Pages

Wednesday, May 06, 2009

கிணறு மூடுதல் பூஜை

வீட்டின் உயிர்நாடியாக உள்ள நீர்ஆதாரமான கிணற்றினை மூடுவது என்பது மிகவும் கடினமான முடிவாகும். வேறுவழியின்றி நியாயமான காரணங்களுக்காக மூடுவது  என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

            வாஸ்து காரணங்களுக்காக மூடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும் அப்படியை மூடுவதாக இருப்பின் மற்றொரு கிணற்றை தோண்டியபின் பழைய கிணற்றை மூடவும்

            கிணறும், பூஜை அறையும் வீட்டின் இரு கண்கள் போன்றது எனவே புதிய கிணற்றுக்கு பூஜை செய்து மண் எடுத்தபிறகு அந்த மண்ணை கொண்டு பழைய கிணற்றை முறைப்படி பூஜை செய்து மூடவும்

ஆழ்துளை கிணற்றை பாரம்பரிய கிணற்றுடன் ஒப்பிடவேண்டாம்! இட நெருக்கடி காரணத்தால் நகரங்களில் கிணற்றை மூடிவிட்டு ஆழ்துளை கிணற்றை அமைத்து வசிப்பிடத்தினை பெரிதாக்குகிறார்கள் இது நிலத்தின் மதிப்பை அறிந்து செய்வதாக கூறி கிணற்றின் மதிப்பை குறைப்பதாகும். 

நிலநடுக்கத்திற்கு பின்னர்

            ஆழ்துளைகிணறு அமைப்பது எளிதாக தோன்றினாலும், நிலநடுக்கம், நிலஅதிர்வு நிகழ்ந்த உடன் ஆழ்துளை கிணறு முற்றிலும் செயலற்று அல்லது மிகவும் நீர்வரத்து குறைந்தும் போகும் என்பதுதான் உண்மை. இது தான் குஜராத்தில் நடந்தது.

            பாரம்பரிய கிணற்றின் பல நீர்ஊற்று வழிகளில் சிலவற்றில் அடைப்பு ஏற்பட்டாலும் பெரும்பாலும் தண்ணீர் வரத்து குறைவதில்லை என்பதுதான் சிறப்பானதாகும்.

            ஆழ்துளை கிணற்றைவிட பாரம்பரிய கிணற்றின் பயன்பாடுகாலம் மிகவும் அதிகம். நீர்வற்றுவது என்கிற காரணத்திற்காக மூடவேண்டாம் மாறாக மழைக்காலங்களில் "மழைநீர் சேகரிப்பு"  கிணறாக பாவித்தால் மிகவும் பலனுள்ளதாகும்.

 கிணறு மூடுதல் பூஜை

             முன்னோர்கள் காலம்தொட்டு வீட்டின் கிணறு கங்கைக்கு ஈடாக மிகவும் புணிதமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட கிணற்றை மூடும் பொழுது வழிபாடு செய்வது என்பது அதற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.

இலக்னம்:
விட்டின் உரிமையாளர் மற்றும் அவரின் மணைவி நட்சத்திரத்திற்கு உகந்த ஒருநாளில் அஷ்டம சுத்தியுடன் இருக்கும் இலக்னம், ரிஷப, கடக, மகர, மீனம்

நட்சத்திரம்:     
ரோகினி, மிருகசீருடம், பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திராடம், சதையம், உத்திரட்டாதி, ரேவதி

திதி:                
வளர்பிறை திதி துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரியோதசி

கிழமை:          
திங்கள், புதன், வியாழன், வெள்ளி

கிணற்றை முடும்முன்
வீட்டில் உள்ள பிள்ளையாருக்கு வழிபாடு நடத்திய பின்னர்
வெள்ளி, தங்கம், சில்லரைகாசுகள், கங்கைநீர். மஞ்சள்தூள், குங்குமம், வெற்றிலை, பாக்கு,  அருகன்புல், துளசி, வில்வம், தர்பைபுல்,கோமயம் ஆகிய வற்றை கிணற்றில் போடவும்
கிணறு மற்றும் சூரியனுக்கு தீபாராதனை காட்டிய பின்னர் ஒருபிடி மண்ணை கிணற்றில் போட்டு மூடும் பணியை  துவக்கவும்.
அன்றைய தினம் காலை பசுவிற்கு கோதுமை தவிடு 2கிலோ மற்றும் வெல்லம் 250 கிராம் கலந்து தானம் செய்யவும். மேலும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒருவேளை உணவிற்கு உதவிடவும்.

கிணறு மூடவது (தண்ணீர் கிடைக்காமல் தடுப்பது நோக்கில்) பாவமாக சொல்லப்பட்டுள்ளது

  • நம்வீட்டில் நாமே மாற்று ஏற்பாடாக கிணற்றை மூடுவதை பாவம் இல்லை
  • நன்றி கடனாக ஏழைகளுக்கு, பசுவிற்கு தானம் செய்து மூடலாம் இது பாவம் அல்ல(மாற்று கிணறு-ஆழ்துளை கிணறு உள்ள நிலையில் மட்டும்)
  • கிணறு நோண்டும் பொழுது பெருங்கல், எலும்புகள், புதையல் வந்தால் அதை பூமி சாந்தி செய்து மூடவேண்டும் என்று ஆயாதி நூல் கூறுகிறது.
  • தர்மப்படி மாற்று கிணறு இருக்கும் நிலையில், புதிய கிணறு தோண்டும் முன் பழைய கிணறு மூடுவது சரிதான்.

ஆக்கம் 2 ஏப்ரல் 2009

மேலும் விபரம் www.prohithar.com