Pages

Tuesday, December 15, 2009

Markazi 2009-2010 மார்கழி 2009 சுப நாட்கள்

மார்கழி மாதம், விரோதி வருடம் சுப முகூர்த்த நாடகள் மற்றும் பண்டிகைகள்

Auspicious Dates based on Drik-Vakya Panchangam, - Markazi month - Virothi Varusham (2009 – 2010)

மார்கழி மாத சுப நாட்கள்

மார்கழிமாத பிறப்பு மற்றும் முடிவு(தைமாத பிறப்பு)

சித்தாந்தம்

 

 

மாத பிறப்பு

மார்கழி மாத முடிவு(தை மாத பிறப்பு)

வரருசி வாக்கிய முறை

:

மார்கழி முதல் நாள்(16.12.2009) புதன்கிழமை

காலை 6:52 மணி

14.1.2010 தை மாத முதல் நாள்

மாலை 3:33 மணி

ஆரியபட்டீயம் முறை

:

 மார்கழி முதல் நாள்(16.12.2009) புதன்கிழமை

காலை 6:54 மணி

14.1.2010 தை மாத முதல் நாள்

மாலை 3:27 மணி

திருக்கணிதம் முறை

:

கார்திகை 29 செவ்வாய் இரவு 1:52

(ஆங்கிலப்படி 16.12.2009 புதன் அதிகாலை 1:52)

14.1.2010 தை மாத முதல் நாள்

மதியம் 12:38 மணி

 

"மாதங்களில் அவள் மார்கழி" _ கவி. கண்ணதாசன்

 

            இறைஉணர்வினை மேலோங்க செய்யும் இம்மாதம், இறைவனை வழிபடும் மாதங்களில் மிகவும் முதன்மையானது இந்த மார்கழி(தனூர் மாஸம்)ஆகும், பக்திமணம் கமழும் இம்மாதம் திருக்கோவில் வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.

            மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, ஹனுமத்ஜெயந்தி, நடராஜர் அபிஷேகம், ஆருத்திரா தரிசனம், கூடாரவல்லி, போகி பண்டிகைகள் சிறப்பு வாய்ந்தவை.

 

            மார்கழி என்றால் நினைவுக்கு முதலில் வருவது வண்ணக்கோலம் தான். ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும் கோலங்கள் அழகுற போடப்பட்டு கோலப்போட்டி நடைபெறும்.

            சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் அவர்களின் ஆராதனை திருநாளும் இம்மாதத்தில் தான் வருகைதந்து இசையால் இறைவனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது, இந்நாளில் திருவையாற்றில் அனைத்து இசை கலைஞர்களின் இசையால் ஆராதனை விழா நடைபெறும்.

            திருக்கோவில்களில் வைகறைப்பொழுதில் நாள் ஒன்றுக்கு ஒரு பாசுரம் என சைவ வழிபாட்டில் திருவெம்பாவையும், வைணவ வழிபாட்டில் ஆண்டாள் அருளிய திருப்பாவையும்  ஓதி செந்தமிழால் இறைவனை துதிக்கும் சிறப்பான மார்கழி மாதங்களில் உயர்ந்ததாகும்.

            திருவரங்கத்து சேர்ந்திசை திவ்யபிரபந்த முழக்கம் காதுகளில் தேனைவார்க்கும். மறவாமல் அரங்கத்து நாயகனை அதிகாலை வேளையில் தரிசிக்க இன்றே திட்டமிடுங்கள்.

é படம்: 2008 ஆம் ஆண்டு கோலப்போட்டியில் பரிசு பெற்றவர்

 

            இறைவனுக்காக அற்பணித்ததால் இம்மாத்தில் இல்லங்களில் திருமணம், புதுமனை புகுவிழா, நிச்சியதாம்பூலம் போன்ற நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகிறது. இதற்கு முதல் காரணம் விவசாயத்தில் நெல் தலைசாய்து அறுவடை காலம் மற்றும் பெரும்பாலானவர்கள் விரதம் மேற்கொள்வதால் விருந்து உணவு வகைகளை ஏற்பதில்லை என்பதால் இல்ல நிகழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன.

            மாத அடிப்படையில் நடைபெறும் தாலிக்கொடி மாற்றுதல் (திருமணப்பெண்)குழந்தைகளுக்கான திருமுடி இறக்கம், சீமந்தம், மஞ்சள் நீராட்டு விழா, பிறந்த நாளில் -ஆயுள் ஹோமம், இறைவழிபாட்டை முன்னிறுத்தி கணபதி ஹோமம், ருத்திர ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியன செய்யப்படுகிறது.

