Tuesday, December 28, 2010
National Conference on Panchanga Ganitham, Tirumala 2010
हिन्दू धर्म आचार्य सभा
தேசிய அளவிலான பஞ்சாங்க சீர்திருத்த மாநாடு முதன்முறையாக இந்து ஆச்சார்ய சபாவினால் திருமலை திருப்பதியில் தேவஸ்தானத்தின் ஆஸ்தான மண்டபத்தில் 24,25,26 டிசம்பர் 2010 தேதிகளில் நடைபெற்றது. இதில் மடாதிபதிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடுமுழுவதும் இருந்து பஞ்சாங்க கணிதர்கள் கலந்துக்கொண்டனர்.
மாநாட்டின் முடிவில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
http://picasaweb.google.com/prohithar/NationalConferenceOnPanchangaGanithamTirumala2010#
I am not interested in orkut
Friday, December 17, 2010
மார்கழி, தை மாத சுப நாட்கள்
மார்கழி மாத கிரஹண தகவல்
தைமாத பிறப்பு
தைமாத சுப நாட்கள்
தைப்பொங்கல் வழிபாடு நேரம்
வியதீபாதம் - விளக்கம்
கட்டுரை இணைப்பு:
http://www.prohithar.com/vikruthi/markazi2010.pdf
Web: http://www.prohithar.com
Thursday, November 18, 2010
கார்தீகை தீபம் ஏற்ற உகந்த நேரம்
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf
Here I attached detailed information on karthigai deepan festival
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf
- சிவ ஆலய தீபம் என்று? எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது
- வீட்டில் கார்திகை தீபம் என்று?
- வைணவ கோவில்களில் கார்திகை தீபம் என்று? வைகானாஸம், பாஞ்சராத்திர ஆகமம் முறை
- கார்திகை தீபம் நிர்ணய விதி
- பௌர்னமி, நட்சத்திர கணணம்
- கார்தீகை நட்சத்திரத்தின் சிறப்பு
சிறப்பு பார்வை:
விளக்கொளி பெருமாள் கோவில் - காஞ்சிபுரம்
புத்திர பாக்யம் தரும் புத்திரன் கோட்டை கோவில் - புத்திரன் கோட்டை(மதுராந்தகம்)
மேலும் சுவையான தகவல்களுடன்.....
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf
Here I attached detailed information on karthigai deepan festival
http://www.prohithar.com/vikruthi/karthigai_deepam_2010.pdf
Thursday, November 11, 2010
இணைய பெயர் எண்ணியல் கணிப்பான்
Online Numerology Counter
இணைய பெயர் எண்ணியல் கணிப்பான்
இதன்மூலம் தங்களின் பெயருக்குரிய எண்ணை எளிதில் அறியலாம்
பெயர் எண்ணியலுக்காக சிறப்பான ஒரு பக்கம்
http://www.prohithar.com/Numerology/index.html
பாலு சரவண சர்மா
Astrologer, Indian Astrology, Numerologist, Vedic Astrology,
Nameologist,Numerology,
Nameology, Vastu
--
Learn Simple Tamil Email Typing: http://www.prohithar.com/tamiltype
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com,prohithar@gmail.com
Web: http://www.prohithar.com
குரு பெயர்ச்சி பலன்கள் 21.11.2010
குரு பெயர்ச்சி விளக்கம்
குரு கிரக வழிபாடு - எச்சரிக்கை
பலன் மற்றும் பாதிக்கும் இராசிகள்
திருக்கணித - வாக்கிய வேறுபாடு என்ன: அறிவியல் வழி விளக்கம்
சூரிய சித்தாந்தப்படி என்று குருபெயர்ச்சி?
திருக்கணிதப்படி என்று குருபெயர்ச்சி?
மேலும் விளக்கமாக....
http://www.prohithar.com/vikruthi/guru_transit_vakya_21_nov_2010.pdf
Web: http://www.prohithar.com
Guru(Jupiter Transit) 2010
Guru Peyarchi 2010
Do and Do not at guru worship
More details ....
http://www.prohithar.com/vikruthi/guru_transit_vakya_21_nov_2010.pdf
கார்திகை தீபம் ஏற்ற உகந்த நேரம்
கார்திகை மாதத்தில் என்று வாசல்கால் நிறுத்தலாம்
கார்தீக தீபம் என்று ?
கார்தீகை தீபம் - சிறு விளக்கம்
கார்தீகை தீபம் ஏற்ற உகந்த நேரம்
மற்றும் மேலும் விளக்கம் அறிய ......
http://www.prohithar.com/vikruthi/karthigai2010.pdf
www.prohithar.com
Wednesday, November 03, 2010
தீபாவளி & தீபாவளி நோன்பு என்று வழிபடவேண்டும் ?
