Pages

Showing posts with label Maha Maham. Show all posts
Showing posts with label Maha Maham. Show all posts

Friday, July 10, 2015

சந்திரனுக்கு கிரக அஸ்தங்க தோஷம் உண்டா? கிரக அஸ்தங்கம் என்றால் என்ன?

Tambaram Astrologer, Balu Saravana Sharma, Sri Thanigai Panchangam
புத, சுக், செ, குரு, சனி மட்டுமல்ல சந்திரனுக்கும் கிரக அஸ்தங்கம் உண்டு. இது தொடர்பாக மூலநூலான சூரிய சித்தாந்தத்தில் 12 மற்றும் 13 அத்யாயம் கூறுவதை இங்கு காணலாம்.
கிரக அஸ்தங்கம் - உதயம் & அஸ்தமனம் (Helical Rising and Setting)
சூரிய மண்டலத்தில் உள்ள எந்த ஒரு கிரகமும், குறுங்கோளும், வின்கல்லும், வால்நட்சத்திரமும் சூரியனுக்கு அருகில் குறிப்பிட்ட கோணஅளவு நெருங்கும் பொழுது
அது சூரியனின் பிரகாசத்தால் மணித கண்களுக்கு தெரிவதில்லை இதையே அஸ்தங்கம் என்று அழைக்கிறோம்.
புதன்(12, & 14), சுக்கிரன்(8), செவ்வாய்( 17), குரு (11), சனி (15) அடைப்பில் குறிப்பிட்ட நிஜ கோண அளவில் அருகில் வரும் பொழுது அது கண்களுக்கு புலப்படுவதில்லை
ஆயினும் (நல்ல பார்வையுடயவர்களுக்கு இது வேறுபடும்). நவீன உலகில் புற ஊதா கதிர் தொலைநோக்கி(ultraviolet telescope), ரேடியோ தொலை நோக்கி (Radio telescope), மூலமாக அதன் இருப்பிடத்தை அறிய முடியும்.
கிரக யுத்தம், (War) Conjenction
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் ஓன்றுக்கொன்று அருகில் வரும் பொழுது நிகழ்வது கிரக யுத்தம்
கிரக சமாகமம் (meeting)
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் சந்திரனுடன் இணைவது சமாகமம் ஆகும் (சூரியனுடன் இணைந்தால் அஸ்தங்கம்)
சரி சந்திரனுக்கு அஸ்தங்கம் உண்டா என்றால் அதுதான் அமாவாசை, (சூரிய ஒளியால் ஒரு கிரகம் மறைக்கப்படுவது அஸ்தங்கம் : சூ.சித் - அத்: 12)
சந்திர அஸ்தங்கம் குறித்த பலநூல்களிலும் தகவல் உள்ளது அதில் சந்திரன் ஒரு திதி பிரமாணம்(12 பாகை) அளவிற்கு அஸ்தங்க தோஷம் கொண்டது,
அதாகில் அமாவாசைக்கு முன்னர் தேய்பிறை சதுர்தசி முதல் அமாவாசைக்கு பின்னர் சுக்ல பிரதமை வரை அஸ்தங்க தோஷம் உள்ளது. எனவேதான் கிருஷ்ண சதுர்தசி, அமாவாசை, சுக்ல பிரதமையும் சுபகாரியம் செய்ய விலக்கப்பட்டநாளாகும்.(இது ஜோதிஷ நூல்படி)
சூரிய கிரகணம் (Solar Eclipse) அஸ்தங்கமா?
சூரிய பிரகாசத்தினால் கிரகம் மறைந்தால் அது அஸ்தங்கம், சூரியனே மறைக்கப்பட்டால் அதுவும் அஸ்தங்கம்தான் ஆயினும் பூரண சூரியகிரகணம் மட்டுமே அஸ்தங்கம் ஆகும்.
குறிப்பு: எனவேதான் கிரகண மாதம் சுபம் விலக்கப்படுகிறது, கிரகணம் அன்று சிரார்தம் கூட கிரகணம் முடிந்த பின்னர் செய்யப்படுகிறது
கிரக கடவு (Transit)அஸ்தங்கமா?
புதன், சுக்கிரன் அஸ்தங்ககாலத்தில் சூரிய விட்டத்தை கடப்பது அஸ்தங்கம் மட்டுமல்ல இதுவும் ஒருவித கிரக கிரகணமாகவும் (Planet Eclipse) கொள்ளவும். இதை கடவு (Planet Transit) என்று அழைக்கிறார்கள்
அஸ்தங்கம் கிரகணம் இடையே என்ன வேறுபாடு Combustion & Eclipse
அஸ்தங்கம் என்பது பிரகாசமான சூரிய ஒளியால் ஒரு வானியல் பொருள்(கோள், நிலவு, வின்கல்) கண்களுக்கு புலப்படாமல் போவதாகும்.
கிரகணம் என்பது சூரியனை சந்திரன் மறைப்பது அல்லது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி நேர்கோட்டில் வருகைதந்து மறைப்பதாகும்.
இந்த விதி மற்ற நிலவுடன் கூடிய கிரகங்களுக்கும் பொருந்தும்.
வானியல் மறைவு (Occultation)
ஒரு வானியல் பொருளை மற்றொரு வானியல் பொருள் மறைத்தலாகும்.
உதாரணம் நட்சத்திரம், அல்லது ஒரு கோளை நிலவு மறைப்பதாகும்
பஞ்சாங்கத்தி்ல் அமாவாசை அன்று நேத்திரன்-ஜீவன் குருடு எனும் நிலையில் "0" என்று குறிப்படிப்பட்டிருக்கும் சந்திரனின் மீது விழும் ஒளியின் அளவு, மற்றும் சூரிய நிலையே நேத்திர-ஜீவன்.
;நேத்திரம், ஜீவன் இல்லை எனெனில் அன்று திருமணம் செய்ய உகந்தநாளல்ல (அதாகில் சந்திரன் சூரிய சேர்கையால் அஸ்தங்கம் தோஷம் இருப்பதால்)
பாலு சரவண சர்மா, ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், Tambaram Astrologer
www.prohithar.com
www.thanigaipanchangam.com