            இக்கால கட்டத்தில் பூமத்தி ரேகையின் தென்பகுதியில்  உள்ளவர்களுக்கு இப்பொழுது கோடைகாலம்(ஆனி மாதம் = ஜூன், ஜூலை மாத சூழல்). சூரியன் நிராயன (நிர்+அயனம் = புவி சாய்வு கோணம் நீக்கிய சூரிய பயன பாகை) தட்சிணாயன காலத்தில் பயனிக்கும் முதல் மாதமான ஆடி மாதமும், கடைசி மாதமான மார்கழியும் முகூர்த்தங்களுக்கு விலக்கானதாகும்

            மார்கழி பூக்கள்(டிசம்பர் பூ) பூத்துகுலுங்கும் மாதம் இது. தலையில் இரட்டை ஜடை பின்னல் போட்டு அதில் அழகுற தொடுத்த மார்கழிப்பூவை சூடி பள்ளிக்கு செல்லும் கிராமத்து மாணவிகளின் அழகே தமிழகத்தின் கலாசார அடையாளம்.

            தெருக்களில் பஜனைப்பாடல்கள் பாடி அதிகாலையில் இறைவனை இசையால் வழிபட்டு, பூஜையின் இறுதியில் தரப்படும் அந்த வெண்பொங்கல் பிரசாதம் உண்பது மிகவும் ஆனந்தமான அநுபவம். இசைக்கலை, கோலம் இடல். விதவிதமான பிரசாதம் என மக்களின் கலைகளை போற்றும் மாதம் மார்கழி !

 

மார்கழி மாத சுப நாட்கள்

 

ஞாயிறு 20.12.2009

வளர்பிறை சதுர்த்தி, முழுநாளும் நன்று

தாலிக்கொடி மாற்றுதல், கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியன செய்ய உகந்த நாள்.

 

புதன் 23.12.2009

காலை 6-7:30 கணபதி ஹோமம், காதுகுத்தல், முடி இறக்கம் நன்று

ஞாயிறு 27.12.2009 மதியம் 12 மணிவரை

தாலிக்கொடி மாற்றுதல், கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா

 

புதன் 30.12.2009

முழுவதும் நன்று.

தாலிக்கொடி மாற்றுதல், கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியன செய்ய உகந்த நாள்.

 

ஞாயிறு 3.1.2010

சங்கடஹர சதுர்த்தி, முழுவதும் நன்று.

கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியன செய்ய உகந்த நாள்.

 

திங்கள் 4.1.2010 சதுர்த்தி

அதிகாலையில் கணபதி ஹோமம் மிகவும் சிறப்பானது

 

புதன் 6.1.2010

மாலை 5 மணிவரை மட்டும் நன்று. அனைத்து சுபம்களும் செய்யலாம்

தாலிக்கொடி மாற்றுதல், கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியன செய்ய உகந்த நாள்.

 

திங்கள் 11.1.2010

முழுநாளும் நன்று, அனைத்து சுபங்களும் செய்யலாம்

தாலிக்கொடி மாற்றுதல், கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியன செய்ய உகந்த நாள்.

 

மார்கழி (விரோதி வருடம்) மிக நல்ல நாள் - நேரம்

05        20.12.2009    ஞாயி   சுக்கில சதுர்த்தி          திருஓ                      தனுஸ்              07.00-08.00

12        27.12.2009    ஞாயி   சுக்கில தசமி               அச்வினி          சி         தனுஸ்              06.30-07.30

15        30.12.2009    புதன்   சுக்கில சதுர்தசி          ரோஹிணி       சி         மகரம்               08.00-09.30

22        06.01.2009    புதன்   கிருஷ்ண ஷஷ்டி          உத்திரம்                  மீனம்               11.00-12.00

27        11.01.2010    திங்      கிருஷ்ண ஏகாதசி       அனுஷம்          சி         மகரம்              06.00-07.30

 

கரிநாள்: 21, 24, 26 டிசம்பர் 2009                                                   சதுர்த்தி: 20.12.2009, 3.1.2010 (மாலை), 4.1.2010 (காலை)

சஷ்டி: 22.12.2009 செவ்வாய் அன்று வருவது மிகவும் சிறப்பானது         பிரதோஷம்: 29.12.2009, 12.1.2010

கிருத்திகை: 28.12.2009 திங்கள் மாலை மற்றும் 29.12.2009 செவ்வாய் காலை மிகவும் சிறப்பானது