- தீபாவளி என்று கொண்டாட வேண்டும் ?
- When Diwali Falls ?
- தீபாவளி நோன்பு என்று வழிபடவேண்டும் ?
- தலைதீபாவளி குளியல் நல்ல நேரம்
- Auspicious Time for Diwali Lightup
- தீபாவளி அன்று தீபம் ஏற்ற நல்ல நேரம்
- நரக சதுர்தசி ஒர் விளக்கம்
மேலும் விளக்கம் அறிய
இணையம்: http://www.prohithar.com/downloads/webdeepavali2010.pdf
Diwali 2010, Deepavali 2010, Naraga Chathurthi 2010
Friday, October 15, 2010
சரஸ்வதி பூஜை நல்ல நேரம்
சரஸ்வதி பூஜை 16.10.2010 சனிக்கிழமை
உலகை காக்க அவதாரம் எடுத்த ஜகன்மாதா பராசக்தியை நவராத்திரி 9 நாட்களில் லட்சுமி, சரஸ்வதி, காளியாக வழிபட்டு கடைசி நாளில் மகா நவமி அன்று சரஸ்வதி பூஜை என்றும் ஆயுத பூஜை என்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. வடமாநிலங்களில் காளி பூஜையாக வழிபாடு செய்ப்படுகிறது
சரஸ்வதி பூஜை அன்று நமது தொழில் கருவிகள், கணக்கு புத்தகங்கள், பள்ளி புத்தகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதி படத்திற்கு வெள்ளை மலர்கள்(மல்லி, சம்பங்கி, வெண்டாமரை) கொண்டு அலங்காரம் செய்து, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி படித்து நெய்வேதியம் செய்து தீபாரதனை செய்ய வேண்டும் முடிவில் உலக நண்மை, தொழில், அறிவு மேன்மை அடைய பிரார்த்தனை செய்திடல் வேண்டும்.
சரஸ்வதி பூஜையில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வழிபட்டு மறுநாள் படித்தல் மிகவும் விசேஷமானது.
சரஸ்வதி பூஜை வழிபாடு நல்ல நேரம்
மிக நல்ல நேரம்(அஷ்டம சுத்தியான நல்ல நேரம்)
காலை 6:30 - 8:00
மதியம் 12:30 - 1:20
மாலை 5:00 - 6:00
மாலை 6:30 - 7:30
சரியான இராகு காலம் காலை 8:56 - 10:25
சரியான எமகண்டம் மதியம் 1:23 - 2:52
100 கிராம் நவதான்யத்தை நன்கு ஊரவைத்து, அதில் 1 கிலோ கோதுமை தவிடு, 100 கிராம் வெல்லம் கலந்து குதிரை அல்லது பசுவிற்கு தானம் செய்வது மிகவும் புன்னியமானது.
விஜய தசமி 17.10.2010 ஞாயிறு
மறுநாள் பூஜையில் வைத்த புத்தகத்தை எடுத்து படிக்கவும், தொழில் கருவிகளை கொண்டு தொழிலை துவக்குவது மிகவும் நன்மை தரும். சிறுவர்கள் பள்ளி பாட புத்தகத்தை விஜயதசமியில் படிப்பது மிகவும் பலன்தரும், சரஸ்வதி கடாக்ஷத்தால் அறிவும், கல்வியும் மேம்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள்.
விஜய தசமி அன்று தொழில் துவக்க, புத்தகம் படிக்க நல்ல நேரம்
காலை 5:30 - 6:30, 9:00 - 9:50, 11:00 - 11:50
சிறுவர்களை பள்ளியில் சேர்க்க 9:00 - 9:50
Monday, October 04, 2010
வணிக நோக்கம் இன்றி தர்ம சிந்தனையுடன் மாளய அமாவாசை கூட்டு தர்பணம்
தேதி: 7.10.2010 வியாழன்
நேரம்: 7:30 மணி முதல் பகல் 1 மணி வரை
இடம்: பழைய தாம்பரம் குளம்
நோக்கம்:
வணிக நோக்கம் இன்றி தர்ம அடிப்படையில் மூதாதையர் வழிபாடு
5 ரூபாயில் தர்பணம்(பெண்கள், பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு)
15ரூபாயில் தர்பணம் (+10ரூபாய் ஆதரவற்ற இல்லங்களுக்கு தானம்)
அரசு பள்ளிக்கு பொருளுதவி
ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி
இலவசமாக மூதாதையர் திதி அறிந்து கூறுதல்
மேலும் அன்றைய தினம் தானமாக வரும் உணவுப்பொருட்கள் பெரும்பங்கு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தரப்படும்.
