Pages

Wednesday, January 29, 2014

நேரம் என்னும் அலகு இந்த பிரபஞ்சம் தோன்றும் வரை இல்லை!

நேரம் தோன்றிய நேரம்

இந்த பிரபஞ்சம் தோன்றும் வரை நேரம் (t  - time) எனும் அலகு (Unit) இல்லை!
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

திதி கணிப்பது எப்படி


திதி என்பது  இந்திய வானசாஸ்திரத்தில் சந்திரன் ஒளி தேய்ந்து வளரும் கால அளவில் 12பாகைகளை குறிக்கிறது. 
சந்திரனின் திதி(சந்திர நாள்) சந்திரனின் ஒளிர்வு நிலையிலிருந்து வேறுபட்டதாகும். சந்திரனின் ஒளியை பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இடத்திற்கு இடம் சிறிது வேறுபடும். ஆனால் திதி அளவு என்பது புவி மையம், சந்திர மையம், சூரிய மையம் இடையிலான அளவீடாகும். 

பாலு சரவண சர்மா 
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் 

பூமிக்கு இரண்டு நிலவுகள் ?

வாக்கிய பஞ்சாங்கம் அமாவாசை

வாக்கிய பஞ்சாங்கம் உண்மையான அறிவியல் முறையான அமாவாசையுடன் ஒத்துப்போகாமல் பிழையாக உள்ளது. 

பூமிக்கு வாக்கிய பஞ்சாங்கத்தினர் புதியதாக இன்னுமொரு சந்திரனை உருவாக்கியுள்ளார்கள் ஆக பூமிக்கு இரண்டு நிலவுகள் 

பாலு சரவண சர்மா ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

மேற்கில் உதிக்கும் சூரியன்

மேற்கில் உதிக்கும் சூரியன்- திசை என்று எதுவும் இல்லை

இந்த பிரபஞ்சம் விரிவடைந்துக்கொண்டே இருக்கும் , அனைத்து வானியல் பொருள்களும் தன் இடத்தை விட்டு நகர்கிறது. உள்ளிருக்கும் எந்த ஒரு வானியல் பொருளுக்கும் திசை என்று எதுவும் இல்லை. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் நிரந்தரமல்ல....! திசை என்று எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை !!!!!




ஆறாம் அறிவும் - ஐம்புல வழிபாடும்

கோவில் பூஜையும் - ஆறாம் அறிவும்

கோவில் வழிபாட்டில் ஐம்புலன்களுக்கு உபசாரங்கள் செய்தாலும், ஆறாம் உணர்வான மெய்யறிவால் இறைவனை பிராத்தனை செய்தலே மிகவும் பலனுள்ளதாகும். 

பாலு சரவண சர்மா


Tuesday, January 28, 2014

திருமண தகவல் படிவம்

திருமண தகவல் படிவம் - தமிழில், Matrimonial Form in Tamil


திருமண தகவல் படிவம் - தமிழில்
Matrimonial Form in Tamil
Download - தறவிறக்கம்
http://www.prohithar.com/downloads/matrimonial_form_tamil.pdf

www.prohithar.com
www.thanigaipanchangam.com

தை அமாவாசை வழிபாடும் தர்மமும்

Thai amavasai தை அமாவாசை தர்பணம் மூதாதையர் வழிபாடு

30.1.2014 வியாழன் கிழமை தை அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு வழிபாடு செய்ய மிகவும் உகந்தநாளாகும்.

அன்று தர்பணம் செய்வது எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு தானம், தர்மம் செய்வதும் மிக முக்கியமாகும்.

காலையில் பசுவிற்கு கோதுமை தவிடு, வெல்லம், அகத்திகீரை (இலைமட்டும்) கலந்து ஊறவைத்து தானம் செய்தும், ஆதறவற்றோர் இல்லத்தில் அரிசி, நல்லெண்ணைய், மளிகை பொருள், காய்கறிகள் தானம் செய்வதும் மிகவும் புன்னியத்தை தரும்.

