Pages

Friday, November 17, 2017

சபரிமலை விரதமும் தீட்டும்


Top 10 Astrologer in chennai famous astrologer in tambaram

விரதம் என்பது தனிப்பட்ட விஷயம், அதை தெவசம், இறப்பு விஷயத்துடன் இணைத்துப்பார்க்க கூடாது.

விரத மாலை அணிவது என்பது பிரம்மச்சர்யம் கடைபிடிக்கிறேன் என்று நம்மை நாமே ஸங்கல்பம் செய்து கட்டுப்படுத்திக்கொள்வதாகும்.

இதில் உணவு, உடை, உறக்கம், காமம் தொடர்பான சுயகட்டுப்பாட்டை கடைபிடித்தலாகும். இதில் இறப்பு தீட்டு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதது.

மிக நெருங்கிய உறவினர், நன்பர் மரணத்திற்குகூட மாலை போட்டதால் செல்லக்கூடாது என்று எந்த விதியும் இல்லை.

விரதகாலங்களில் எளிய உணவு உட்கொள்வதால் விருந்தை தவிற்க வேண்டும் என்பதை தவிற இறப்பு தீட்டிற்கும் தனிமனித விரதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

வாழும் காலத்தில் தாய், தகப்பனார், உறவினர், நன்பர்கள் துயரில் பங்கு பெறவிலை எனில் அது ஒரு வாழ்கை அல்ல.

நல்ல குரு ஆனவர்  தாய், தகப்பனார், உறவு, நட்புகள்தான் வாழ்க்கை என்பதை போதிப்பார்.

விரத நிலை என்பது மாமிசம் தவிற்தல், மடித்துணி அணிதல், இறைவனின் திருநாமத்தை உச்சரித்தல், திருநாமத்தை கேட்டல், ஆடம்பரம் இன்றி தரையில் படுத்தல், இறைவனை கண்களால் வணங்குதல் போன்று உடல் சார்ந்தும், இறைவனை பிராத்தனை செய்தல் எனும் மனத்தால் வழிபடுதல் என்பதாகும் இதில்  "கடமை" என்னும் இறந்தவர் உடலை காண்பதால், தாய்தகப்பனாருக்கு திதி தருவதால் விரதம் எந்த விதத்திலும் குறைந்து விடாது.

பாலு சரவண சர்மா
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர்
9840369677

Saturday, September 17, 2016

மகாளய பட்சம் திருதியை திதி & சதுர்த்தி

மகாளய பட்சம் திருதியை திதி & சதுர்த்தி திதி 19.9.2016 Monday
(இரண்டு திதிகளுக்கும் திருக்கணிதப்படி அன்று தான் முன்னோர் வழிபாடு)
வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திருதியை மற்றும் சதுர்த்தி திதியில் உயிர் நீத்தவர்களுக்கு இன்று வழிபாடு செய்தல் நன்று


தானம் தர்மம் இல்லாத வழிபாடு பலன் தராது. எனவே தவறாமல் முடிந்த அளவு தானம் செய்யவும்
பாலு சரவண சர்மா
9840369677

மகாளயபட்சம் தானங்கள்

மகாளயபட்சம் 15 நாட்களுக்கு நீர், நிலம், ஆகாயம் என எங்கும் வியாபித்திருக்கும் நம் முன்னோர்கள் நினைவாக காகம், பசு, மீன் என மூன்று நிலை உயிர்களுக்கும் விருப்பமான உணவை தானம் செய்து புன்னியம் பெறுங்கள்


அஸ்தியை நீரில் கரைத்தவர்கள் தவறாமல் குளம், ஏரி, ஆறு, கடல் மீன்களுக்கு அரிசி பொரி தானம் செய்யவும்
வீட்டில் தொட்டியில் வளரும் மீன்களுக்கு இந்த தானம் பொருந்தாது
அதுபோல் வேதபாடசாலை, ஆதரவற்றோர் இல்லத்திலும் அன்னதானம் செய்தல் நன்று
பாலு சரவண சர்மா
புரோகிதர்-ஜோதிடர்
9840369677

துவிதியை திதி

துவிதியை திதியில் (18.9.2016 ஞாயிறு) அன்று முன்னோர் வழிபாடு செய்தால் சந்ததி விருத்தி அடையும். (குழந்தை செல்வம் கிட்டும்)


