Pages

Showing posts with label தோஷம். Show all posts
Showing posts with label தோஷம். Show all posts

Friday, July 10, 2015

சந்திரனுக்கு கிரக அஸ்தங்க தோஷம் உண்டா? கிரக அஸ்தங்கம் என்றால் என்ன?

Tambaram Astrologer, Balu Saravana Sharma, Sri Thanigai Panchangam
புத, சுக், செ, குரு, சனி மட்டுமல்ல சந்திரனுக்கும் கிரக அஸ்தங்கம் உண்டு. இது தொடர்பாக மூலநூலான சூரிய சித்தாந்தத்தில் 12 மற்றும் 13 அத்யாயம் கூறுவதை இங்கு காணலாம்.
கிரக அஸ்தங்கம் - உதயம் & அஸ்தமனம் (Helical Rising and Setting)
சூரிய மண்டலத்தில் உள்ள எந்த ஒரு கிரகமும், குறுங்கோளும், வின்கல்லும், வால்நட்சத்திரமும் சூரியனுக்கு அருகில் குறிப்பிட்ட கோணஅளவு நெருங்கும் பொழுது
அது சூரியனின் பிரகாசத்தால் மணித கண்களுக்கு தெரிவதில்லை இதையே அஸ்தங்கம் என்று அழைக்கிறோம்.
புதன்(12, & 14), சுக்கிரன்(8), செவ்வாய்( 17), குரு (11), சனி (15) அடைப்பில் குறிப்பிட்ட நிஜ கோண அளவில் அருகில் வரும் பொழுது அது கண்களுக்கு புலப்படுவதில்லை
ஆயினும் (நல்ல பார்வையுடயவர்களுக்கு இது வேறுபடும்). நவீன உலகில் புற ஊதா கதிர் தொலைநோக்கி(ultraviolet telescope), ரேடியோ தொலை நோக்கி (Radio telescope), மூலமாக அதன் இருப்பிடத்தை அறிய முடியும்.
கிரக யுத்தம், (War) Conjenction
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் ஓன்றுக்கொன்று அருகில் வரும் பொழுது நிகழ்வது கிரக யுத்தம்
கிரக சமாகமம் (meeting)
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் சந்திரனுடன் இணைவது சமாகமம் ஆகும் (சூரியனுடன் இணைந்தால் அஸ்தங்கம்)
சரி சந்திரனுக்கு அஸ்தங்கம் உண்டா என்றால் அதுதான் அமாவாசை, (சூரிய ஒளியால் ஒரு கிரகம் மறைக்கப்படுவது அஸ்தங்கம் : சூ.சித் - அத்: 12)
சந்திர அஸ்தங்கம் குறித்த பலநூல்களிலும் தகவல் உள்ளது அதில் சந்திரன் ஒரு திதி பிரமாணம்(12 பாகை) அளவிற்கு அஸ்தங்க தோஷம் கொண்டது,
அதாகில் அமாவாசைக்கு முன்னர் தேய்பிறை சதுர்தசி முதல் அமாவாசைக்கு பின்னர் சுக்ல பிரதமை வரை அஸ்தங்க தோஷம் உள்ளது. எனவேதான் கிருஷ்ண சதுர்தசி, அமாவாசை, சுக்ல பிரதமையும் சுபகாரியம் செய்ய விலக்கப்பட்டநாளாகும்.(இது ஜோதிஷ நூல்படி)
சூரிய கிரகணம் (Solar Eclipse) அஸ்தங்கமா?
சூரிய பிரகாசத்தினால் கிரகம் மறைந்தால் அது அஸ்தங்கம், சூரியனே மறைக்கப்பட்டால் அதுவும் அஸ்தங்கம்தான் ஆயினும் பூரண சூரியகிரகணம் மட்டுமே அஸ்தங்கம் ஆகும்.
குறிப்பு: எனவேதான் கிரகண மாதம் சுபம் விலக்கப்படுகிறது, கிரகணம் அன்று சிரார்தம் கூட கிரகணம் முடிந்த பின்னர் செய்யப்படுகிறது
கிரக கடவு (Transit)அஸ்தங்கமா?
புதன், சுக்கிரன் அஸ்தங்ககாலத்தில் சூரிய விட்டத்தை கடப்பது அஸ்தங்கம் மட்டுமல்ல இதுவும் ஒருவித கிரக கிரகணமாகவும் (Planet Eclipse) கொள்ளவும். இதை கடவு (Planet Transit) என்று அழைக்கிறார்கள்
அஸ்தங்கம் கிரகணம் இடையே என்ன வேறுபாடு Combustion & Eclipse
அஸ்தங்கம் என்பது பிரகாசமான சூரிய ஒளியால் ஒரு வானியல் பொருள்(கோள், நிலவு, வின்கல்) கண்களுக்கு புலப்படாமல் போவதாகும்.
கிரகணம் என்பது சூரியனை சந்திரன் மறைப்பது அல்லது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி நேர்கோட்டில் வருகைதந்து மறைப்பதாகும்.
இந்த விதி மற்ற நிலவுடன் கூடிய கிரகங்களுக்கும் பொருந்தும்.
வானியல் மறைவு (Occultation)
ஒரு வானியல் பொருளை மற்றொரு வானியல் பொருள் மறைத்தலாகும்.
உதாரணம் நட்சத்திரம், அல்லது ஒரு கோளை நிலவு மறைப்பதாகும்
பஞ்சாங்கத்தி்ல் அமாவாசை அன்று நேத்திரன்-ஜீவன் குருடு எனும் நிலையில் "0" என்று குறிப்படிப்பட்டிருக்கும் சந்திரனின் மீது விழும் ஒளியின் அளவு, மற்றும் சூரிய நிலையே நேத்திர-ஜீவன்.
;நேத்திரம், ஜீவன் இல்லை எனெனில் அன்று திருமணம் செய்ய உகந்தநாளல்ல (அதாகில் சந்திரன் சூரிய சேர்கையால் அஸ்தங்கம் தோஷம் இருப்பதால்)
பாலு சரவண சர்மா, ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், Tambaram Astrologer
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Sunday, April 27, 2014