தானம் இல்லாத வழிபாடு பலனற்றது

தணிகை பஞ்சாங்கம் பாலு சரவண சர்மா
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Friday, January 10, 2014

தை பொங்கல் வழிபாடு - உகந்த நல்ல நேரம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் வழிபாடு நேரம்
http://www.thanigaipanchangam.com 
சூரியன் நிராயண (Sidereal) முறைப்படி தனூர் இராசியில் இருந்து மகர இராசிக்கு 270° பாகைக்கு (உத்திராடம் 1ல் இருந்து 2ல்) பிரவேசிக்கும் காலமே உத்திராயணம், தைமாத பிறப்பு, மகர சங்கரமணம் என்று வழிபடப்படுகிறது
14.1.2014 செவ்வாய் தை மாத பிறப்பு அன்று சூரியன் மகரத்தில் பகல் 1:13 மணி அளவில் பிரவேசிக்கிறார் அதன் பின்னர் 1:42 வரை அஷ்டம சுத்தியுடன் சூரிய துவக்க புள்ளி இராசியான மேஷ இராசியில் பொங்கல் வழிபாடு நன்று
Pongal Pooja Time - பொங்கல் வழிபாடு - படையல் உகந்த நேரம்

Tuesday, December 24, 2013

இலவச ஜய வருட பஞ்சாங்கம் - Free Jaya Varusha Tamil Panchangam

இலவசமாக மின்புத்தக வடிவில்
ஸ்ரீ ஜய வருட (2014-2015) திருக்கணித பஞ்சாங்கம்
தறவிறக்கம் செய்ய
Free PDF Tamil Panchangam for Jaya Varusham
Download
http://www.thanigaipanchangam.com
or
http://www.prohithar.com/jaya/index.php
Jaya Varuda Tamil Free Panchangam - ஜய வருட பஞ்சாங்கம் 2014-15

Sri Thanigai Panchangam
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Sunday, December 22, 2013

உண்மையான தைமாத பிறப்பு 21.12.2013

நாம் தற்பொழுது கொண்டாடும் பண்டிகைகள் அதற்குரிய(பருவத்தில்) தினத்தில் இல்லை, 
பஞ்சாங்கத்தில் கடைபிடிக்கப்படும் நிலையான காலஅளவு, நிராயண முறை மற்றும் பூமியின் செயல்பாட்டிற்கு ஏற்ப பஞ்சாங்கத்தை திருத்தாதது மிகமுக்கியமான காரணம். 
வேதங்களில் குறிப்பிட்ட பருவ காலத்திற்கு மாறாக தற்பொழுது தவறான தேதியில் பண்டிகைகள், விரதங்கள், வாஸ்து நாள் கடைபிடிக்கிறோம்,  என்பது அறிவியல் பூர்வமான உண்மை!!! 

பாலு சரவண சர்மா 
http://www.thanigaipanchangam.com
Tamil Panchangam - Thai Matha Pirappu தமிழ் பஞ்சாங்கம், தை மாத பிறப்பு


Tuesday, December 17, 2013

விஜய வருடம்(2014) தை மாத மடல்

விஜய வருடம் தை மாத மடல்
தை பொங்கல் படையல் வழிபாடு உகந்த நேரம்















  • தை மாத பிறப்பு சிறப்பு தகவல்
  • தை பொங்கல் படையல் நேரம்
  • தை பூசம், தை கிருத்திகை என்று?
  • தை மாத கிரஹப்பிரவேஸ நாட்கள்
  • தை மாத முகூர்த்த நாட்கள்
  • தை மாத நிச்சிய தாம்பூல நாட்கள்
  • தை மாத மாலை நேர சுப நாட்கள்
  • தை மாத காதுகுத்தல், திருமுடி இறக்கம் நாள்
  • தை மாத சுபநாள் விளக்கம்
இன்னும் பல தகவல்களுடன்

Saturday, December 07, 2013

Chennai Book Fair 2014 சென்னை புத்தக கண்காட்சி 2014
அறிவுக்கு விருந்தளிக்கும்
சென்னை புத்தக கண்காட்சி 2014
Chennai book Fair 2014 
நாள்: 10, ஜனவரி – 22, ஜனவரி, 2014
இடம்: YMCA மைதானம், நந்தனம், சென்னை