வெறும் வழிபாடு பலன் தராது.
ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்கிதந்தால் புன்னியம் கிட்டும்
குறிப்பு: 12 மாத வளர் பிறை அல்லது தேய்பிறை துவிதியை திதியில் இறந்தவர்களுக்கு இன்று வழிபாடு செய்வது நன்று
பாலு சரவண சர்மா
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர்
ஜோதிடர் - பஞ்சாங்க கணிதம்
9840369677
www.prohithar.com
www.thanigaipanchangam.com

மகாளய அமாவாசை தர்பணம்

தர்ம சிந்தனையுடன் மகாளய அமாவாசை தர்பணம்
தாம்பரம் புரோகிதர் சங்கம்



மகாளய பட்சம் பிரதமை திதி


மகாளய பட்சம் பிரதமை திதி

மகாளய பட்சம் விளக்கம் - 2016

https://youtu.be/awcQLEXbSQM

தேதிகள் திருக்கணிதப்படி - தமிழக புவிநிலைக்கு தரப்பட்டுள்ளது.
காசியில் செய்வதற்கு இந்த தேதிகள் பொருத்தமற்றது. தேவைப்படுவோர் தனியாக மின்னஞ்சல் மூலமாக மட்டும் தொடர்பு கொள்ளவும் (தொலைபேசியில் அழைக்கவேண்டாம்)
வாக்கியப்படி தேதி மாறுதல் இருக்கும்
பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர்
9840369677

Wednesday, June 22, 2016

ஆடி மாத மடல்

சுப நாட்கள் விளக்கம்

ஆடி மாத மடல்
http://prohithar.com/dunmugi/aadi-dunmugi.pdf

Saturday, June 18, 2016

முன்னோர் வழிபாடு செய்ய சரியான நேரம்


திதி, தெவசம், பித்ரு பூஜை, தர்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை வீடு மற்றும் புனித ஸ்தலங்களில் "அபரான்னகாலம்" என அழைக்கப்படும் பிற்பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலத்தில் செய்யவேண்டும் இந்த காலத்தில் தான் பித்ருக்கள் பூமிக்கு வந்து நமது வழிபாட்டை ஏற்கிறார்கள்.
திதி "அபாரன்ன" காலத்தில் இல்லாத நாட்களில் "குதப காலம்" என அழைக்கப்படும் நன்பகல் 11:36 முதல் 12:36 மணி வரையிலான காலத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யவேண்டும்.
இந்த காலத்தில் திதி இருக்கும் அடிப்படையில் தான் பஞ்சாங்கத்தில் "சிரார்த திதி" தீர்மானிக்கப்படுகிறது.
-------------------------------------------------------------------
சூரிய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் தினமும் மாறும் எனவே உள்ளூர் சூரிய உதய அஸ்தமன அடிப்படையில் DMS முறையில் மணி,நிமிட கணிதம் செய்து நிஜமான அபாரான்ன காலம் மற்றும் குதப காலம் கணிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது
அபான்னகாலம் துவக்கம்
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 5) * 3 + சூரிய உதயம்
அபான்னகாலம் முடிவு
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 5) * 4 + சூரிய உதயம்
குதப காலம் துவக்கம்
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 15) * 7 + சூரிய உதயம்
குதபகாலம் முடிவு
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 15) * 8 + சூரிய உதயம்
-------------------------------------------------------------------
ராகு காலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் முன்னோர் வழிபாட்டிற்கும் தொடர்பில்லை.
இந்த காலத்தில் திதி செய்யும் வரை முதியோர், உடல்நலம் குன்றியோர், கர்பினிகள், சிறார் போன்றவர்கள் நீராகரம் பருகலாம்.
முற்றிலும் பட்டினி இருப்பது சிலரது உடலுக்கு ஆகாது என மருத்துவர் கூறும்பொழுது சற்று நீராகாரம் பருகிய பின்னர் திதி செய்யலாம். இதற்கு தோஷம் இல்லை.
தர்மம்: இந்த காலமே முன்னோர்கள் நினைவாக தான-தர்மங்கள் செய்ய மிகவும்உ கந்த காலமாகும்.
http://prohithar.com/amavasai/aparanna-kalam-kudapa-kalam-pitrupooja-thevasam-amavasai-thanrpanam.gif

பாலு சரவண சர்மா
புரோகிதர்- ஜோதிடர் - பஞ்சாங்க கணிதக்ஞர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
prohithar@gmail.com 9840369677

Monday, June 13, 2016

ஆவணி மாதம் மலமாதம் அல்ல

துன்முகி வருடம் ஆவணி  மாதத்தில் அனைத்து சுபநிகழ்ச்சிகளையும் செய்யலாம்
முழு கணித விளக்கம் இணையம்
http://prohithar.com/dunmugi/mala-masam-aavani-dunmugi.jpg

ஆவணி மாதத்தில் இரண்டு பவுர்ணமி முடிவுகள் ஃ முழுமையான பவுர்ணமந்த சாந்திரமான மாஸம் வரவில்லை!

அதாகில் இரண்டு சந்திரமான ஸங்கரமணம் ஆவணி மாதத்தில் நிகழாத பொழுது எப்படி மலமாதம் தோஷம் ஏற்படும்?

சரியாக பஞ்கசாங்க கணிதத்தை புரிந்துக்கொண்டால் இந்த குழப்பம் ஏற்படாது.

பாலு சரவண சர்மா
புரோகிதர் - ஜோதிடர் - பஞ்சாங்க கணிதக்ஞர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
மேற்கு தாம்பரம், சென்னை 45
9840369677
prohithar@gmail.com

Thursday, June 02, 2016

கிரக சேர்கை - யுத்தம் உண்டா? இல்லையா?

கிரக சேர்கை - யுத்தம் உண்டா? இல்லையா?
27.8.2016 அன்று மாலை வாணத்தை கண்ணால் பார்த்து பதில் சொல்லுங்கள்
திருக்கணிதமா? வாக்கியமா எது சரி?
வானம் பதில் சொல்லும்

http://thanigaipanchangam.com/almanac/gif-guru-sukra-ganitha-vakyam.gif

Saturday, May 28, 2016

Astronomy vs astrology

வானவியலும் ஜோதிடமும்
http://www.prohithar.com/news/index.php

Wednesday, May 18, 2016

ஆனி மாத மடல்

ஆனி மாத மடல்
http://prohithar.com/dunmugi/aani-dunmugi.pdf

 ஆனி மாத மடல் - சுபநாள் - உகந்த நாள்
புரோகிதர் - prohithar - Tambaram astrologer - Balu Saravanan
புரோகிதர் -Prohithar 
Tambaram astrologer -  Balu Saravanan
9840369677


Tuesday, May 17, 2016

ஆவணி மாத கிரஹப்பிரவேசம் தினங்கள்

ஆவணி மாத கிரஹப்பிரவேசம் தினங்கள்

ஆவணி மாதத்தில் கிரஹப்பிரவேசம் மற்றும் கணபதி ஹோமங்கள் செய்ய உகந்த நாட்கள் கணித்து வெளியிடப்பட்டுள்ளது

பாலு சரவணசர்மா
Http://www.prohithar.com

Wednesday, May 11, 2016

குரு பெயர்ச்சி Guru Peyarchi 2016, 2017

குரு பெயர்ச்சி:
guru kanni raasi peyarchi palangal, குரு கன்னி இராசி பெயர்ச்சி பலன்கள்

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி இராசிக்கு ஆடி 27ம் நாள் (11.8.2016) வியாழன் அன்று இரவு 9:28 மணி அளவில் பிரவேசிக்கிறார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி: ஆடி 18ம் நாள் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி செவ்வாய்) ஆங்கிலம் 2.8.2016 அன்று காலை 9:23 மணி அளவில் கன்னி இராசி பிரவேசம்.
குரு பெயர்ச்சி பலன்: இதனால் சிம்மம், ரிஷபம், மீனம், மகரம், விருச்சிகம் இராசியினருக்கு நன்மையும்,
கன்னி, கும்ப இராசியினருக்கு பாதிப்பும்
மற்ற இராசிகளுக்கு சுமாரன பலனும் ஏற்படும்
குருபகவானுக்கு பரிகாரமாக : வேதபாட சாலையில் அன்னதானம், ஆதரவற்றோர் இல்லத்தில் மஞ்சள் நிற துணி (போர்வை, உடை) தானம் செய்யவும்
எக்காரணம் கொண்டும் குரு பகவான் சிலைக்கு கடலை மாலை சாற்ற வேண்டாம். இது ஆகம விதிகளுக்கு முறனானது. மேலும் குரு பகவனையும் சிவனின் வடிவமான தட்சினாமூர்த்தியையும் ஓன்றாக கருதவேண்டாம்.
ஜென்ம நட்சத்திரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று தேவாரம், திருவாசகம், சிவபுராணம், லிங்காஷ்டகம, கோளறுபதிகம் படித்தல் நன்று

2025 வரை அனைத்து இராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன் குறித்து அறிய http://www.thanigaipanchangam.com/guru_peyarchi/index.php

Balu Saravana Sarma
Tambaram Astrologer - Prohithar
9840369677
www.prohithar.com

Tuesday, March 22, 2016

புறநிழல் சந்திர கிரகணம் - பஞ்சாங்க விளக்கம்



23.3.2016 புதன்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 03:09 மணி அளவில் நிலவானது புவியின் புறநிழல்வட்டப்பகுதிக்குள் நுழைந்து இரவு 7:27 மணி அளவில் வெளியேறுகிறதுஇதனால் பவுர்ணமி நிலவின் ஒளி சற்று மங்கலாக தோன்றும். கிரகண முடிந்தவுடன் முழுமதி பொலிவுடன் காட்சியளிக்கும்.