மிகமிக அரிதான குறை கோண மைய நிழல் விலகல் சூரிய கிரகணம் (Non Central Annular Solar Eclipse)

29.4.2014 செவ்வாய் கிழமை இந்திய நேரப்படி காலை 9:22 மணி முதல் பகல் 1:44 மணி வரை சந்திர கீழ்நோக்கு நிலை(கேது - Descending Node) கிரகணம் சம்பவிக்கும்

            ஆஸ்திரேலியா மற்றும் தென்துருவப்பகுதியில் மட்டும் தெரியும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது

            தென்துருவப்பகுதியில் நிகழும் மைய நிழல் விலகல்சூரிய கிரகணம்  5000 ஆண்டுகளுக்கு 68 முறை மட்டுமே நிகழும்

            நுனிப்புல் மேய்வது போன்று சந்திரனின் இரண்டாம் நிலை நிஜநிழல் (Antumbra) துருவப்பகுதி வெளியில் (ஆகாயத்தில்) விழும். சந்திரனின் புறநிழல் (Penumbra) தோற்றத்தால் பூமியின் சிலபகுதிகளில் சூரியன் ஒளி வட்டமாகவும், சில பகுதிகளில் பகுதி வெளி வட்டமாகவும் (Partial Annular Solar Eclipse) இந்த கிரகணம் தோன்றும். இது கிரகண வரிசையில் (Saros) 148வது எண்ணாகும்.

            தொலைவு நிலையில் (Apogee) சந்திரன் விட்டம் சிறியதாகவும், சூரியனின் விட்டத்தைவிட குறைந்தும் இருப்பதால் குறைகோண சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

            தென்துருவப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய அரசின் அறிவியல் துறைகீழ் இயங்கும் கடல் மற்றும் துருவப்பகுதி ஆய்வுநிலையம் (NCAOR) மைத்ரி மற்றும் பாரதி இந்த கிரகணத்தை கண்காணித்து ஆய்வுச்செய்யும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது