Pages

Showing posts with label புரோகிதர். Show all posts
Showing posts with label புரோகிதர். Show all posts

Saturday, August 24, 2019

கிருஷ்ணபட்ச ஸ்ரீராம நவமி

தேய்பிறையில் நவமி திதியுடன், ராம ஜனன புணர்பூசம் நட்சத்திரம், ராம ஜனன கடக லக்னம் என நற்காரணிகளுடன் வரும் 23.9.2019 திங்கள் அன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் மாலை 6:30 மணிக்கு முன்னர் துளசி மாலை சாற்றி ஸ்ரீராமரை வழிபட்டு அருள் பெறுங்கள்

குடும்பத்தில் ஒற்றுமை, திருமண வாழ்வில் அமைதி ஏற்பட சுந்தரகாண்டம் படித்தல் நன்று

www.prohithar.com
Tambaram Astrologer, Pandit, Purohit, prohithar, progithar
9840369677

Friday, December 01, 2017

மார்கழி மாத திரியோதசி திதி

http://prohithar.com/porur-chennai-prohithar-astrologer.html#11
ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதத்தில் தேய்பிறை திரியோதசி திதி இல்லை.
கார்திகை, தை மாதங்களில் திதியில் சங்கரமன தோஷம் உள்ளது.
பின்னர் வரும் திதி கிராக்கியமானது எனும் விதிப்படியும்,
அதேமாத திதியின் வியாப்தியில் இருப்பதும் விசேஷம் என்பதால்
தை மாதம் முதல் நாள் (14.1.2018) சனிக்கிழமை அன்று பகல் 1:46 மணிக்கு மகர ரவி என்பதால் அதற்கு முன்னர் சிரார்தம் (தெவசம்) செய்வது நன்று
Balu Saravana Sarma
Chennai Prohithar & Chennai Astrologer
www.prohithar.com

chennai prohithar chennai astrologer Balu saravanan

Friday, July 10, 2015

சந்திரனுக்கு கிரக அஸ்தங்க தோஷம் உண்டா? கிரக அஸ்தங்கம் என்றால் என்ன?