சென்னையில் புறநிழல் கிரகணத்துடனே சந்திரன் மாலை மணி 6:19 மணி முதல் துவங்கி கிரணம் முடிவடையும் காலம்வரை தெரியும். இதை வெறும் கண்களால் காணலாம்.
23 March 2016 Wednesday Peunambral Lunar Eclipse


இந்த கிரகணம் வானவியலில் கணித சரிபார்த்தலுக்கு மட்டுமே பயன்படும். மற்றபடி முக்கியத்துவம் ஏதும் இல்லை.

இந்து சாஸ்திரப்படி இந்த புறநிழல் கிரகணம் அனுஷ்டானமற்றதாகும் (தோஷம் அற்றதாகும்)

இந்த கிரகணத்தை அடுத்து வரும் இரண்டு சந்திர கிரகணங்களும் புறநிழல் கிரகணங்களாக அமைந்துள்ளது. 

அடுத்து ஒருவருடம் வரை தமிழகத்தில் சூரிய, நிஜநிழல் சந்திர கிரகணங்கள் ஏதும் இல்லை


பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Monday, March 21, 2016

பகலில் பஞ்சாங்கத்தை பார்....! இரவில் வானத்தை பார்...!



பஞ்சாங்கம் என்பது வானத்தில் உள்ள கிரக நிலைகளை அனுமானித்து கணித்த தகவலாகும். அது சரியாக உள்ளதா என்பதை உணர்ந்து பஞ்சாங்க தகவலின் உண்மைநிலையை அறிந்தால் தான் நிஜமான அடிப்படை கணிதம் அறிந்த ஜோதிடராக பரிமளிக்கு முடியும்.
ஜோதிடத்துறைக்கும் சேவையாற்ற முடியும் (ஜோதிடத்தால் பொதுமக்களுக்கு சேவையாற்றவது வேறு- ஜோதிடத்துறைக்கு சேவையாற்றுவது வேறு)
வானத்தை அறியாமல் பலாபலன் சொல்பவன் முழுமை பெற்ற ஜோதிடனாக கருதமுடியாது அவன் சொல்லும் ஜாதக பலன் பலித்தமாகாது என ஜோதிஷ சித்தாந்தம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது
Sabhari, Vasan, Srinivasan, Pambu, Arcot, Sri Thanigai, Panchangam

Sky watch, Sky party, Star Party, Astronomy, View of sky, Sky map, Tambaram Astronomy Club, Tambaram Astrologer

www.prohithar.com
www.thanigaipanchangam.com

எத்தனை ராகு - கேது ...?


http://www.prohithar.com/imag…/how-many-nodes-ragu-kethu.jpg
கிரகணங்கள் (Eclipse) - கடப்பு(Transit) ஏற்படுத்துவதையும், ஒரு கிரகத்தின் நிலையை (RA, Declination) அறியவும் பயன்படுத்துப்படும் மிக முக்கியமான வெட்டுப்புள்ளி ( Orbital node) தான் ராகு - கேது...
http://www.prohithar.com/imag…/how-many-nodes-ragu-kethu.jpg

Rahu Kethu Ascendant Node Astrology, Tambaram Astrologer

பாலு சரவண சர்மா
Tambaram Astrologer

Thursday, March 10, 2016

சூரிய கிரகணம் 9.3.2016

சூரிய கிரகணம் 9.3.2016 புகைப்பட தொகுப்பு
https://goo.gl/photos/yWVf8RPtgPngY87G9

Solar Eclipse - mercury Transit 2016


இன்று காலை நிகழ்ந்த சூரிய கிரகணத்தை கான காலை 5:45 மணிக்கே தயாராக சிலர் வந்திருந்தனர்.


மேக மூட்டம் காரணமாக கிரகண முடிவின் சிலநிமிடங்கள் மட்டுமே காண முடிந்தது
தாம்பரம் வானவியல் கழகம்
www.prohithar.com/tac