Pages

Showing posts with label Tambaram Astronomy Club. Show all posts
Showing posts with label Tambaram Astronomy Club. Show all posts

Wednesday, October 09, 2019

ஒரு நிலவுக்கு இத்தனை மாதங்களா?

ஒரு நிலவுக்கு எத்தனை விதமான மாதங்கள்?
http://prohithar.com/tac/moon-month-chennai-astronomy.jpg

 Lunar Month, Lunation, Chennai Astronomy, Tambaram Astronomy


Tambaram Astronomy Club
http://www.prohithar.com/tac/

Keywords: Moon month, tambaram astronomy club, chennai astronomy club, IAU, vu3kvb, prohithar Balu saravana sarma, Tambaram West, draconitic Month, tropical month, sidereal month, anomalistic month, synodic Month

Wednesday, August 07, 2019

சூரிய ஒளி வட்டம் circular halo (22° halo) Effect

சூரிய ஒளி வட்டம் காணுதல்
http://prohithar.com/tac/2019/circular-halo-22-halo-efeect-solar-ramana-vidyalaya.jpg

Tambaram Astronomy Club, IAU, TAC, VU3KVB,Bbalu Saravana Sarma

இன்று 11 மணி அளவில் தாம்பரம் பகுதியில் சூரிய ஒளிவட்டம் வானில் அழகுடன் தோன்றியது
மேற்கு தாம்பரம், ஸ்ரீரமண வித்யாலயா பள்ளி ஆசிரியைகள் இந்த அழகிய வானியல் நிகழ்வை மாணவர்களுக்கு காண்பித்து அதுகுறித்தும் விளக்கம் அளித்தனர்
அறிவியல் கல்வி என்பது வகுப்பறையில் மட்டும் அல்ல, புத்தகத்தின் எழுத்தில் அல்ல..!
செயல்முறையில் மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இத்தகைய வழிதான் நல்லாசிரியர்களின் பணி
சூரிய ஒளி 22° க்குள் சிதறும் பொழுது ஒளிவட்டம் தோன்றும் இதை வானவியலில் circular halo (22° halo) என்று அழைக்கப்படும், பொதுவாக மழைக்காலங்களில் மேகமூட்டத்துடன் இருக்கும் பொழுது காற்றில் உள்ள ஈரப்பதன் ஒளிச்சிதறலுக்கு முக்கியகாரணியாக உள்ளது
Image: Sri Ramana Vidyalaya, Tambaram West,
பாலு சரவண சர்மா
Tambaram Astronomy club

Saturday, March 07, 2015

பங்குனி மாத கிரகணங்கள் விளக்கம்

சூரிய கிரகணம் - இந்தியாவில் தெரியாது
http://www.thanigaipanchangam.com/jaya/20march2015totalsolareclipseindia.jpg
20.3.2015 சூரிய கிரகணம் Solar Eclipse 20 March 2015

சந்திர கிரகணம் - இந்தியாவில் தெரியும்
http://www.thanigaipanchangam.com/jaya/lunareclipse2015april4.jpg

Lunar Eclipse - Tambaram Astronomy Club
Free Manmatha Varusha Panchangam Download
http://www.thanigaipanchangam.com

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Tambaram Astrologer
www.prohithar.com

Tuesday, January 06, 2015

திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் - Betelgeuse star orion constellation - α Orionis

வானவீதியில் ஒருநிஜமான ஆருத்ரா தரிசனம்
திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் 2015- Betelgeuse star orion constellation -  α Orionis
இன்று அதிகாலை முன்னர் வானில் நிலவின் அருகில் திருவாதிரை நட்சத்திரம் மிகஅழகுடன் தோன்றியது. வானம் மிகதெளிவாக இருந்ததால் புகைப்படம் எடுக்க மிகவும் தோதுவாக இருந்தது. 

