ஆண் வாரிசு இல்லாத குடும்பங்களில் மற்றும் பங்காளிகள் யாரும் இல்லாத சூழலில் பெண்கள் அந்திம கர்மாக்களை (கொள்ளி வைத்து இறுதி சடங்கு) செய்வதற்கு தடை ஏதும் இல்லை
இந்து மதத்தில் ஆண் பெண் எனும் பாகுபாடு இல்லை என்கிறது சாஸ்திரங்கள். ஆண் வாரிசு இல்லை எனில் அங்கு பெண்ணுக்குத்தான் அதிக உரிமை தரப்பட்டுள்ளது.
பெண்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் தரவும் எந்த தடையும் இல்லை. 'கர்மா விஷயங்களில் யாருக்கு உரிமை என்பதையும் யஜூர்வேத ஆபஸ்தம்பம் தெளிவுபடுத்தியுள்ளது
தர்மசாஸ்திர நூலான வைத்யதாத தீக்ஷியம் நூலில் - சிரார்தகாண்டம் - பூர்வபாகம் - கர்தா வரிசை எனும் தலைப்பில் மிகவிளக்கமாக ஸ்மருதிகளின் மேற்கோளில் பெண்களுக்கு உரிமை உண்டு என்பதை தெளிவாக எடுத்துக்கூறுகிறது
ஆண் வாரிசு இருந்து பெண்கள் செய்வது உகந்ததல்ல
பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
9840369677
prohithar@gmail.com