ஏகாதசி: 28.12.2009 திங்கள் வைகுண்ட ஏகாதசி, 11.1.2010 திங்கள் சர்வ ஏகாதசி திதி

 

சந்திர கிரஹணம்: (31.12.2009  இரவு - 01.01.2010 அதிகாலை) Partial Eclipse of the Moon, 31.12.2009 - 01.01.2010

 

அறிவியல் பார்வை:

            மார்கழி மாதம் 16 வியாழன் (31.12.2009) இரவு 10:45 மணி அளவில் துவங்கி அதிகாலை 3 மணி (1.1.2010)  வரை பகுதி சந்திரகிரஹணம் (Partial Eclipse) நிகழ்கிறது. இது இந்தியாவில் தெரியும். "பகுதி சந்திரகிரஹணம்" என்றால் பூமியின் உண்மையான நிழல்(Umbra) மற்றும் அடுத்த மறைநிழல் (Penumbra) பகுதியில் சந்திரனின்விட்டத்தில்  குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நிகழும் கிரஹணம்  ஆகும்.

 

            சந்திரனின் விட்டத்தை (2,159 mi = 3,474 kilometers)விட பூமியின் விட்டம் (7,926.41 miles = 12,756.32 kilometers). சுமார் 3.6 மடங்கு பெரியது எனவே பூமியின் நிழல் பகுதியை சந்திரன் கடக்க அதிக நேரம் எடுக்கும். முழு சந்திர கிரஹனம் மிகநீண்டு இருக்கும். இது பகுதி சந்திரகிரஹணம் என்பதால் மிக குறைந்தளவு நேரமே நிகழ்கிறது. 31.12.2009 அன்று நிகழும் சந்திரகிரஹணம் அதிகபட்டசமாக மறைநிழல் பகுதியில் துவங்கி முடியும் நேரம் 4மணி 11நிமிடங்கள், இதில் உண்மையான கிரஹண நேரம் இரவு 12:22 முதல் 01:24 வரை 62 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

 

ஜோதிட பார்வையில் : கிரஹணம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழ்கிறது, எனவே  திருவாதிரை, முன்பின் நட்சத்திரங்களான மிருகசீருஷம், புனர்பூசம், திரிகோணத்தில் அமைந்துள்ள (பத்தாம் நட்சத்திரங்கள்) சுவாதி, சதையம் நட்சத்திரத்தினர் நவக்கிரக சாந்தி அர்ச்சனை மற்றும் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யவும்

Astrological View: Thiruvadirai, Swathi, Punarpoosam, Mirugasirusham stars are affected by eclipse. perform Navagrha Archana and perform Annadanam (offering food ) to nearest Orphanage

 

 

 

            Eclipse will be visible in the region covering Alaska, Australia, Indonesia, Asia, Africa, Europe including the British Isles and the Arctic regions.

                The beginning of the umbral phase will be visible from the extreme south-eastern part of Australia, middle of South and North Pacific Ocean and extreme Solomon Is. The ending of the umbral phase will be visible from North and South Atlantic Ocean and Greenland.

                The beginning, the middle and the ending of the eclipse will be visible from all parts of India.

 

            அறிவியல் பார்வையில் சந்திரகிரஹணம் ஆய்வு செய்யும் அளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல, எனவே இதை அறிவியலாளர்கள் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை.

தங்கள் பகுதியில் நிகழும் கிரஹண நேரம் கணக்கிட எனது இணையதளத்தினை பார்வை இடவும்

Please Visit my website for calculate Eclipse time for your place

http://www.prohithar.com/eclipse_calculator.html

 

கிரஹண காரணிகள் ELEMENTS  OF  THE  ECLIPSE

Universal Time of  Opposition in Right Ascension  :  December  31d  19 h  04m  46s.055

                                                                         

MOON

SUN

 

h

m

    s

h

m

      s

Right Ascension

6

44

33.88

18

44

33.88

Hourly  Motion

 

 

162.60

 

 

11.04

 

°

'

    "

°

'

      "

Declination

24

03

02.79

-23

02

36.59

Hourly Motion

-

06

21.33

 

+

11.76

Equatorial Horizontal Parallax

 

60

57.40

 

 

08.94

True Semi-diameter

 

16

36.59

 

16

17.50

               

"கோவில்களில் கிரஹணத்தை முன்னிட்டு நடராஜர் அபிஷேகம், திருவாதிரை வழிபாடு நேரத்தில் மாற்றம் இருக்கும்"

Natrajar Abishegam & Thiruvathirai Pooja time may be change due to lunar eclipse

கிரஹண காலவியல் புள்ளிவிபரம் CIRCUMSTANCES  OF  THE  ECLIPSE

 

Universal

Time

Indian

Standard Time

Position Angle measured

 from the North Point of

Moon's Limb (N.E.S.W.)

