அங்காரகன் தோஷம் அல்லது செவ்வாய் தோஷம்.
ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்பதை, ஜாதகத்தில் இராசி, நவாம்சம், பாவம் கட்டங்களில் லக்னம், சந்திரன், சுக்கிரன் இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய் இருக்கும் இடத்தையும், மற்ற கிரகங்கள் பார்பதாலும், செவ்வாயுடன்மற்ற கிரகங்கள் சேர்க்கையும் கொண்டே முடிவெடுக்க வேண்டும். இதில் ஜாதகரின் பாவ கட்டம் செவ்வாய் தோஷத்தின் அளவினை கணிக்க மிக முக்கியமான பங்குவகிக்கிறது. எனவே ஜாதக புஸ்தகத்தில் பாவ கட்டத்தை இடம்பெறசெய்வது மிக முக்கிமாகும்.
கட்டத்தை பாரத்தவுடன் லக்னம், சந்திரன், சுக்ரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம் என கண்ணை மூடிக்கொண்டு தவறாக கணித்து விடக்கூடாது, இதனால் நல்ல பொருத்தமான ஜாதகங்கள் கூட தட்டிவிடும், கிட்டத்தட்ட மருத்துவர் துணையின்றி மருந்துக்கடைக்கு சென்று மருந்து வாங்கி உட்கொள்வதற்கு சமமாகும்!
பொதுவாக செவ்வாய் தோஷம் இருப்பதாக தோன்றும் ஜாதகங்களை நேரம் ஒதுக்கி அதிக கவனம் தந்து தேவகேரளீயம், குமாரசுவாமியம், பலதீபிகா, ஜோதிட சிந்தாமணி ஆகிய கிரந்த நூல்களில் கூறியுள்ள தோஷ பரிகார காரண வாக்கிய சூத்திரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்த பின்னர் செவ்வாய் தோஷம் குறித்து முடிவுக்கு வரமுடியும்.
அதன் அடிப்படையில் தோஷம் இல்லை என்பதற்கான சில காரணங்களை இங்கு தந்துள்ளேன்
- சந்திரனுடன் சேர்ந்தால் தோஷமில்லை.
- செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகரம் இலக்னத்தில் இருந்தால் தோஷமில்லை.
- குருவுடன் சேர்ந்தால் தோஷமில்லை.
- புதனுடன் சேர்ந்தாலும் புதன் பார்த்தாலும் தோஷமில்லை.
- சூரியன், குரு, சனி ஆகியவர்களுடன் செவ்வாய் சேர்ந்தோ அல்லது பார்கப்பட்டிருந்தாலோ தோஷம் இல்லை
- சந்திரன் ஆட்சி செய்யும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் அங்காரக தோஷம் இல்லை.
- சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் அங்காரக தோஷம் இல்லை.
- செவ்வாய் இருக்கும் 2-மிடம் மிதுனம், கன்னியாகில் தோஷமில்லை.
- " " 4-மிடம் மேஷம்,விருச்சிகமாகில் தோஷமில்லை.
- " " 7-மிடம் கடகம், மகரமாகில் தோஷமில்லை.
- " " 8-மிடம் தனுசு, மீனமாகில் தோஷமில்லை.
- " " 12-மீனம் ரிஷபம், துலாமாகில் தோஷமில்லை.
- சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
- நவக்கிரகத்தின்தலைவனான சூரியனுடன் சேர்ந்தாலும் சூரியன் பார்த்தாலும் தோஷமில்லை.
- செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி லக்னத்திற்கு 1, 4, 5, 7, 9, 10 இவைகளில் எங்கு இருந்தாலும் தோஷமில்லை.
- 8, 12-லுள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரமாகில் தோஷமில்லை.
- தனது உச்ச வீடான மகரத்திலாவது, சொந்த வீடான மேஷ விருச்சிக ராசிகளிலாவது செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
- சனி, ராகு, கேது பாப கிரகங்களுடன் கூடியாவது, இவர்களால் பார்கப்பட்டாவது செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
- செவ்வாய் தன் மித்திரர்களான சூரியன், சந்திரன், குரு இவர்கள் வீட்டில்-அதாவது சிம்மம், கடகம், தனுசு, மீனம் இந்த ராசிகளில் எங்காவது செவ்வாய் இருப்பின் தோஷமில்லை.
பரிகாரங்கள்:
1. அறவழி பரிகாரம்: வருடம் ஒருமுறை புதிய சிவப்பு நிற ஆடையை 3 எண்ணிக்கை ஆதரவற்றவர்களுக்கு தானம் செய்யலாம் அல்லது மாதந்தோரும் 1 கிலோ துவரம் பருப்பை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானமாக தரலாம்
2. ஆன்மீக வழி பரிகாரம்: அங்காரக தோஷம் உள்ளவர்கள் ஜென்ம நட்சத்திரம், செவ்வாய் கிழமை, சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம் இருக்கும் நாளில் முருகன் கோவிலுக்கு சென்று இறைவன் சன்னதியில் அமைதியாக திருப்புகழ், கந்தர் சஷ்டி கவசம், கந்தர் அநுபூதி, கந்தபுராணம், திருமுருகாற்றுப்படை நூல்களை மனமொன்றி மவுனமாக வாசிக்கவும்
3. வேள்வி வழி பரிகாரம் (இறுதியாக மட்டும்)
மேற்கண்ட அறவழி பரிகாரம், ஆன்மீக வழி பரிகாரம் ஆகியவைகளை செய்தும் திருமண ஏற்பாடு மந்தமாக அல்லது தடை ஏற்படின் மட்டும் இல்லத்தில் ஜென்ம நட்சத்திரம் அன்று காலையில் நவக்கிரக ஹோமம் செய்யலாம்.
27.7.2009
Contact Time IST : 13:30 TO 20:00
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Cell : 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email : prohithar@yahoo.com,Prohithar@gmail.com
Web : http://www.prohithar.com