Tambaram Astrologer, Balu Saravana Sharma, Sri Thanigai Panchangam
புத, சுக், செ, குரு, சனி மட்டுமல்ல சந்திரனுக்கும் கிரக அஸ்தங்கம் உண்டு. இது தொடர்பாக மூலநூலான சூரிய சித்தாந்தத்தில் 12 மற்றும் 13 அத்யாயம் கூறுவதை இங்கு காணலாம்.
கிரக அஸ்தங்கம் - உதயம் & அஸ்தமனம் (Helical Rising and Setting)
சூரிய மண்டலத்தில் உள்ள எந்த ஒரு கிரகமும், குறுங்கோளும், வின்கல்லும், வால்நட்சத்திரமும் சூரியனுக்கு அருகில் குறிப்பிட்ட கோணஅளவு நெருங்கும் பொழுது
அது சூரியனின் பிரகாசத்தால் மணித கண்களுக்கு தெரிவதில்லை இதையே அஸ்தங்கம் என்று அழைக்கிறோம்.
புதன்(12, & 14), சுக்கிரன்(8), செவ்வாய்( 17), குரு (11), சனி (15) அடைப்பில் குறிப்பிட்ட நிஜ கோண அளவில் அருகில் வரும் பொழுது அது கண்களுக்கு புலப்படுவதில்லை
ஆயினும் (நல்ல பார்வையுடயவர்களுக்கு இது வேறுபடும்). நவீன உலகில் புற ஊதா கதிர் தொலைநோக்கி(ultraviolet telescope), ரேடியோ தொலை நோக்கி (Radio telescope), மூலமாக அதன் இருப்பிடத்தை அறிய முடியும்.
கிரக யுத்தம், (War) Conjenction
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் ஓன்றுக்கொன்று அருகில் வரும் பொழுது நிகழ்வது கிரக யுத்தம்
கிரக சமாகமம் (meeting)
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் சந்திரனுடன் இணைவது சமாகமம் ஆகும் (சூரியனுடன் இணைந்தால் அஸ்தங்கம்)
சரி சந்திரனுக்கு அஸ்தங்கம் உண்டா என்றால் அதுதான் அமாவாசை, (சூரிய ஒளியால் ஒரு கிரகம் மறைக்கப்படுவது அஸ்தங்கம் : சூ.சித் - அத்: 12)
சந்திர அஸ்தங்கம் குறித்த பலநூல்களிலும் தகவல் உள்ளது அதில் சந்திரன் ஒரு திதி பிரமாணம்(12 பாகை) அளவிற்கு அஸ்தங்க தோஷம் கொண்டது,
அதாகில் அமாவாசைக்கு முன்னர் தேய்பிறை சதுர்தசி முதல் அமாவாசைக்கு பின்னர் சுக்ல பிரதமை வரை அஸ்தங்க தோஷம் உள்ளது. எனவேதான் கிருஷ்ண சதுர்தசி, அமாவாசை, சுக்ல பிரதமையும் சுபகாரியம் செய்ய விலக்கப்பட்டநாளாகும்.(இது ஜோதிஷ நூல்படி)
சூரிய கிரகணம் (Solar Eclipse) அஸ்தங்கமா?
சூரிய பிரகாசத்தினால் கிரகம் மறைந்தால் அது அஸ்தங்கம், சூரியனே மறைக்கப்பட்டால் அதுவும் அஸ்தங்கம்தான் ஆயினும் பூரண சூரியகிரகணம் மட்டுமே அஸ்தங்கம் ஆகும்.
குறிப்பு: எனவேதான் கிரகண மாதம் சுபம் விலக்கப்படுகிறது, கிரகணம் அன்று சிரார்தம் கூட கிரகணம் முடிந்த பின்னர் செய்யப்படுகிறது
கிரக கடவு (Transit)அஸ்தங்கமா?
புதன், சுக்கிரன் அஸ்தங்ககாலத்தில் சூரிய விட்டத்தை கடப்பது அஸ்தங்கம் மட்டுமல்ல இதுவும் ஒருவித கிரக கிரகணமாகவும் (Planet Eclipse) கொள்ளவும். இதை கடவு (Planet Transit) என்று அழைக்கிறார்கள்
அஸ்தங்கம் கிரகணம் இடையே என்ன வேறுபாடு Combustion & Eclipse
அஸ்தங்கம் என்பது பிரகாசமான சூரிய ஒளியால் ஒரு வானியல் பொருள்(கோள், நிலவு, வின்கல்) கண்களுக்கு புலப்படாமல் போவதாகும்.
கிரகணம் என்பது சூரியனை சந்திரன் மறைப்பது அல்லது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி நேர்கோட்டில் வருகைதந்து மறைப்பதாகும்.
இந்த விதி மற்ற நிலவுடன் கூடிய கிரகங்களுக்கும் பொருந்தும்.
வானியல் மறைவு (Occultation)
ஒரு வானியல் பொருளை மற்றொரு வானியல் பொருள் மறைத்தலாகும்.
உதாரணம் நட்சத்திரம், அல்லது ஒரு கோளை நிலவு மறைப்பதாகும்
பஞ்சாங்கத்தி்ல் அமாவாசை அன்று நேத்திரன்-ஜீவன் குருடு எனும் நிலையில் "0" என்று குறிப்படிப்பட்டிருக்கும் சந்திரனின் மீது விழும் ஒளியின் அளவு, மற்றும் சூரிய நிலையே நேத்திர-ஜீவன்.
;நேத்திரம், ஜீவன் இல்லை எனெனில் அன்று திருமணம் செய்ய உகந்தநாளல்ல (அதாகில் சந்திரன் சூரிய சேர்கையால் அஸ்தங்கம் தோஷம் இருப்பதால்)
பாலு சரவண சர்மா, ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், Tambaram Astrologer
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Tuesday, June 16, 2015

நிஜமான வாஸ்து பூஜை நாட்கள்

நிஜமான வாஸ்து பூஜை நாட்கள்
http://www.prohithar.com/images/true-sayana-vasthu-dates.jpg
Tambaram Astrologer - Vastu Dates 2015, 2015
குறிப்பு: வாஸ்து சாஸ்திரம் சூரியனின் நிஜமான அயன அடிப்படையிலானது. சூரியன் ஓளி, நிழல் விழும் திசை மற்றும் கோணத்தில் அடிப்படையில் தான் சங்குஸ்தாபனம்செய்யப்பட்டு கட்டிட பணிகள் துவக்க வேண்டும் என்பது மூலவாஸ்து நூல்களில் மிக தெளிவாககுறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வாஸ்து பூஜை சூரியனின் அயன அடிப்படையில் தான் செய்யவேண்டும்.
விரிவாக அறிய
பாலு சரவண சர்மா
Tambaram Astrologer -Prohithar
தாம்பரம் ஜோதிடர் - புரோகிதர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Thursday, February 12, 2015

திருமண முன்னேற்பாடு கையேடு

திருமணத்திற்கு முன்னதாக செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த விரிவான விளக்கங்கள் இந்த இணையத்தில் தரப்பட்டுள்ளது http://prohithar.com/web_kalyanam/index.php