முழுமதியின் ஒளியால் திருவாதிரை நட்சத்திரம் புகைப்படத்தில் தெளிவாக விழவில்லை, எனவே டெலி லென்ஸ் மூலம் திருவாதிரை நட்சத்திரத்தை மட்டும் தனியாக படம் பிடித்து இந்த படத்தில் 100% என்கிற நிலையில் இணைத்துள்ளேன்

சிவனின் உடுக்கை போன்று தோற்றமளிக்கும் ஓரியான் மண்டலத்தில் தனித்துவத்துடன் இருக்கும் இந்த (சூரியனைகாட்டிலும் 1000 மடங்கு பெரியதான) பிரம்மான்டமான சிவப்பு நட்சத்திரத்தை மார்கழிமாதத்தில் முழுநிலவின் அருகில் தரிசிப்பதுதான் "ஆருத்ரா தரிசனம்"

சராசரியாக 354.37(1 சந்திர வருடம்) நாளுக்கு ஒருமுறை இந்த வானியல் நிகழ்வு நடைபெறும். ஒவ்வொரு வருடமும் சௌரமான தனூர்மாதத்தில் நிலவின் அருகில் திருவாதிரை வரும் காலமே ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது.  சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தனூர்மாதத்தில் "முழுநிலவு"விற்கு மிக அருகில் திருவாதிரை  நட்சத்திரம் (Betelgeuse star - Orion constellation -  α Orionis) வரும்.

வான்வெளியில் முதன்முதலில் திருவாதிரை....
வானில் மிதக்கும் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி முதன்முதலில் 10.12.1996ல் எடுத்த நட்சத்திர படமே திருவாதிரைதான் என்பது சிறப்பான அம்சம் அதனின் இணைப்பை இங்கே தந்துள்ளேன்
http://hubblesite.org/newscenter/archive/releases/1996/04

திருவாதிரை நட்சத்திரம் - ஹப்பிள் தொலைநோக்கி படம்
திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் - Betelgeuse star orion constellation -  α Orionis
மன்மத வருடத்தில் ஆருத்ரா தரிசனம் (Arudra Darisanam) ஆங்கில தேதிப்படி 25.12.2015 வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு பின் 26.12.2015 சனிக்கிழமை அதிகாலையில் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் அன்று தவறாமால் வானத்தை பார்த்து நிலவின் அருகில் திருவாதிரை இருக்கும் அழகை கண்டு ரசித்து மகிழுங்கள்.

26.12.2015 Arudra darisanam ஆருத்ரா தரிசனம், திருவாதிரை நட்சத்திரம் - மன்மத வருடம், மார்கழி 10 சனி


பாலு சரவண சர்மா
தாம்பரம் வானவியல் கழகம்
http://www.prohithar.com/tac

Tuesday, June 24, 2014

வெள்ள அபாய சங்கு flood warning alarm system

அபாய சங்கு

flood warning alarm system வெள்ளம் அபாய சங்கு
1975ம் வருடம் வரையில் இருந்த இந்த பொது எச்சரிக்கை (அபாய சங்கு) முறையை மீண்டும் நாடுமுழுவதும் அனைத்து நகரங்கள், கிராமங்கள், ஆற்றங்கரை, கடற்கரை பகுதிகளிலும் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆற்றின் கரைகளிலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் கிராம பகுதிகளிலும் "அபாய சங்கு" நிறுவி எச்சரிக்கை ஏற்படுத்தி திடீர் வெள்ளம், அனைதிறப்பு போன்ற காலங்களில் உயிர் சேதம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மேலும் தமிழிக மக்கள் AM வானொலி(720 Khz Chennai Radio)யை கேட்க வலியுறுத்தவேண்டும் (FM Radio புயல், வெள்ளம் காலங்களில், மலைப்பாங்கான பகுதிகளில் பயன்படாது).

நவீன முறைகள் மற்றும் தகுந்த எச்சரிக்கைகளால் மட்டுமே விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற முடியும். இது ஒரு அரசின் அடிப்படை கடமையாகும்.


Thursday, May 01, 2014

Balu Saravnana - Astronomy - Puduyugam TV

வானியல் தின சிறப்பு நிகழ்ச்சி 28.4.2014

புதுயுகம் தொலைக்காட்சி - இனியவை இன்று

தாம்பரம் வானவியல் கழகம்  - பாலு சரவண சர்மா பேட்டி



Thursday, March 20, 2014

Vernal Equinox 2014



புவி சமநாள் குறித்த சென்னை வானொலி செய்தி
Tambaram Astronomy Club 
http://youtu.be/WOGTIr6ap1w

தாம்பரம் வானவியல் கழகம் - புவி சமநாள்