The Moon being

in the Zenith in

Latitude

Longitude

 

date

h

 m

date

h

 m

°

°

'

°

'

Moon enters penumbra

31.12.2009

17

15.3

31.12.2009

22

45.3

139

+24

14

+100

49

Moon enters umbra

31.12.2009

18

51.7

01.01.2010

00

21.7

173

+24

04

+77

44

Middle of the eclipse*

31.12.2009

19

22.7

01.01.2010

00

52.7

-

+24

01

+85

20

Moon leaves umbra

31.12.2009

19

53.6

01.01.2010

01

23.6

207

+23

58

+62

55

Moon leaves penumbra

31.12.2009

21

30.0

01.01.2010

03

00.0

242

+23

47

+39

50

* Magnitude of the eclipse =0.081 (Moon's diam =1.0). Distance between the centers at middle 3571".4

Radius of shadow cone at Moon's distance : Penumbra 4730".7,  Umbra 2736".7

       The eclipse is visible in the region west of the eastern limit and east of the western limit.

       Here, Moonset and Moonrise times relate to visibility of the center of the Moon on the horizon.

            அறிவியல் பார்வையில் சந்திரகிரஹணம் ஆய்வு செய்யும் அளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல, எனவே இதை அறிவியலாளர்கள் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை.

தங்கள் பகுதியில் நிகழும் கிரஹண நேரம் கணக்கிட எனது இணையதளத்தினை பார்வை இடவும்

Please Visit my website for calculate Eclipse time for your place

http://www.prohithar.com/eclipse_calculator.html

வேண்டுகோள்:

            திருப்பாவை, திருவெம்பாவை நூல்களை கோவிலுக்கு வருபவர்களுக்கும், கிராமத்தில் - அரிஜன குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தானம் செய்தல் மகா புன்னியம்.

            அரிஜன குடியிருப்புகளில் உள்ள கோவில்களுக்கு மார்கழிமாத வழிபாட்டின் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவிசெய்து இந்து மதநெறிகளை வளர்க்கவும், மதமாற்றத்தினை தடுக்கவும் முன்வாருங்கள். இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள்.

 

Web : http://www.prohithar.com

Saturday, November 14, 2009

கார்திகை மாத பிறப்பு மற்றும் சபரிமலைக்கு மாலை போடும் நாள்

http://www.prohithar.com/virothi/karthigai2009.pdf

      

சென்னையில் ஐப்பசி மாதம் இறுதி நாள் 16.11.2009 திங்கள் அன்று சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர்  சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசிக்கிறார். எனவே மறுநாள் 17.11.2009 செவ்வாய் கார்திகை முதல் தேதி என கணணம் செய்யப்படுகிறது

 

கார்திகை மாதப்பிறப்பும் சித்தாந்த முறைகளும்

            ஆரியபட்டீயம்  சித்தாந்தம் 30:40 (மாலை 6:24 மணி) அளவில் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசம் ஆதாவது கார்திகை மாதபிறப்பு

            வரருசி சித்தாந்தம்: 30:49 (மாலை 6:28 மணி) அளவில் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசம் ஆதாவது கார்திகை மாதபிறப்பு

            சுத்த திருக்கணிதப்படி (அறிவியல் பூர்வமாக) 16.11.2009 திங்கள் அன்று பகல் 11:09 மணிஅளவில் விருச்சிக ராசியில் சூரியன் பிரவேசிக்கிறார் எனவே அன்று தான் கார்திகை மாதம் முதல் தேதி ஆகும் ஆனால் தமிழகத்தில் மாதப்பிறப்பினை சுத்த திருக்கணிதப்படி கணக்கிடுவதில்லை மாறாக வாக்கிய முறைப்படி மற்றும் ஆரியசித்தாந்தம் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பதுதான் உண்மை.(வாசன் திருக்கணிதப்பஞ்சாங்கத்தில்கூட இப்படித்தான்)

 

            சூரியன் மறைவு மாதப்பிறப்பினை கணக்கிடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது எனவே சூரிய அஸ்தமனத்தின் அடிப்படையில் வாக்கிய, ஆரியபட்டீயம் முறைப்படி 17.11.2009 அன்று தான் கார்திகை மாதபிறப்பு ஆகும். தமிழகத்தை பொருத்தமட்டில் தஞ்சை, திருச்சி, ஆற்காடு, சென்னை நகரங்களின் அடிப்படையிலேயே பஞ்சாங்கம் வெளியிடுவதால் 17.11.2009 செவ்வாய் அன்றுதான் கார்த்திகை மாத முதல் தேதி ஆகும்.         