Monday, October 28, 2013

2014 Eclipse (கிரகணம் 2014ம் ஆண்டு)

2014_Lunar_solar_eclipse_chennai_tambaram
2014 Eclipse (8.10.2014 ) Chennai - Tambaram Astronomy Club
2014 Eclipse (கிரகணம் 2014ம் ஆண்டு)

இந்த ஆண்டு இரண்டு முழுசந்திர கிரகணங்கள், ஒரு குறை சூரிய கிரகணம், ஒரு பகுதி சூரிய கிரகணம் என நான்கு கிரகணங்கள் நிகழும்
தமிழகத்தை பொருத்த மட்டில் 8.10.2014 அன்று நிகழும் முழு சந்திரகிரகணம் (Total Lunar Eclipse) மட்டும் சென்னையில் தெரியும். மற்ற மூன்று கிரகணங்கள் தெரியாது
8.10.2014 அன்று பகலில் சூரியன் இருக்கும் பொழுது இந்திய நேரப்படி பகல் 1:42 மணிக்கு புறநிழல் கிரகணம் துவங்கி, பகல் 2:44 மணி அளவில் நிஜநிழல் கிரகணமாக பிரவேஸிக்கிறது, . கிரகணம் உச்சகட்டமாக மாலை 4:25க்கு அடைகிறது.
பகலில் நிகழும் சந்திரகிரகணம் தெரியாது அஸ்மனத்தில் மட்டுமே இது தெரியும். அன்று சென்னையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே அதாகில் மாலை 6:04 வரை மட்டுமே நிஜ நிழல் கிரகணம் தெரியும், பின்னர் புறநிழல் (Umbral) கிரகணம் இரவு 7:05 வரை தெரியும் (சுமார் 1 மணி 11 நிமிடங்கள்)
சூரியமறைவின் பொழுது அடிவானில் மேகமூட்டம், வளிமண்டல ஒளிச்சிதைவு காரணமாக நிஜகிரகணத்தினை காண்பது அரிதாகும், ஆயினும் புறநிழல் கிரகணத்தை காணலாம் (சந்திரனின் ஒளி சற்று மங்கலாக இருக்கும்). இதை வெறும் கண்களால் கிழக்கு திசையில் காணலாம்.

2014 Apr 15: Total Lunar Eclipse
2014 Apr 29: Annular Solar Eclipse
2014 Oct 08: Total Lunar Eclipse
2014 Oct 23: Partial Solar Eclipse
2014 Apr 15: முழு சந்திர கிரகணம் Total Lunar Eclipse
2014 Apr 29: குறை சூரிய கிரகணம் Annular Solar Eclipse
2014 Oct 08: முழு சந்திர கிரகணம் Total Lunar Eclipse
2014 Oct 23: பகுதி சூரிய கிரஹணம் Partial Solar Eclipse
Chennai - Tambaram Astronomy Club

Tuesday, October 22, 2013

பிழையான 2014 வருட காலண்டர்கள் விற்பனையில் உள்ளது !!

2014 Tamil Calendar Mistake
எச்சரிக்கை! பிழையான 2014 வருட (நாட்காட்டி) காலண்டர்கள் விற்பனையில் உள்ளது !!

தற்பொழுது 2014 ம் ஆண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டாலும் இவைகளில்  திதி, நட்சத்திர முடிவு நேரங்களில் எண்ணற்ற பிழைகள் உள்ளது. தற்பொழுது 25க்கும் மேற்பட்ட வடிவில் இவை கடைகளில் (கேக் என்கிற பெயரில்) விற்பனையில் உள்ளது. இதில் பிழைகளுக்கு யார் பொறுப்பு என்பது அறிய முடியாது ஏனெனில் அச்சிட்டவரின் முகவரி அதில் இருக்காது!

இவைகள் வானியல் துறைகளான இஸ்ரோவின் தகவலுடன் ஒத்துப்போகாமல் மிகவும் பிழையுடன் காணப்படுகிறது.