திருமண முன்னேற்பாடு Tambaram Astrologer
நிச்சிய தாம்பூலம், ஒப்பு தாம்பூலம், பந்தக்கால், திருமண முன்னேற்பாடு, மணமக்களுக்கு அறிவுரை, நடத்தை நெறிகள், இந்து திருமண சட்டம், திருமண பதிவு, பொருள் பட்டியல், மாதிரி படிவங்கள், குலதெய்வ வழிபாடு, இன்னும் பல தகவல்களுடன்

பாலு சரவண சர்மா
தாம்பரம் புரோகிதர் - ஜோதிடர்
98403 69677

Friday, October 03, 2014

விஜயதசமி - வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் வைபவம் இன்று (3.10.2014 வெள்ளிக்கிழமை) தாம்பரம் ஸ்ரீரமண வித்யாலயா பள்ளியில் நடந்தது. புதியதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆசிரியை அவர்கள் சரஸ்வதி தியானம் செய்து பின் குழந்தைகளின் கையை பிடித்து நெல்லில் "அ" எனும் எழுத்தை எழுதி கல்வியை துவக்கினார்கள்.

விஜயதசமி - வித்யாரம்பம்

Monday, August 11, 2014

ஆவணி மாத சுபநாள் - உகந்த நாள் - விளக்கம்

விநாயகர் சதுர்த்தி வழிபாடு நேரம்
கோகுலாஷ்டமி -  விளக்கம்
அஷ்டம சுத்தியான லக்னம்
தளம், விடு துவங்க நல்ல நாள் நேரம்
வாஸ்து பூஜை நேரம்
சாந்தி முகூர்த்த நேரம்
சீமந்த நாள் - நேரம்
மாலை நேர சுபதினங்கள்
வானியல் தகவல்
மேலும் .......அறிய இணைய தளத்தை காணவும்

http://prohithar.com/jaya/aavani_jaya.pdf

Sri Thanigai Panchangam
http://www.thanigaipanchangam.com

Tuesday, July 08, 2014

வியதீபாதம் - வைதிருதி யோகம்

வியதீபாதம் - வைதிருதி யோகம் - ஓர் வானவியல் மற்றும் ஜோதிட விளக்கம் - இணைப்பை காணவும்
http://www.thanigaipanchangam.com/pdf/Mahavithipadam_explanation.pdf
www.prohithar.com
www.thanigaipanchangam.com
தனூர் மஹா வியதீபாதம் - வைதிருதி யோகம்


தனூர் மஹா வியதீபாதம், வியதீபாத சிரார்தம், வைதிருதி யோகம்
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Friday, March 02, 2012

New Financial Year - Auspicious Time புதிய நிதி ஆண்டு கணக்கு துவக்க நல்ல நேரம்

புதிய நிதியாண்டு கணக்கினை நல்ல நேரத்தில் துவக்கி தாங்களும், தேசமும் வளர்ச்சி அடைந்து பொருளாதரத்தில் பாரதம் மேன்மை அடையவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் 2012 ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரைக்கான இநதிய அரசின் புது நிதியாண்டு துவக்கமான 1 ஏப்ரல் அன்று நல்ல நேரத்தினை திருக்கணித முறையில் கணித்து இங்கு தந்துள்ளேன்.

இதனை பயன்படுத்தி தொழில், வணிகம் ஆகியவற்றில் வெற்றியடைய இறைவன் அருளட்டும்

இங்கு தரப்பட்டுள்ள நேரத்தை  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிழக்கு சித்தூர், தெற்கு நெல்லூர் மாவட்டங்களுக்கு அப்படியே பயன்படுத்தலாம்.  

தாங்கள் எளிதில் அச்சு எடுக்கும் வகையில் PDF வடிவில் இந்த தகவல் தரப்பட்டுள்ளது
அச்சு எடுக்க கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும்

பங்குனி மாத சுப நாட்கள், உகந்த நாட்கள்

Prohithar Balusaravanan
கர பங்குனி மாத மடலில்
சுபநாட்கள் விளக்கம்
தெலுகு யுகாதி முழு விளக்கம்
காருடையான் நோன்பு நேரம்
நிச்சியதாம்பூலம், நடனஅரங்கேற்றம், மஞ்சள் நீராட்டு விழா  நடத்திட மாலை நேர சுபநாட்கள்
வாஸ்து நாள்
கிரஹப்பிரவேச நாட்கள்
இன்னும் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன
இணைப்பு: http://www.prohithar.in/Kara2011/panguni2012.pdf