Pages

Showing posts with label Free. Show all posts
Showing posts with label Free. Show all posts

Tuesday, October 22, 2013

பிழையான 2014 வருட காலண்டர்கள் விற்பனையில் உள்ளது !!

2014 Tamil Calendar Mistake
எச்சரிக்கை! பிழையான 2014 வருட (நாட்காட்டி) காலண்டர்கள் விற்பனையில் உள்ளது !!

தற்பொழுது 2014 ம் ஆண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டாலும் இவைகளில்  திதி, நட்சத்திர முடிவு நேரங்களில் எண்ணற்ற பிழைகள் உள்ளது. தற்பொழுது 25க்கும் மேற்பட்ட வடிவில் இவை கடைகளில் (கேக் என்கிற பெயரில்) விற்பனையில் உள்ளது. இதில் பிழைகளுக்கு யார் பொறுப்பு என்பது அறிய முடியாது ஏனெனில் அச்சிட்டவரின் முகவரி அதில் இருக்காது!

இவைகள் வானியல் துறைகளான இஸ்ரோவின் தகவலுடன் ஒத்துப்போகாமல் மிகவும் பிழையுடன் காணப்படுகிறது.

சந்திரனுக்கு வின்கலத்தை அனுப்பிய இந்திய அரசு இப்படி தவறாக தகவலுடன் அமாவாசை, பௌர்னமி, முடிவுகளை வெளியிடும் காலன்டர்களை தடை செய்ய வேண்டும்.

இந்த காலண்டர்கள் அறிவியலுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. குறிப்பாக திதி முடிவுகள் நாஸா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளையும், கணித இராமநுஜம் பிறந்த இந்த மண்ணை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. 

பொதுமக்கள்  வானியல் துறைக்கு கொஞ்சம்கூட ஒத்துப்போக,  தொடர்பில்லாத இதுபோன்ற தவறான காலன்டர்களை புறக்கணிக்கவேண்டும். 

காலண்டர் என்பது வானியல். இந்த நிகழ்வு பூமிக்கு பொதுவானது. அப்படி இருக்க வானிலை துறையினர் செய்யும் சாகஸங்களை கேவலப்படுத்தும் இந்த காலண்டர் தயாரிப்பவர்கள் தங்கள் இஷ்டம்போல் தவறாக தகவலை வெளியிடுவதை அரசு ஒழங்குப்படுத்த வேண்டும்.

உணவு பொருட்களுக்கு அக்மார்க் போன்று காலண்டர்களுக்கும் அரசு தரநிர்ணயம் செய்ய வேண்டும்.

வானியல்துறை அறிவு கொஞ்சம்கூட இன்றி  இப்படி காலன்டர் தயாரித்து வெளியிட்டால் இதை  நம்பி தெவசம் செய்வதும், குழந்தைக்கு நட்சத்திரம் காண்பதும் தவறாகத்தான் இருக்கும்.

வானியல் என்பது அறிவியல் அதை பலதுறைகள் பயன்படுத்துகின்றன அதுபோல்தான் ஜோதிடமும் பயன்படுத்துகிறது.

வானியல் இல்லையேல் ஜோதிடம் இல்லை. ஆனால் ஜோதிடம் இல்லையென்றாலும் வானியல் துறை இருக்கும் ...! என்பதை இந்த காலன்டர் தயாரிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு சுமார் 292க்கும் மேற்பட்ட பிழைகள் உள்ளன. இதில் மிக அபத்தமான பிழைகள் 100க்கும் மேல் உள்ளது......இப்படிப்பட்ட காலன்டர்களை மக்கள் புறக்கணித்து இந்திய அரசின் வானியல் துறையினரின் காலன்டர்களை பயன்படுத்துங்கள்.

சந்திரனுக்கு வின்கலத்தை துல்லியமாக அனுப்ப உதவிய இந்திய வானியல் துறையின் மிக துல்லியமான தகவல் அடங்கிய இணையத்தை பார்த்து மிகச்சரியான திதி, நட்சத்திரம் அறிந்துக்கொள்ளுங்கள் (இது இந்திய வானியல் துறையினரின் பிரிவு)

http://www.packolkata.org/ 

மேற்படி இணைய தகவலையும் நீங்கள் வாங்கிய காலண்டரையும் ஒப்பிட்டு பாருங்கள் பின்னர் இந்த கட்டுரையின் உண்மை புரியும்.

மக்களையும் முட்டாளாக்கும் இதுபோன்ற காலண்டர்களை தமிழக அரசு ஒழுங்கப்படுத்த வேண்டும். மேலும் இவர்களால் பண்டிகைகள்கூட தவறாக கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ் தேதிகள் அறிவியலுக்கு ஒத்தப்போகாமல் பிழையாக உள்ளது என்பதும் உண்மை. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் மட்டும்தான் இப்படி  பிழையான அறிவியல் தகவல்களை காலண்டர்கள் வெளியிடுகிறது என்பது அவமானகரமான ஒன்று. 

இது தொடர்பாக யாரேனும் விவாதிக்க வேண்டுமென்றால் வாருங்கள் பிர்லா கோளரங்கத்தில் சந்திப்போம் அல்லது கணித மேதை இராமனுஜம் நினைவு ஆய்வு கூடத்தில் கணித பேராசிரியர்கள் முன்னிலையில் அறிவுபூர்வமாக விவாதிக்கலாம். நான் தயார் ...!

குறிப்பு: முதல் நாள் துவங்கி வருட கடைசிநாள் வரையில் ஏதேனும் ஒருவகையில் சிறிய, பெரிய பிழகளுடன் காணப்படும. கடந்த சில வருட காலண்டர்களில் தமிழ் தேதியும் தவறாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். 

பாலு சரவண சர்மா