 

16.11.2009 திங்கள் அன்று சென்னை சூரிய உதயம் 6:08, சூரிய அஸ்தமனம்: மாலை 5:39(சூரியனின் மையப்புள்ளி)

கேரளாவில் மலையாள மாதப்பிறப்பு கணக்கீடு ஒருநாளில் சூரிய உதயம்  முதல் சூரிய அஸ்தமனம்  வரை உள்ள காலத்தில்  3ல் 5பாகத்தின் உள் காலத்தில் (சுமார் மதியம் 1:12 மணி) சூரியன்அடுத்த இராசியில் பிரவேசிக்கும் காலம் மாதப்பிறப்பு ஆகும்  எனவே ஒரு நாள் முன்னதாக கேரளாவில் கார்திகை மாதம் பிறக்கும். கேரளாவில் திருக்கணிதமுறை பரவலாக பயண்படுத்தப்படுகிறது


English Date: Monday 16 November 2009 Malayalam Date: Vrishchikam 1, Kollam 1185


சபரிமலைக்கு மாலை போடுபவர்கள் (தமிழ் நாட்டில் உள்ளவர்கள்) ஐப்பசி மாதம் கடைசி நாள் அன்று மாலை 7 மணி அளவில் மாலை போடலாம் (தமிழ் மாதமும் பிறந்து விடும்)

                        மண்டலபூஜை மஹோச்சவம் காலம் Mandalapooja Maholsavam 15-11-2009 to 26-12-2009

                        மண்டலபூஜை Mandalapooja 26-12-2009,       Thirunada Opens 30-12-2009

                        மகரவிளக்கு Makaravilakku 14-01-2010
http://www.sabarimala.org.in


சாமியே சரணம் ஐயப்பா

மேலும் விபரம் அறிய

http://www.prohithar.com/virothi/karthigai2009.pdf

http://www.prohithar.com

Wednesday, September 09, 2009

மஹாளய பட்சம் (மாளய பட்சம்) Malaya Patcham 2009

Very Auspicious days for Deceased Ancestors  

5.9.2009 18.9.2009

வானவியல் கணிதம்: திதி -அமாவாசை ஓர் விளக்கம்

            திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் ஆகும், 360 பாகையை 30 ஆல் (அமாவாசை முதல் பவுர்னமி வரை உள்ள திதிகள் 30) வகுக்க வருவது 12 பாகை அதாவது ஒரு திதி என்பது 12 பாகை ஆகும் இதில் அமாவாசையை முதலாக வைத்து கணக்கிடும் முறை ஆகும்

 

            அமாவாசை என்பது சூரியனுக்கு மிக அன்மையில் 0 பாகை  முதல் 12 பாகையில் சந்திரன் வரும் நாள் ஆகும். துல்லியமாக கணிக்க நிராயண(Sidereal) அளவில் சூரியனின் பாகையிலிருந்து சந்திரனின்(Moon's Earth orbit) புவிவட்ட கோணத்தை கழிக்க மீதம் வரும் தொகையை 12ஆல் (ஒரு திதி என்பது 12 பாகை ஆகும்) வகுக்க வரும் அளவே திதி ஆகும்:

            உதாரணம். 18.9.2009 (புரட்டாசி 2) அன்று காலை 5:30 IST மணி அளவில் சூரியன் நிலை 151பாகை14மினிட் இதிலிருந்து  சந்திரன் நிலை140பாகை40 மினிட் கழிக்க = 10பாகை:34 மினிட்   வருவதால் அன்று அமாவாசை துவங்கி 1பாகை 26 மினிட் கடந்து பெருமளவு நாள் முழுவதும் அமாவாசை உள்ளது

            சூரியனின் பாகையிலிருந்து சந்திர பாகை கழிக்க 180 பாகை வரும் நாளே பவுர்னமி ஆகும். மிக விளக்கமாக அடுத்து வரும் வான் இயற்பியல் (Astrophysics) கட்டுரைகளில் தருகிறேன்.

 

            குறிப்பு: திதியின் பாதி அளவே கரணம் ஆகும்(6 பாகை அளவு), கரணம் மொத்தம் 11 ஆகும் அமாவாசை அடுத்த பிரதமை திதியின் பின்பாதியில்  "பவ" கரணம் துவங்கும்.