எத்தனை குரு பெயர்ச்சிகள்......!

Tambaram Astrologer Balu saravanan
அயனாம்ஸம் நீக்கி (சாயனம்), அயனாம்ஸம் சேர்த்து நிராயணம், இதன் உட்பிரிவான வாக்கியம், திருக்கணிதம், சூரிய சித்தாந்தம், இவைகளின் உட்பிரிவுகள் சுமார் 20க்கும் மேல் இப்படி 3 டஜன் குரு பெயர்ச்சிகள் இதை எல்லாம் கொண்டாட கோவில்கள் துவக்கினால்....!

சித்தாந்தங்களில் குரு தினமும் பெயர்ச்சி அடைகிறார். இந்திய இராசி மண்டலங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அபஜித் நட்சத்திரம் நீக்கம் ...இன்னும் பல திருத்தங்களை நமது வானவியல் அறிஞர்கள் செய்துள்ளனர்....

நமது பண்பாட்டில் தர்மமே பிரதானமாக கொண்டு வழிபாடு செய்யப்பட்டது அன்றி பொருள் முதலாக (materialism) கொண்டு அல்ல.

எந்த ஒரு வழிபாடும் தர்மத்திற்கு விரோதமாக வருவாய் மட்டும் கருத்தில் கொண்டு முன்னிலைப் படுத்தபடுமாயின் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

வழிபாடு கீண்கண்ட வகையில் இருத்தல் வேண்டும்
உங்கள் வாயால் இறைவனை துதித்தல்
உங்களை கைகளால் இறைவனை தினமும் வணங்கி தானம் செய்தல்
உங்கள் கண்களால் இறைவனின் முகத்தை தீபத்தால் காணுதல்
உங்கள் காதுகளால் இறைவனின் திருநாமம் அல்லது அர்ச்சனையை கேட்டல்
உங்கள் மனதால் எப்பொழுதும் தர்மத்தை சிந்தித்தல்
இதுவே இந்து மதத்தில் ஆணிவேர்
குரு பெயர்ச்சிக்கு நீங்கள் என்ன தானம் செய்தீர்கள் ? பலன் அடைந்தவர்கள் யார்?

உடை(மானம் காத்தல்), உணவு(பசியாற்றல்), நல்உறக்கம் (உறங்க போர்வை , தலையணை தருதல்),
அறிவுக்கு நல் புத்தகங்களை தானம் செய்தல்

தர்மம் இல்லாத வழிபாடு பலன் தராது என்கிறது உபநிஷதம்.
10.7.2015

http://www.thanigaipanchangam.com/almanac/tambaramastrologer.php

Saturday, March 14, 2015

Mahamagam - Mahamaham 2016 - Kumbakonam


மகா மகம், மாசி மகம் 22.2.2016 கும்பகோணம்
Maha Maham - 2016 Special Website launched
சிறப்பு இணைய தளம் வெளியிடப்பட்டது
http://thanigaipanchangam.com/mahamaham2016/index.php

Maha Maham 2016 Kumbakonam மகாமகம் மஹாமகம் மாசிமகம்


Kumbakonam 2016 Mahamaham - 22.2.2016

மகாமகம் குறித்த விரிவான தகவல்களுடன் இந்த இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் சுற்றியுள்ள கோவில்கள் குறித்தும் இணையத்தில் தகவல் தரப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் தகவல்களுடன் உடனுக்குடன் மேம்படுத்தப்படும்
அவசர தொடர்புகள், இரயில் அட்டவணை, பேருந்து போக்குவரத்து, காவல் துறை அறிக்கை இன்னும் பல முக்கியமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது

Balu Saravana Sarma
www.prohithar.com
www.thanigaipanchangam.com
Tambaram Astrologer - Prohithar- Panchangam Ganitham