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பதுதான் உண்மை.(வாசன் திருக்கணிதப்பஞ்சாங்கத்தில்கூட இப்படித்தான்)
சூரியன் மறைவு மாதப்பிறப்பினை கணக்கிடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது எனவே சூரிய அஸ்தமனத்தின் அடிப்படையில் வாக்கிய, ஆரியபட்டீயம் முறைப்படி 17.11.2009 அன்று தான் கார்திகை மாதபிறப்பு ஆகும். தமிழகத்தை பொருத்தமட்டில் தஞ்சை, திருச்சி, ஆற்காடு, சென்னை நகரங்களின் அடிப்படையிலேயே பஞ்சாங்கம் வெளியிடுவதால் 17.11.2009 செவ்வாய் அன்றுதான் கார்த்திகை மாத முதல் தேதி ஆகும்.
16.11.2009 திங்கள் அன்று சென்னை சூரிய உதயம் 6:08, சூரிய அஸ்தமனம்: மாலை 5:39(சூரியனின் மையப்புள்ளி)
கேரளாவில் மலையாள மாதப்பிறப்பு கணக்கீடு ஒருநாளில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உள்ள காலத்தில் 3ல் 5பாகத்தின் உள் காலத்தில் (சுமார் மதியம் 1:12 மணி) சூரியன்அடுத்த இராசியில் பிரவேசிக்கும் காலம் மாதப்பிறப்பு ஆகும் எனவே ஒரு நாள் முன்னதாக கேரளாவில் கார்திகை மாதம் பிறக்கும். கேரளாவில் திருக்கணிதமுறை பரவலாக பயண்படுத்தப்படுகிறது
English Date: Monday 16 November 2009 Malayalam Date: Vrishchikam 1, Kollam 1185
சபரிமலைக்கு மாலை போடுபவர்கள் (தமிழ் நாட்டில் உள்ளவர்கள்) ஐப்பசி மாதம் கடைசி நாள் அன்று மாலை 7 மணி அளவில் மாலை போடலாம் (தமிழ் மாதமும் பிறந்து விடும்)
மண்டலபூஜை மஹோச்சவம் காலம் Mandalapooja Maholsavam 15-11-2009 to 26-12-2009
மண்டலபூஜை Mandalapooja 26-12-2009, Thirunada Opens 30-12-2009
மகரவிளக்கு Makaravilakku 14-01-2010
http://www.sabarimala.org.in
சாமியே சரணம் ஐயப்பா
மேலும் விபரம் அறிய
http://www.prohithar.com/virothi/karthigai2009.pdf
http://www.prohithar.com