வரவேற்பு என்பது திருமணம் முடிந்த பிறகு செய்வதுதான் நல்லது, ஏனெனில் இந்திய பண்பாட்டில் மணமக்கள் திருமணத்திற்கு பின்னர்தான் தம்பதி என்கிற உன்னதமான குடும்ப நிலை அடைகின்றனர். அதற்கு முன்னர் அவர்களை வாழ்த்தலாம் ஆனால் இதுபோன்று முன்கூட்டியே தம்பதி என்கிற தகுதிநிலை அளிப்பது சட்டப்படியும், தர்மப்படியும் தவறு.
முறையான திருமணத்திற்கு முன்னர் (தாலிகட்டும் முன்னர்) வரை எந்த பெண்னும், ஆணும் பதிவு திருமணம் செய்ய துணிவார்களா? அவர்களின் பெற்றோர்கள் தான் இதற்கு (பதிவு திருமணம்) உடன்படுவார்களா? (காதல் திருமண நிலைப்பாடு வேறு அதை பெரியவர்கள் ஒப்புதலுடன் நடைபெறும் இதனுடன் ஒப்பிடஇயலாது)
வரவேற்பு நிகழ்சியில் கலந்துக்கொள்வது என்பது வருகைப்பதிவேட்டில் கையழுத்து இடுவது போன்றது, நீண்ட வரிசையில் நின்று அன்பளிப்பை மணமக்கள் கையில்தந்து, கையை குலுக்கிவிட்டு ஒளிப்படத்தில் (Video) முகத்தை காட்டினால் திருமணத்திற்கு வருகை தந்தது பதிவாகிவிடும் என்று மனநிறைவை ஏற்படுத்திக்கொண்டு உணவுக்கூடம் சென்று பாதியில் உணவு உட்கொண்டிருப்பவரை எழுப்பும் வகையில் அவர் பின்னால் நின்று அவரையும், நம்மையும் தர்மசங்கடப்படுத்தி சாப்பாட்டுப்போட்டியில் பங்கேற்பதுதான் தற்கால 'வரவேற்பு' நிகழ்ச்சி !
வயதானவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து மணம்விட்டு பேசி ஆறுதல் அடைய இயலாதளவு காதைசெவிடாக்கும் இசைக்கச்சேரியின் ஒலிஅளவு! (குறிப்பு : இசை ஒரு கலை அது மணிதமனதிற்கு இதமான ஒரு தேவைதான் ஆனால் அது இம்சையாக இருக்ககூடது என்பது தான் என் எண்ணம்) இதனால் திருமணம் ஆகாமல் உள்ளவர்களுக்கு உறவினர்களுடன் பேசி வரன் தேட முடியவில்லை. மண்டபத்தை விட்டு வெளியில் வந்தால் போதும் என்று உள்ளது
வேலக்கு போகிறவர்களுக்கு வசதி என்பதுதான் இதில் உள்ள ஒரே சாதகம் அன்றி வேறு எந்த நோக்கமும் இல்லை.
முன்பெல்லாம் பெட்ரோமாஸ் விளக்கு ஒளியில் மணமகள் அல்லது மணமகன் சிறு குழந்தைகளுடன் சூழ மெதுவாக 'காரீல்' கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலம் வர பெண்கள் கலாசார பட்டாடை உடுத்தி, இளம் கண்னியர் பாவாடை, தாவனி அனிந்து, நகைகள் மின்ன அழகுற ஒய்யாரமாக பின்னால் வரிசை தட்டுகள் ஏந்தி வருவதுதான் முன்நாள் இரவு நிகழ்ச்சியாக இருந்தது ஆனால் 'வரவேற்பு' கலாசாரத்திற்கு பின்னர் 'அழைப்பு' ஊர்வலம் முற்றிலுமாக மறைந்துக்கொண்டு வருகிறது
இந்நிலையில் இனிமேல் மண்டபத்தை இரவு 12மணி முதல் மறுஇரவு 12 மணிவரை வாடகைக்கு எடுத்து காலையில் 9 மணி அளவில் திருமணமும் அன்றே மாலை வரவேற்பு நிகழ்சியும் வைத்துக்கொள்ளலாம்
மாலையில் திருமணம் செய்வதும் (இரவு முகூர்த்தம் ) தற்பொழுது நடைமுறையில் உள்ளது இதைகூட கடைபிடிக்கலாம் இதனால்
மண்டப செலவில் மாற்றம் இருக்காது
வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும்
வரவேற்பில் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் முழுமையாகும்
சட்டப்படியும், பண்பாட்டின்படியும் சரியானதாகும்
வருபவர்கள் மஞ்சள் அரிசி(அட்சதை)யால் மனமாற வாழ்த்தலாம்
தாலி கட்டாதவரை ஒருத்தி மணப்பெண் என்பதும் தாலிகட்டிய உடனே அவளை மனைவி என்பதும் இயல்பான தற்பொழுதைய சமுதாய நிலை
தாலிகட்டும் முன்னர் ஏற்படும் பிரச்சனையை அனுகும் விதத்திலும் தாலிகட்டிய மறுவினாடி ஏற்படும் பிரச்சனையை அணுகும் விதத்திலும் சட்டபூர்வ, சமூக நிலையிலும் நிச்சயம் மிகப்பெரிய வேறுபாடு உள்ளதை யாரும் மறுக்கமுடியாத சூழலில் தாலிகட்டும் முன்னர் ' வரவேற்பு' என்பது பொருத்தமற்ற ஒன்று என்பதே எனது கருத்து
இதில் மாற்றம் தேவை !
இது விடயம் தங்களின் மேலான ஆக்கபூர்வமான மற்றும் மாற்று கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது !
பாலு. சரவண சர்மா
15 சூலை 2007
மின்னஞ்சல் : prohithar@yahoo.com