Pages

Sunday, May 04, 2014

சனி கோள் எதிர்நிலை மற்றும் புவி அன்மை நிலை 10.5.2014 - Saturn Opposition and Near earth Approach

சனி கோள் எதிர்நிலை மற்றும் புவி அன்மை நிலை 10.5.2014 
Saturn Opposition and Near earth Approach 



Tambaram Astronomy Club - Saturn Oppsition - 10.9.2014
10.5.2014 அன்று சூரியன், பூமி, சனி ஆகிய மூன்றும் தீர்காம்ஸ அடிப்படையில் வானில் நேர்கோட்டில் வருகிறது இதை சனி “எதிர்நிலை” (Opposition) என்கிறோம்
வருடம் தோறும் வானில் இத்தகைய நிகழ்வு ஏற்படினும் 10.5.2014 அன்று நிகழும் எதிர்நிலை மிகஅரிய ஒன்றாகும்.

சூரியனை கோள்கள் நீள்வட்ட பாதையில் சுற்றும் பொழுது சூரிய மையத்தில் இருந்து தொலைவு நிலை(aphelion) மற்றும் அன்மை நிலை (perihelion)ஏற்படும். அன்மை நிலையில் கிரகங்கள் தோற்றத்தில் சற்று பெரியதாகவும், ஒளி கூடியும் இருக்கும். தொலைவு நிலையில் சிறியதாக தோன்றும்

10.5.2014 அன்று பூமிக்கு எதிர்நிலையில் மற்றும் அன்மை நிலையிலும் (8.8997 வானியல் அலகு தொலைவில்) சனி கோள் வருவதால் சனி கோள் வழக்கத்தை காட்டிலும் பெரியதாக 18".6 கோண அளவில்(angular diameter) தோன்றும், மேலும் சனியின் அழகிய வளையங்கள் 42".3 கோண அளவு விட்டமும்  +21°.7 பாகை சாய்வு (Tilt)நிலையிலும் இருக்கும். சனி வானில் +0.2 தோற்ற ஒளி (apparent magnitude) அலகில் ஒளிரும். புவிமட்ட தோற்ற சாய்வு நிலை (Declination) -15°.3 

எதிர் நிலை என்பது முழுநிலவு(பௌர்னமி -Full Moon) போன்று “முழுசனி” எனகொள்ள வேண்டும்.

இதனை மாதம் முழுவதும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் கிழக்கு திசையில்  வெறும் கண்களாலும், தொலைநோக்கி மூலம் தெளிவாகவும் கண்டு ரசிக்கலாம்.

மீண்டும் இத்தகைய அரிய நிகழ்வை காண 14.8.2022 வரை காத்திருக்க வேண்டும்.

குறிப்பு: ஒரு வானியல் அலகு(Astronomical Unit, AU) என்பது  149,597,870 கி.மி தொலைவாகும் (பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவின் சராசரி அளவு)

http://www.prohithar.com/tac/

http://www.prohithar.com/tac/