சந்திரனுக்கு வின்கலத்தை அனுப்பிய இந்திய அரசு இப்படி தவறாக தகவலுடன் அமாவாசை, பௌர்னமி, முடிவுகளை வெளியிடும் காலன்டர்களை தடை செய்ய வேண்டும்.

இந்த காலண்டர்கள் அறிவியலுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. குறிப்பாக திதி முடிவுகள் நாஸா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளையும், கணித இராமநுஜம் பிறந்த இந்த மண்ணை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. 

பொதுமக்கள்  வானியல் துறைக்கு கொஞ்சம்கூட ஒத்துப்போக,  தொடர்பில்லாத இதுபோன்ற தவறான காலன்டர்களை புறக்கணிக்கவேண்டும். 

காலண்டர் என்பது வானியல். இந்த நிகழ்வு பூமிக்கு பொதுவானது. அப்படி இருக்க வானிலை துறையினர் செய்யும் சாகஸங்களை கேவலப்படுத்தும் இந்த காலண்டர் தயாரிப்பவர்கள் தங்கள் இஷ்டம்போல் தவறாக தகவலை வெளியிடுவதை அரசு ஒழங்குப்படுத்த வேண்டும்.

உணவு பொருட்களுக்கு அக்மார்க் போன்று காலண்டர்களுக்கும் அரசு தரநிர்ணயம் செய்ய வேண்டும்.

வானியல்துறை அறிவு கொஞ்சம்கூட இன்றி  இப்படி காலன்டர் தயாரித்து வெளியிட்டால் இதை  நம்பி தெவசம் செய்வதும், குழந்தைக்கு நட்சத்திரம் காண்பதும் தவறாகத்தான் இருக்கும்.

வானியல் என்பது அறிவியல் அதை பலதுறைகள் பயன்படுத்துகின்றன அதுபோல்தான் ஜோதிடமும் பயன்படுத்துகிறது.

வானியல் இல்லையேல் ஜோதிடம் இல்லை. ஆனால் ஜோதிடம் இல்லையென்றாலும் வானியல் துறை இருக்கும் ...! என்பதை இந்த காலன்டர் தயாரிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு சுமார் 292க்கும் மேற்பட்ட பிழைகள் உள்ளன. இதில் மிக அபத்தமான பிழைகள் 100க்கும் மேல் உள்ளது......இப்படிப்பட்ட காலன்டர்களை மக்கள் புறக்கணித்து இந்திய அரசின் வானியல் துறையினரின் காலன்டர்களை பயன்படுத்துங்கள்.

சந்திரனுக்கு வின்கலத்தை துல்லியமாக அனுப்ப உதவிய இந்திய வானியல் துறையின் மிக துல்லியமான தகவல் அடங்கிய இணையத்தை பார்த்து மிகச்சரியான திதி, நட்சத்திரம் அறிந்துக்கொள்ளுங்கள் (இது இந்திய வானியல் துறையினரின் பிரிவு)

http://www.packolkata.org/ 

மேற்படி இணைய தகவலையும் நீங்கள் வாங்கிய காலண்டரையும் ஒப்பிட்டு பாருங்கள் பின்னர் இந்த கட்டுரையின் உண்மை புரியும்.

மக்களையும் முட்டாளாக்கும் இதுபோன்ற காலண்டர்களை தமிழக அரசு ஒழுங்கப்படுத்த வேண்டும். மேலும் இவர்களால் பண்டிகைகள்கூட தவறாக கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ் தேதிகள் அறிவியலுக்கு ஒத்தப்போகாமல் பிழையாக உள்ளது என்பதும் உண்மை. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் மட்டும்தான் இப்படி  பிழையான அறிவியல் தகவல்களை காலண்டர்கள் வெளியிடுகிறது என்பது அவமானகரமான ஒன்று. 

இது தொடர்பாக யாரேனும் விவாதிக்க வேண்டுமென்றால் வாருங்கள் பிர்லா கோளரங்கத்தில் சந்திப்போம் அல்லது கணித மேதை இராமனுஜம் நினைவு ஆய்வு கூடத்தில் கணித பேராசிரியர்கள் முன்னிலையில் அறிவுபூர்வமாக விவாதிக்கலாம். நான் தயார் ...!

