Pages

Thursday, March 05, 2009

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2009 Sani Peyarchi- Saturn Transits 2009


சனிப்பெயர்ச்சி பலன்கள் 2009
Sani Peyarchi- Saturn Transits 2009

 

            சனிப்பெயர்ச்சி திருக்கணித முறைப்படி இவ்வருடம் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி புதன் கிழமை நள்ளிரவு 12:00 மணி (வியாழன் கிழமைஅதிகாலை00:00மணி)அளவில் இந்திய முறைப்படி விரோதி வருடம் ஆவணி மாதம் 24ஆம்தேதி புதன் கிழமை சிம்ம இராசியில் இருந்து கன்னி இராசிக்குள் நுழைகிறார். சனிபகவான் 2009 மற்றும் 2010 ஆண்டுகள் முழுவதும்  கன்னி இராசியில் மட்டும் சஞ்சரிக்கிறார்.

 

            சனிக்கிரகம் கோள்நிலை விவரம் ( நேரம் காலை 5:29 மணி அளவில்) இந்திய மத்திய நேரம்

Geocentric (Sayana) and Sidereal (Nirayana) Longitude of SATURN at 5h 29m IST

 

தேதி   

சாயணம்

நிராயணம்

இராசி

நட்சத்திரம்

09-9-2009

173 54 03.4

149o 54' 15''.4538

சிம்மம்

உத்திரம் முதல் பாதம்

10-9-2009

174 01 30.2

150o 01' 42''.1154

கன்னி

உத்திரம் இரண்டாம் பாதம்

                                  

            ஒரு இராசியில் சனியின் ஆட்சிகாலம் சுமார் இரண்டரை ஆண்டுகளாகும். நவக்கிரகங்களிலையே சனிதான் நீண்ட கால சுற்றுப்பாதை உடையவர் சூரியனை ஒரு சுற்று (12 இராசிகளை) சுற்றிவர சுமார் 30 ஆண்டுகள்(மிக துல்லியமாக 29.46 வருடம்) எடுத்துக்கொள்கிறார். சனிகிரகத்தின்  4 சுற்றுக்கால முடிவு அதாவது 120 ஆண்டுகள்தான் மனிதனின் முழு ஆயுட்காலமாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது, இதனால் சனிக்கிரகத்தை ஆயுட்காரகன் என்றும் கூறுவர்.

 

சனிப்பெயர்ச்சி பலன் கணிப்பு முறை

            சனிக்கிரகம் பெயர்ச்சி அடையும் பலனை ஜென்ம லக்னம், சந்திரன்நின்ற இராசி (சந்திர இலக்னம்) மற்றும் நடப்பு தசா புக்தி, கோசாரம்(நடப்புகோள் நிலை) என்ற 3 நிலைகளின் அடிப்படையில் கணித்தால் தான் முழு பலன் அறிய முடியும், ஆனால் இம்முறையில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பலன்சொல்வது என்பது நடைமுறையில் இயலாததாகும்.  எனவே இங்கு சந்திரன் நின்ற இராசிக்கும், கூடுதல் சிறப்பு கவனத்துடன் நட்சத்திரங்களுக்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளன.

 

சனி பார்வை, சனி நிலையால் பலன்

            சந்திர இலக்னத்திற்கு 3, 7, 11 ஆம் இடங்களில் சனி இருப்பின் நன்மை

சந்திர இலக்னத்திற்கு 12, 1, 2 ஆம் இடங்களில் சனி இருப்பின் ஏழரை ஆண்டுகள் கடினமான காலம்

சந்திர இலக்னத்திற்கு 4,8 ஆம் இடங்களில் சனி இருப்பின் தீமை

சந்திர இலக்னத்திற்கு 5,7,9,10 ஆம் இடங்களில் சனி இருப்பின் நன்மை தீமை கலந்தும்

 

மீனம்

7

மேஷம்

6

ரிஷபம்

5

மிதுன

4

கும்ப

8

இராசி நிலை

10-9-2009

காலை 5:30

கடக

3

மகர

9

சிம்ம

2

தனூர்

10

விருச்சி

11

துலா

12

கன்னி

சனி

  

            ஒருவருக்கு வாழ்நாளில் சனி கிரக சுற்று(பர்யாயம்) முதல் முறையாக, இரண்டாம் முறையாக (25 வயதுக்கு மேல்) மற்றும் மூன்றாம் முறையாக 50 வயதுக்கு மேல் வரும் பொழுது அதன் தாக்கம் வேறுபடும்
 
மேலும் அறிய

--
Learn Simple Tamil Email Typing : http://www.prohithar.com/tamiltype

Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Cell : 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email : prohithar@yahoo.com,Prohithar@gmail.com
Web : http://www.prohithar.com