பூமி தினம் - இல்லத்தின் பங்கு
பூமி வெப்பமயமாதல் என்பது தொழிற்சாலைகளால் மட்டும் அல்ல இல்லத்தில் இருந்து துவங்குகிறது. இதை கீழ்கண்ட முறைகளால் புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்தலாம் அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமையும்
மின்சாரம் சேமிப்பு
மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் நிலக்கரி எரித்து மின் உற்பத்தி செய்யப்படும் பொழுது வெளியேரும் கரிமலவாயுவினால் புவிவெப்பமடைவதை குறைக்கலாம்
தொலைக்காட்சி பெட்டி
யாரும் பார்க்காமலே வெறுமென இயங்கும் தொலைக்காட்சி பெட்டியை முற்றிலுமாக இயக்கத்தை நிறுத்தலாம்.
தொலைக்கட்டளை (ரிமோட்) மூலம் நிறுத்தினால் தொலக்காட்சி 25% மின்சாரம் எடுத்துக்கொண்டு அமைதியாக உள்ளேயே இயங்கும், எனவே முற்றிலும் அதன் மின் இணைப்பை துண்டிக்கவேண்டும்
கைத்தொலைபேசி மின்னேற்றி (Cellphone Charger)
மின்னேற்றம் இல்லாத பொழுது மின்னேற்றியை முற்றிலும் துண்டிக்கலாம்
மின் நீர் ஏற்றி (well Pump Motor)
வீட்டில் குறிப்பாக மேற்கத்திய மாதிரி கழிவறை களால் மிக அதிகமாக நீர் வீணாகிறது. எனவே இந்திய முறை கழிவறையை பயண்படுத்தி நீர் வீணாவதை தடுக்கலாம். மேலும் இந்திய முறை கழிவறையே மிகவும் சுகாதாரமானது
சரிவர மூடாத குழாய் முடிக்கி(Tap)யால் நீர்வீணாகிறது
தன்னீர் பயண்பாட்டை குறைப்பதன் மூலம் மின்னேற்றியால் ஏற்படும் மின்இழைப்பை தவிர்க்கலாம், நீர் வீணாகமல் தடுக்கலாம், நீர் ஆதாரமும் பாதுகாக்கப்படும்
இரவு விளக்கு (Night Lamp)
இரவில் எரியும் ஜீரோ விளக்கிற்கு பதிலாக திடவடிவ மின்விளக்கு (LED Light) நன்று
அம்மி குழவி (Mixtur)
அவசரமற்ற சூழலில் நேரம் இருக்கும் பொழுதி அம்மி குழவி, ஆட்டுக்கல் பயண்படு்த்தி மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் இதனால் உடலுக்கும் பயற்சி கிடைக்கும், பருமன் நோயினை தடுக்கலாம்
குமிழ் விளக்கு(Bulb)
உலகம் முழுவதும் குமிழ்விளக்கு பயண்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது ஆயினும் நமது நாட்டில் இன்னும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இது அதிக வெப்பத்தை உமிழ்கிறது எனவே குமிழ்விளக்கு பயண்பாடை குறைத்து அதைவிட அதிக ஒளிஉமிழும் அதே நேரத்தில் குறைவான வெப்பத்தை வெளிப்படுத்தும் சுருள் விளக்கு (CFL) பயண்படுத்தலாம்
வெளிச்சம் இருக்கும் பொழுது மின்விளக்குகளை தவிர்க்கலாம், தேவையில்லாமல் இயங்கும் மின்விசிறியை நிறுத்தவும் இதனால் மின்சாரத்தினால் புவி வெப்பமாதலை குறைக்கலாம் இதன் மூலம் நிலக்கரி இருப்பை மேலும் சில நூற்றாண்டுகள் வரை நீட்டிக்கலாம்
குப்பை எரிப்பு
வீடுகளில் மரம், செடியில் இருந்துவிழும் இலைகளை எரிக்காமல் அந்த செடியின் பக்கத்திலேயே குழிதோண்டி இலை, தழைகளை கொட்டுவதன் மூலம் உரமாக மாற்றலாம்
பெட்ரோல்
பக்கத்தில் உள்ள இடங்களுக்கு செல்ல நடந்தோ அல்லது மிதிவண்டியை பயண்படுத்துவதன் மூலம் பெட்ரோல் மூலம் வெளிப்படும் கரிமலவாயுவை குறைக்கலாம் பணமும், நாட்டின் அந்நிய செலாவணியும் மிச்சமாகும் அதைவிட உடலும் உறுதிபெறும்
4 பேர் செல்வதாக இருப்பின் மட்டும் மகிழ்வுஉந்தி(Car) பயண்படுத்தவும்
சமையல் எரிவாயு (Gas)
சமையலை முன்கூட்டி திட்டமிடுவதன் மூலம், காய்கறிகளை முன்தாக துண்டாக்கிக்கொண்டு அனைத்து பொருட்களையும் தயாராக வைத்துக்கொண்டு எரிவாயு அடுப்பை பயண்படுத்தினால் சமையல் எரிவாயு தட்டுப்பாடை சமாளிக்கலாம் உலக வெப்பமயமாதலையம், செலவீனத்தையும் குறைக்கலாம்
நீராவி பாத்திரம் (குக்கர்) பயண்படுத்துவதும் மிகவும் சிக்கனமானது
குளிர்பதனி (Fridge)
பொருட்கள் இல்லாதபொழுது மற்றும் 2 நாட்கள் தொடர்ந்து வீட்டை மூடும் காலத்தில் குளிர்பதனியை நிறுத்தவும்
அறை குளிர்ப்பான்(Room Airconditionor)
பருவசூழல் நன்கு உள்ள காலத்தில் அறை குளிரூட்டியினை தவிர்க்கவும், சரியான அளவு குளிரூட்டியினை பயண்படுத்தவும் அடிக்கடி அதன் பாகங்களை துடைப்பதன் மூலம் மிக அதிக செலவீனத்தை குறைக்கலாம், மின்சாரத்தை சேமிக்கலாம்
நீர் சூடாக்கி (Wate heater)
இல்லங்களில் அதிக மின் பயனீட்டை எடுத்துக்கொள்ளளும் நீர் சூடாக்கி இயந்திரத்திற்கு பதிலாக சூரிய ஒளியில் இயங்கும் நீர்சூடாக்கியை பயண்படுத்தலாம் இதனால் மின்கட்டனம் குறையும், கட்டிட வரைபட விதிகளில் தற்பொழுது கட்டாயம் என்றாலும் நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்துவதில்லை
மேலும் பலவழிகளில் உலக வெப்பமயமாக்கலை தவிர்ப்பதன் மூலம் வருங்கால நம் சந்ததியினர் நலமுடன் வாழ இல்லத்தில் இருந்து இந்த பயணத்தை துவக்குவோம்
பாலு. சரவணன்
இயற்கை ஆர்வலர்
Sunday, March 30, 2008
Subscribe to:
Posts (Atom)