குறிப்பு: முதல் நாள் துவங்கி வருட கடைசிநாள் வரையில் ஏதேனும் ஒருவகையில் சிறிய, பெரிய பிழகளுடன் காணப்படும. கடந்த சில வருட காலண்டர்களில் தமிழ் தேதியும் தவறாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். 

பாலு சரவண சர்மா 

மழைக்காலம் நெருங்கி வருகிறது ......

 
எச்சரிக்கை மழைக்காலம் நெருங்கிவிட்டது புயல், 
கனமழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்படலாம் ..! 
எதிர்கொள்ள நீங்கள் தயார் நிலையில் உள்ளீர்களா?
முதலுதவி குறித்த கையேடு
http://www.prohithar.com/pdf/firstaid.pdf


Saturday, October 19, 2013

புறநிழல் சந்திர கிரகணம் 19.10.2013 Penumbral Lunar Eclipse

Tambaram Astronomy Club - Penumbral Lunar Eclipse
புறநிழல் சந்திர கிரகணம் 19.10.2013

இன்று அதிகாலை சுமார் 3:18 மணி முதல் பூமியின் புறநிழல் சந்திரன் மீது பட்டதால் நிலவின் ஒளி மங்கத்துவங்கியது உச்சகட்டமாக காலை 5:20 மணி அளவில் சந்திரன் தனது வழக்கமான பௌர்னமி நிலவின் பொலிவை இழந்து காணப்பட்டது பின்னர் சந்திரனின் ஒளிமங்கல் குறைய துவங்கியது அதேவேளையில் சூரிய உதயத்தால் வானம் பிரகாசமடைய சந்திரனுன் மெல்ல மறையத்துவங்கியது.

இந்த நிகழ்வை தாம்பரம் வானியல் கழகத்தின் பாலு. சரவணன் மற்றும் சண்முகம் நிழற்படமாக பதிவு செய்தார்கள்.

நிகழ்ச்சியின் இடையே மேல்தட்டு மேகம் கடந்ததால் சில படங்கள் சரிவர அமையவில்லை. ஆயினும் தெரிவு செய்த படங்களை இதனுடன் இணைத்துள்ளோம்.
Photography: Shanmugan Saravanan, Camara: Canon 550 D,
Telescope : Skywatcher MAK90 EQ1

IMG_5186_M
Penumbral Lunar Eclipse புறநிழல் சந்திர கிரகணம் 19.10.2013



IMG_5145_M
Penumbral Lunar Eclipse  புறநிழல் சந்திர கிரகணம் 19.10.2013


Thursday, October 17, 2013

Jaya Varusha Tamil Panchangam - ஜய வருட தணிகை பஞ்சாங்கம் 2014 - 2015

எதிர்வரும் ஜய வருஷ (2014 - 2015) ஸ்ரீதணிகை திருக்கணித பஞ்சாங்கம் அடுத்த மாதம் கார்தீகை தீபம் அல்லது அதை ஒட்டிய தினங்களில் வெளியிடப்படும். அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய இந்த பஞ்சாங்கம் இந்திய வானியல் துறையின் தகவல் மற்றும் நாஸாவின் புள்ளிவிபரங்கள் அடிப்படையிலானது. ஜய வருட சுபமுகூர்த்த நாள்கள் குறித்த விரிவான தகவல் அடுத்து வெளியிடப்படும்.
Jaya Varusha Panchangam, ஜய வருட பஞ்சாங்கம் 2014-2015
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com

Friday, September 20, 2013

மகாளய அமாவசை தர்பணம் 4.10.2014 வெள்ளி

இந்த ஆண்டு மகாளய பட்சம் 4.10.2014 வெள்ளி அன்று வருகிறது மிகவிரிவாக அறிய கீழ்கண்ட இணையத்தினை காணவும்

http://prohithar.com/amavasai/index.html


Mahalaya Amavasai மகாளய அமாவாசை, தர்பணம்

கடந்த ஆண்டு (2012) மாளைய அமாவாசை தானம் நிகழ்ச்சி புகைப்படங்கள் தொகுப்பு
https://plus.google.com/photos/112292199305867435143/albums/5802136817079779249

