Pages

Showing posts with label மாளய அமாவாசை. Show all posts
Showing posts with label மாளய அமாவாசை. Show all posts

Monday, October 03, 2011

புரோகிதர் சங்கம் - மாளய அமாவாசை



மாளய அமாவாசை 2011



       தாம்பரம் நகர புரோகிதர் சங்கம் சார்பாக வணிக நோக்கம் இன்றி மாளய அமாவாசை தர்பணம் 27.9.2011 செவ்வாய் கிழமை அன்று பழைய தாம்பரம், குளக்கரையில் நடத்தப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றார்கள்.

      நிகழ்ச்சியிடத்தில் ஆதிஸ்வரர் ஆதரவற்றோர் இல்லம், உதவும் உள்ளம் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் கலந்துக்கொண்டார்கள்.
தர்பணம் செய்ய வந்தவர்கள் தங்களால் இயன்ற நிதிஉதவியை மேற்படி ஆதரவற்றோர் இல்லத்திற்கு பித்தருக்கள் நினைவாக தானம் செய்தார்கள்.

      தர்பணத்திற்கு வருகைதந்த பக்தர்கள் அளித்த 30 போர்வை, 20 இரவு ஆடைகள், உணவுப்பொருட்கள் அனைத்தும் மேற்படி இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சமமாக பகிர்ந்து அளிக்கப்பட்டது

      சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கும் கேலாங் ஸ்ரீசிவன்கோவிலின் முன்னாள் செயலாளர் திரு&திருமதி. பொன்னம்மபலம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகைத்தந்து ஆதரவற்றோர் இல்லம் மற்றும் வேதபாடசாலை நிர்வாகிகளை கௌரவித்தார்கள்.
     
      புரோகிதர் சங்கத்தின் சார்பாக தர்பணத்தை பாலு சரவண சர்மா, கணேஷ் அய்யர், சுரேஷ் அய்யர், சிவகணேஷ் அய்யர், வெங்கிட் அய்யர்  நடத்திவைத்தார்கள்.