 

Tithi: The moment of new Moon, or that point of time when the longitudes of Sun and Moon are equal is called 'amavasya'. The tithi is the time taken by the Moon in increasing its distance from the Sun by 12 degrees. The complete revolution of the Moon (29.5 days) occupies 30 tithis for 360 degrees. Since the motions of the Sun and Moon are always varying in speed the length of a tithi constantly alters.

 

            இந்த ஆண்டு (விரோதிஆண்டு) மஹாளய பட்சம் (ஆவணி 20 ஆம் தேதி) 5.9.2009 சனிக்கிழமை அன்று துவங்கி (புரட்டாசி 2ஆம் தேதி) 18.9.2009 வெள்ளிக்கிழமை  மாளயஅமாவாசைஅன்று முடிவடைகிறது.

            This year Mahalayam Patcham beginning from 5.9.2009 Saturday and Ends on 18.9.2009 Friday

 

மாளய பட்சத்தில் அமாவாசை முன்னால் வரும் நாட்களில் மிகவும் சிறப்பான நாட்கள்

Auspicious days for ancestors - Before Malaya amavasai

 

            Wednesday       09.9.2009          புதன்கிழமை       மஹாபரனி (Maha Barani)

            Saturday           12.9.2009          சனிக்கிழமை       அஷ்டமி (Astami)

            Sunday             13.9.2009          ஞாயிறு              நவமி, வியாதிபாதம் (Navami, Vaithipaadam)

            Tuesday            15.9.2009          செவ்வாய்           ஏகாதசி (Ekadasi)

            Wednesday       16.9.2009          புதன்                துவாபரயுகாதி தர்பணம் (Dwabara Ugadi Tharpanam)

            Thursday           17.9.2009          வியாழன்           சஸ்தரஹத மாளயம் (Sastrahata Mahalayam)

            Friday               18.9.2009          வெள்ளி             மாளய அமாவாசை (Mahalaya Amavasai)

 

வழிபாடு:  மேற்படி தினங்களில் தர்பணம், அன்னதானம், ஆத்மாசாந்தி, படையல் வழிபாடு நன்று

Mode of Prayer: perform Tharpanam, Food Donation, Atma Shanthi Prayer

 

பசு- கோமாதா

 

            மாளயபட்சத்தில் மேல் குறிப்பிட்ட நாட்களில்  காலை 2 கிலோ கோதுமை தவிடு, 100 கிராம் வெல்லம், உறுவிய அகத்திகீரை 50 கிராம் எள்ளு ஆகியவற்றை கலந்து ஊரவைத்து பசுவிற்கு தானமாக தரவும்.


தாய் - தகப்பனார் உள்ளவர்கள் இதைசெய்யலாமா?

 

            தகப்பனார் இருந்தும் அவர் மாளயபட்ச வழிபாட்டை செய்யாத நிலையில் மகன், மகள் யார் வேண்டுமானாலும் மாளயபட்ச வழிபாட்டை செய்யலாம். "தர்பணம்" தவிர்த்து பசுவிற்கு தானம், ஆதரவற்றோர் இல்லங்களில் தானம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, ஆத்ம சாந்தி வழிபாடு, வேதபாடசாலைக்கு உதவி போன்ற வழிகள் மூலமாகவும் வழிபாடு செய்யலாம்.

 

            அமாவாசை தினம் என்பது இறைவனடி சேர்ந்த மூதாதையர்களை (பித்துர்களை) நினைத்து அவர்களுக்கு வழிபாடு செய்யும் நாளாகும். நமது முற்பிறவியில் நாம் அனுபவித்த துன்பங்களுக்கும், இனி வரும் பிறவிகளில் நற்பிறவி எடுக்கவும், நம் சந்ததியினிர் நலமுடன் வாழவும் வழிபட மிகவும் புனிதமான நாளே அமாவாசை ஆகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று நீராடி மூதாதையர்களுக்கு படையல், தர்ப்பணம், ஆத்ம சாந்தி பூஜை, பசுவிற்கு அகத்திகீரை தானம் போன்ற  வழிபாடுகளை செய்வது வழக்கம். அமாவாசையில் மஹாளய அமாவாசை மிகவும் குறிப்பிடத்தக்கது.

