Pages

Saturday, February 26, 2011

சிங்கப்பூரில் கர வருடத்தில் ஒரு நாள் கூடுதலாக இருக்கும்

சிங்கப்பூரில் கர - நந்தன வருடத்தில் ஒரு நாள் கூடுதலாக இருக்கும்

விரிவான தகவலுக்கு

www.prohithar.in/kara2011/Singapore_Nandana_Varusham_pirappu.pdf

இதனால் அடுத்த ஆண்டு நந்தன (2012 -2013) வருட பிறப்பில் வேறுபாடு உள்ளது

சிங்கப்பூரில் கர வருட கடைசி நாள் பங்குனி மாதம் 31 (April 13, 2012)

சூரிய உதயம்: Sunrise at 7:05*, Sunset at 19:06

சந்திர உதயம்: Moonrise at 1:40*, சந்திர அஸ்தமனம்: Moonset at 13:01,

சிங்கப்பூர் நேரப்படி 13.4.2012 அன்று இரவு 7:30 மணி (33 நாழிகை) மேல் வாக்கியம்(பாம்பு பஞ்சாங்கம்) அடிப்படையில் சூரியன் (அஸ்தமனத்திற்கு) பிறகு மேஷத்தில் பிரவேசிக்கிறார் எனவே மறுநாள் 14.4.2012 அன்று தான் உண்மையான தமிழ்வருட பிறப்பாக கணிக்கிடவேண்டும்.

ஆரிய சித்தாந்தம், வரருசி வாக்கியம், பரகிதம், சூரிய சித்தாந்தம், திருக்கணிதம் முறைப்படியும் சிங்கப்பூரில் 14.4.2012 சனிக்கிழமை அன்று தான் உண்மையான தமிழ்வருட பிறப்பாகும்.

இதனால் சிங்கப்பூரில் வரும் கர வருஷத்தில் பங்குனி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக இருக்கும்

சிங்கப்பூரில் நந்தன 2012-2013 தமிழ் வருஷம் பிறப்பு

சித்திரை முதல் நாள் 14.4.2012 சனிக்கிழமை நந்தன வருஷம் சித்திரை 1

வேண்டுகோள்:

தமிழகத்தில் வெளியிடப்படும் பஞ்சாங்கத்தை அப்படியே சிங்கப்பூரில் வருஷப்பிறப்பு விஷயத்தில் மட்டும் பயன்படுத்த இயலாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வரருசி வாக்கிய கரணம் மற்றும் பல மூலகிரந்த நூல்களை படித்தும், பஞ்சாங்க கணிதக்ஞர்களை கலந்து நன்கு ஆய்வு செய்த பின்னர் உறுதியான தகவல் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தகவல் மலேசியாவிற்கும் பொருந்தும்.

விரிவான தகவலுக்கு

www.prohithar.in/kara2011/Singapore_Nandana_Varusham_pirappu.pdf

25.2.2011