Mahalaya Amavasai 2013, Malaya Amavasai, மஹாலய அமாவாசை, மகாளய அமாவாசை, மாளைய அமாவாசை 4.10.2013 Friday

Tuesday, September 17, 2013

Malaya Amavasai மஹாளய அமாவாசை தர்பணம் 4.10.2013

மாளையம், மஹாலய அமாவாசை, Mahalaya Amavasai 2013


ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில் மஹாளய அமாவாசை தர்பணம் 4.10.2013 வெள்ளி அன்று பழைய தாம்பரம் குளத்தில் (குறிப்பு: காரிய மண்டம் உட்புறத்தில்) நடைபெறும் 

வருகை தருபவர்கள் தங்களால் இயன்ற அளவு அரிசி, காய்கறி, பற்பசை , போர்வை, குளியல் சோப், துணி சோப் கொண்டு வந்து ஆதரவற்றோர் இல்லத்திற்கு தங்களின் கரத்தால் நேரிடையாக தானம் செய்யலாம் 

வேண்டுகோள்: தர்பணம் செய்யவருபவர்கள் காலம் சென்ற மூதாதையர், ஆசிரியர், உறவினர், நன்பர்கள் பெயரை தவறாமல் தாளில் எழுதிக்கொண்டு வரவும் 

வர இயலாதவர்கள் முன்னதாக தொடர்பு கொண்டு தங்களால் ஆன உதவியை செய்யலாம் 

கடந்த ஆண்டு மஹாலய அமாவசை அன்று உதவி பெற்ற ஆதரவற்றோர் இல்ல புகைப்படங்கள் https://plus.google.com/photos/112292199305867435143/albums/5802136817079779249?banner=pwa

Tuesday, August 20, 2013

புரட்டாசி மாத மடல் - ஸ்ரீவிஜய வருஷம் - 2013

புரட்டாசி மாத மடல் - ஸ்ரீவிஜய வருஷம் - 2013
நவராத்திரி கொலு வைக்க நல்ல நேரம், சரஸ்வதி பூஜை உகந்த நேரம்
விஜய தசமி உகந்த நேரம்
மஹாளய பட்ச தினங்கள்(மூதாதையர் சிறப்பு வழிபாட்டு நாட்கள்)
மஹாபரணி, வியதீபாதம், மத்யாஷ்டமி, நவமி (அவிதவா நவமி)
ஏகாதசி, துவாதசி(ஸன்யஸ்த மாளயம், திரியோதசி(கஜச்சாயா)
சதுர்தசி(சஸ்தரஹத மாளயம்), மஹாளய அமாவாசை
புரட்டாசி (ஸ்ரீ விஜய) மாத விசேஷ தினங்கள் (வாக்கியப்படி), மூதாதையர் வழிபாடு நாட்கள் , புரட்டாசி மாத சுப நாட்கள் - ஸ்ரீவிஜய வருடம் 2013

பூமி பூஜை, தளம் போட, தலைவாசல் நிறுத்த பூஜை உகந்த நேரம்
திருமுடி இறக்கம், காது குத்தல் உகந்த நேரம் -  ஸ்ரீ விஜய வருஷம்
சாந்தி முகூர்த்தம் உகந்த நேரம் (இரவு)
கிரஹப்பிரவேஸம், கணபதி ஹோமம் உகந்த நாள், நேரம்
நிச்சிய தாம்பூலம், மஞ்சள் நீராட்டு விழா, பெண் பார்த்தல் (வரன் பார்த்தல்)
புரட்டாசி மாத முகூர்த்த நாட்கள் - ஸ்ரீ விஜய வருஷம்

புரட்டாசி மாத வானியல் நிகழ்வுகள்  Astronomical Phenomena
உதவி செய்யுங்கள் - மஹாளய அமாவாசை - தானம்
மஹாளய அமாவாசை 4.10.2013 வெள்ளி

http://www.prohithar.com/vijaya/purattaci_vijaya.pdf