 

            மஹாளய பட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் சந்திர மாதப்படி பாத்ரபதம் (தமிழ்படி ஆவணி, புரட்டாசி மாதங்களில் வரும்) பவுர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை முதல் அமாவாசை வரை 15 தினங்களுக்கு தேய்பிறையில் இறந்த பித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது. இறந்து போனவரின் திதி தெரிந்தால் மாளயபட்சத்தில் வரும் அந்த திதி தினத்தன்றும், தெரியாவிட்டால் மஹாளய அமாவாசை தினத்தன்றும் பித்ருக்கள் நற்கதி அடைய பூஜை செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


            மஹாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்கள், குறிப்பாக ஆயுதம் மூலமாககொல்லப்பட்டோ, தற்கொலை செய்து கொண்டோ, அல்லது விபத்து மூலமாக அகாலமரணடைந்து போன பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக பூஜைசெய்யும் நாளாகும்.

 

            மஹாளய அமாவாசை தினத்தன்று உணவிற்காக ஏங்கும் மனிதனுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு, வேதபாடசலையில் பயிலும் மாணவர்களுக்கு  அன்னதானம் செய்வதுதான்மிக சிறந்தது என்று உபநிடதங்களும், வேதங்களும், சாஸ்திரங்களும் வலியுறுத்துகிறது.

            "தர்பணம் செய்து வைக்கும் பிராமணர்களுக்கு தருவது சம்பளம் (சம்பாவனை) அது தானம், தர்மம் அல்ல"

 

வெளிநாடுகளில் உள்ளவர்கள்:

            வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தர்பணம் செய்யலாம்

            தர்பணம் செய்ய இயலாதவர்கள் ஆத்ம சாந்தி வழிபாடு செய்யலாம்

            பாரதத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அல்லது பூர்வீக கிராமத்து பள்ளிகளுக்கு கணணி வாங்கி தருதல்,   ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யலாம்

 

பழைய கணணி - கம்பியூட்டர் தானம்

            தங்களிடம் உள்ள பழைய கம்பியூட்டரை மாளய பட்சத்தில் அருகில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தானம் செய்து புன்னியம் பெறுங்கள். மாணவனும் மகிழ்வான், தேசமும் அறிவார்த்த சமுதாயமாக மாறும்.

            படிக்கும் வசதியற்ற மாணவர்கள் சிலருக்கு கணணி தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும், மாணவர்களின் முகவரி அளிக்கப்படும். நேரிடையாக தாங்களே தானம் செய்யலாம்.

Old Computer Donation : Please donate your Old used computer (Working Condition) to nearest poor students on Mahalaya patcham period or on Malya Amaavasai date. I have some poor student address those who requiring computer. Please contact me if you are interested to dentate.

           

தர்பண சங்கல்பம்: Sankalpam- மாளயம் அன்று சங்கல்பம் - தமிழாக்கம்

               

            கலியுகம்:5111, விரோதி வருடம்(23ஆம் ஆண்டு), தட்க்ஷணாயனம்(சூரியன் தெற்கில் உதயம்), வருஷ ருது (மழைக்காலம்), புரட்டாசி மாதம் (சூரியன் கன்னி இராசியில் அதாவது 150 பாகை மேல் 180 பாகை உள்ளாக) வெள்ளிக்கிழமை (சுக்கிரன் கிரகத்தை குறிக்கும் நாள்) பூரம் நட்சத்திரம் (சந்திரன்133.20 146.40 பாகை இடையில் பயணிக்கும் நாள்), அமாவாசை திதி (சூரியனுக்கு அருகில் இணைப்பு நிலையில் சந்திரன் உள்ள நாள்)

            சங்கல்பம் என்பது வானவியல் நிலைகளை வடமொழியில் கூறுவதாகும்

 

தர்பண சங்கல்பம்: Sankalpam

09.09.2009        புதன்         மஹாபரணி

            விரோதி நாம ஸம்வத்ஸரே   தக்ஷிணாயனே   வர்ஷ ரிதௌ   ஸிம்ம  மாஸே   க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்யதிதௌ   சௌம்ய  வாஸர   அபபரணீ  நக்ஷத்ர யுக்த்தாயாம் அஸ்யாம்  பஞ்சம்யாம் புண்யகாலே பித்ருவ்ய மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம்   ஸகருஸ்ய   காருண்ய  பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸக்ரூன் மஹாளய     ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே..

 

12.09.2009        சனி        மத்யாஷ்டமி

            விரோதி நாம ஸம்வத்ஸரே   தக்ஷிணாயனே   வர்ஷ ரிதௌ   ஸிம்ம  மாஸே   க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ   ஸ்திர  வாஸர   ம்ருகசிரோ  நக்ஷத்ர யுக்த்தாயாம் அஸ்யாம்  அஷ்டம்யாம் புண்யகாலே  பித்ருவ்ய மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம்   ஸகருஸ்ய   காருண்ய  பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸக்ரூன் மஹாளய     ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே..

