|
Tambaram Astrologer - Prohithar |
ஜோதிஷ சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒரு மனிதனின் வாழ்நாளில் சுப, அசுப கிரகங்களால் நன்மையும் தீமையும் விட்டுவிட்டு நிகழ்கிறது. இதில் நன்மையானது தீமையை காட்டிலும் 5% விழுக்காடு அதிகமாக இருப்பினும் அவனது பூர்வகர்மாக்களாலும், இப்பிறவியில் அவனது தர்மங்களாலும், நிஜமான இறைவழிபாடாலும் மேன்மையடைகிறான்
கூடுதலான 5% விழுக்காடு நன்மையை முழுதாக பயன்படுத்துபவன் மனிதர்களில் தெய்வமாகிறான்..!
ஒருவன் நல்லவன் என்றும் தீயவன் என்றும் தீர்மானிப்பதும் இந்த 5% சுபகிரக பார்வையே. ஆயினும் முழுமையாக எவரும் பூமியில் சுகத்தை அனுபவிப்பதில்லை. அதேநேரத்தில் வாழ்நாள் முழுவதும் தீமையை மட்டும் இறைவன் தரவில்லை. இப்பிறவியில் அவனது உள்ளுனர்வில் உள்ளதூய்மையே அவனது நிலைக்கு மிகமுக்கியகாரணமாகும். தர்மம், தன்னலமற்ற தொண்டும். அர்பணிப்பு குணங்களும் அவனை உலகத்தில் நாயகனாக சித்தரிக்கிறது.
எனவே இந்த 5% நன்மையை எப்படி முழுமையாக பெற்று நாம் உயரவேண்டும் என்கிற நல்நோக்கத்தை அடைய மகான்களின் நல்பாதையை கடைபிடித்தலே சிறந்ததாகும்.
120வருடங்கள் கொண்ட மனித வாழ்நாள் இன்று சற்று சுருங்கியிருப்பினும் கிரகங்களின் தசை - புக்தி - அந்தரங்களில் சுபகிரகத்தின் காலம் 5% கூடுதலாகவே உள்ளது.
பாப கிரக மொத்த ஆட்சி காலம் 57 ஆண்டுகள் 47.5 %
(சூரியன் 6 + செவ்வாய் 7 + ராகு 18 + சனி 19 + கேது 7)
சுப கிரக ஆட்சி மொத்தகாலம் 63 ஆண்டுகள் 52.5 %
(சந்திரன் 10 + குரு 16 + புதன் 17 + சுக்கிரன் 20)