இராசிப்பிரமாணம்
அடிப்படையில் தான் ஒருவருக்கு சனி(குரு) எங்கு இருக்கிறது என்பதை துல்லியமாக
கணிக்க முடியும்.
ஒருவர்
பிறந்த சந்திர தீர்காம்ஸ கோணத்தை மையப்புள்ளியாக வைத்து முன் பின் 15 பாகையை ஜன்ம இராசியாகவும், அதுபோல் 180வது பாகையை 7 ம்
இடமாகவும் கணித்தால்தான் மிகதுல்லியமான ஜாதக பலாபலன்களை கணிக்க முடியும்.
இப்படி
கணிக்கும் பொழுது 8ம் இராசி
மண்டலம் உண்மையில் 7ம் இராசியாக
இருக்கும், இரண்டாம்
இராசி மண்டலம் ஜன்ம இராசியாக இருக்கும்....!
இராசி
பிரமாணத்திற்கும், இராசி
மண்டலத்திற்கும் வேறுபாடு தெரியாத சில ஜோதிடர்கள் தவறாக ஜன்ம, பாத, அர்தாஷ்டம, அஷ்டம சனி விலகியதாக(அல்லது துவங்கியதாக) கணித்து அதை
"சனிப்பெயர்ச்சி" "குரு பெயர்ச்சி" தலைப்புகளில் புத்தகமாக்கி
வெளியிடுகிறார்கள் என்பது வருத்தமான விஷயம்.
பாலு சரவண
சர்மா
ஸ்ரீதணிகை
பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com