 

18.09.2009        வெள்ளி      ஸர்வ  மஹாளய     அமாவாஸை

            விரோதி நாம ஸம்வத்ஸரே   தக்ஷிணாயனே   வர்ஷ ரிதௌ  கன்யா மாஸே   க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம்   புண்யதிதௌ   ப்ருகு வாஸர   பூர்வபல்குனி நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம்  அமாவாஸ்யாயாம்    புண்யகாலே  தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

 

Tuesday, 15.9.2009 செவ்வாய் ஏகாதசி: அஜா : புரட்டாசி(பாத்ரபத) க்ருஷ்ண ஏகாதசியை அஜா என்று சொல்வது. உலகத்தில் பிறப்புடையவன் துன்பமில்லாமல் இருப்பது அரிது. பிறந்ததுமே துன்பக்கடலில் மூழ்குவான். இது இயற்கை. இந்த ஏகாதசியில் வ்ரதம் இருப்பவன் ஏற்பட்ட துன்பங்களிலிருந்து விடுபட்டு அஸத்ருசமான புதுப்பிறவையை அடைவான். எனவே இதற்கு அஜை எனப்பெயர். அரிச்சந்திரன் வ்ருத்தாந்தம் நாம் அறிந்ததே. ராஜ்யத்தை இழந்தவன் மனைவி மக்களைத் துறந்தான். தானும் ஒரு சண்டாளனிடம் அடிமையாய் இருந்தவன். இப்படி பலஅல்லல்களுக்கு ஆளானவன். இவனை கெளதம முனிவர்கண்டார். இரக்கம் கொண்டார். இந்த ஏகாதசியில் வ்ரதமிருந்தால் துன்பங்கள் அகலும் என்றார். இதன்படி இவன் நடந்தான். மனைவியையும் மக்களையும் இராஜ்யத்தையும் பெற்றான். எனவே இதில் உபவாஸம் இருப்பவன் இழந்தவைகளைப்பெற்று ஸுகமடைவான்.

 

நவராத்திரி:

          மாளய அமாவாசை மறுநாள் சனிக்கிழமை 19.9.2009 முதல் நவராத்திரி கொலு பண்டிகை துவங்கி திங்கள் 28.9.2009 விஜய தசமி அன்று முடிவடைகிறது. இவ்வருடம் நவராத்திரி பண்டிகைகள் முழுமையாக உள்ளது.

            சரஸ்வதி பூஜை: ஞாயிறு 27.9.2009                                     விஜயதசமி: திங்கள் 28.9.2009


தர்மம் தலைமுறை காக்கும்

ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் வேதபாடசாலை

 

                ஆதீஸ்ரர் இல்லம் ஆதரவற்றோர் இல்லம்                                : 94444 85491

            குட்லைப்சென்டர் (மன வளர்ச்சி குன்றியோர்)                        : 2226 4151, 2226 4152

            அக்ஷ்யா ஆதரவற்ற முதியோர் இல்லம்                                  : 2276 1658, 98410 08325

            சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லம்                              : 94444 94657, 94448 08915

            பவுஷ்ய தீபம் ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்        : 2276 1889, 94440 00889

            உதவும் உள்ளங்கள் (ஆதரவற்ற குழந்தைகள்)                       : 2226 0612, 6544 6378

            ஸ்ரீ சாரதா சக்தி பீடம் ஆதரவற்ற சிறார் இல்லம், பள்ளி             : 2276 0612, 2233 3214

            சிவாகம வேதபாட சாலை                                        : 65129744, 94443 12367

            அஹோபில மடம் வைணவ வேத பாட சாலை                           : 2239 7567, 94440 47567

            காயத்ரி ஞானவாபி  (ஆதரவற்றோர்  இறுதி சடங்கு)                : 22212984, 2238 3333


z Please Visit  http://www.prohithar.com/mistakes.html   for Typing and information Mistakes in this document z

இந்த கட்டுரையில் பிழைகள் இருப்பின் திருத்தப்பட்டு  உடன் எனது இணையதளத்தில் "பிழைகள்" பக்கத்தில் வெளியிடப்படும்

 

மாளய அமாவாசை முழுவிபரம்
Malaya Amavasai Full details

 

தர்பண மந்திரம் தமிழில்
Tharpana Mantram(Smartha, Vadakalai, Thenkalai)

 

ஒலி வடிவில் தர்பண மந்திரம் பகுதி1 - பகுதி 2
Tharpana Mantram(Audio- Mp3) Part 1 - Part 2