Pages

Showing posts with label muhurtham dates. Show all posts
Showing posts with label muhurtham dates. Show all posts

Tuesday, January 13, 2015

மன்மத வருடம் - முகூர்த்த தினங்கள்- Suba dinam

மன்மத வருடம்(2015 - 2016) - சுபமுகூர்த்தநாட்கள்
திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கப்படி முகூர்த்த நாட்கள், பஞ்சகம் கணித்து அதற்கு ப்ரீதியும் தரப்பட்டுள்ளது.
இணைப்பு:
http://www.thanigaipanchangam.com/manmatha/Manmatha_Muhurtham_2015_2016.pdf

Suba dinam - Muhurtham -Manmatha varusham 2015-16, மன்மத வருட பஞ்சாங்கம், சுப முகூர்த்த நாள், நல்ல நாள், சுபதினம்



பாலு சரவண சர்மா
புரோகிதர்-ஜோதிடர்-பஞ்சாங்க கணிதர்
ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம்
தாம்பரம் - சென்னை 45
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Tuesday, November 25, 2014

17.9.2015 வியாழன் சுபமுகூர்த்தநாள் அல்ல

17.9.2015 வியாழன்(ஆவணி 31) அன்று சுவாதி நட்சத்திரம் வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் மாத சங்கரமண தோஷத்துடன் இருப்பதால் அன்று கூடுமானவரை திருமண முகூர்த்தம், கிரஹப்பிரவேஸம் தவிற்கவும். 

அன்று விநாயகர் சதுர்த்தி , புண்ணியகாலம் & மாதகடைசி என்பதாலும் சுமாரான முகூர்த்தநாளாகும். 

எனவே கூடுமானவரை அன்று முகூர்த்தை தவிற்கவும். 

திருமண முகூர்த்தம் காரணமாக அன்று உறவினர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வழிபடுவதை தடுப்பது தர்மம் அல்ல

2015 Muhurtham Dates - Manmatha Varusha Panchangam

www.prohithar.com
Tambaram astrologer



விநாயகர் சதுர்த்தி மற்றும் பண்டிகை நாளில் திருமண முகூர்த்தம் தவிற்போம்

ஜோதிடர் மற்றும் புரோகிதர்களுக்கு பணிவான வேண்டுகோள்!
முகூர்த்த நாள் - விநாயகர் சதுர்த்தி Wedding day


இந்துக்களின் பண்டிகையை இந்துக்களே புறக்கணிக்க துணைபோகாதீர்கள்.
இந்து பண்டிகை நாட்களில் முகூர்த்தம் வைத்துதருவதால் கடும் விலைவாசி ஏற்றம் ஏற்பட்டு ஒருமுழம் பூவும், வாழையிலையும் வாங்க இயலாதளவு விலை ஏற்றம் ஏற்பட்டு ஏழை இந்துக்கள் பண்டிகையை மகழ்சியுடன் கொண்டாட முடியவில்லை.

மேலும் திருமணத்திற்கு வருவதால் தங்கள் வீட்டில் குடும்பத்துடன் விரதம் இருந்து பண்டிகை கொண்டாட இயலாமல் தடுக்கப்படுகிறது(விரதத்தை தடுப்பது பாவகரமான செயலும்கூட)

இந்துவே இந்துவின் பண்டிகையை புறக்கணிக்கும் இத்தகைய சூழலை தவிற்க வரும் காலங்களில் இந்து பண்டிகை நாட்களில் முகூர்த்தம் குறிப்பதை ஜோதிடர்களும், முகூர்த்தம் செய்துவைப்பதை புரோகிதர்களும் அவசியம் தவிற்குமாறு ஹிந்து மதம் நலன் கருதி புரோகிதர் கூட்டமைப்பு சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து இந்து மத பண்டிகைகளை மகழ்சியுடன் கொண்டாட வழிவகை செய்யுங்கள்.