புரோகிதருக்கு தரும் பணம் அவரின் பணிவிடைக்கு தரும் சம்பளம் (சம்பளம்)
அதை தர்மம், தானம் என தவறாக புரிந்துக்கொள்ளக்கூடாது!
தானமும், தர்மமும் சரியான நபருக்கு அடைவதே எமது எண்ணம்
Friday, October 01, 2010
அயோத்தி தீர்ப்பு முழுவிபரம் Full Bench hearing Ayodhya Matters
அலகாபாத் உயர்நீதிமன்ற மூவர் அடங்கிய சிறப்பு அமர்வு நீதிமன்ற தீர்ப்பை தரவிறக்கம் செய்ய பார்வையிட
http://www.prohithar.com/Ayodhya.html
Decision of Hon'ble Special Full Bench hearing Ayodhya Matters
நீதியரசர்கள்நீதிமான்: திரு. உ. கான் அவர்கள் (Hon'ble Sibghat Ullah Khan).
நீதிமான்: திரு. சுதிர் அகர்வால் அவர்கள் (.Hon'ble Sudhir Agarwal)
நீதிமான்: திரு. வீர்சர்மா அவர்கள் (Hon'ble Dharam Veer Sharma, J.)
30.9.2010 அன்று மேற்படி நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பு முழு விபரங்கள்
இதில் தரப்பட்டுள்ளன
இணைப்பு: http://www.prohithar.com/Ayodhya.html
1.10.2010
Wednesday, September 29, 2010
குழந்தை பிறந்த நேரம் நல்ல நேரமா? தோஷமா ?
நல்ல நேரமா? தோஷமா ?
விரிவான கேள்வி பதில்
இணைப்பு :
http://prohithar.in/babynames/birth_time_dosham.pdf
29.10.2010
மஹாளய அமாவாசை 7.10.2010 வியாழன் கிழமை
மஹாளய அமாவாசை 7.10.2010 வியாழன் கிழமை
Malaya Amavasai 2010, 2011, 2012
Malaya patcham - Malaya amavasai
மாளயபட்சம் - மாளய அமாவாசை
சந்திர மாத அடிப்டையில் பாத்ரபத மாஸ - பகுள பட்சம் (தேய்பிறை) காலமும் அதன் முடிவில் வரும் அமாவசை மஹாளய அமாவாசை எனப்படும். இது தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதத்தை ஒட்டியும், சில வருடங்களில் ஆவணி மாத இறுதியிலும் வரும்
மஹாலயம் என்றால் மஹான்களின் இருப்பிடம் என்று பொருள். நமது முன்னோர்கள் பூமியில் 16 நாட்கள் தங்கி தனது சந்த திகளுக்கு நன்மை செய்ய ஆசிர்வதிக்கும் காலம் இது.
இக்காலத்தில் எமதர்மன் மறைந்த நமது முன்னோர்களை அவர்கிளின் பெற்றோருடன் பூமிக்கு செல்ல அனுமதியளித்து அக்காலத்தில் பூமியில் உள்ள மகன்கள், மகள்கள் அளிக்கும் தர்பணம், தானம் மூலமான உபசாரங்களை எற்க கட்டளையிடுகிறார்.
இக்காலத்தில் உணவளிக்கமாட்டார்களா என மறைந்த மூதாதையர் ஏங்குவார்கள். அவர்களின் ஆத்மாசாந்திக்காக அன்னதானம் செய்வது மிக அவசியமானது
மாளயத்தில் அன்னரூபமான சிரார்தம் மிகவும் சிறப்பானது. அதை செய்ய இயலாதவர்கள் அன்னதானம் செய்யலாம்.
குறிப்பு:
மாளயத்தில் தர்பணம் செய்துவைக்கும் பிராமணருக்கு தரும் பணம் சம்பளம் (சம்பாவனை) ஆகும் அது தானம் அல்ல!
அவரின் கடமைக்கு தரும் பணத்தை தானம் என்று தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம்.
எனவே தானத்தை தனியாக சரியான வழியில் செய்யவேண்டும்.
மாளயபட்சம்:
மாளயபட்சம் வெள்ளி 24.9.2010 முதல் துவங்கி வியாழன் 7.10.2010 அன்று மாளய அமாவாசையில் முடிவடைகிறது. மாளயத்தில் வரும் திதி, நட்சத்திரம், யோகம் அடிப்படையில் தர்பணம், தான தர்மம் வழிகளில் முன்னோர்களை வழிபட மிகவும் உன்னதமான நாட்கள் கீழே தரப்பட்டுள்ளது
மஹாபரணி: 27.9.2010 திங்கள்
மஹா வியதீபாதம்: 30.9.2010 வியாழன்
மத்யாஷ்டமி: 01.10.2010 வெள்ளி
அவிதவா நவமி: 02.10.2010 சனி
துறவு பூண்டவர்களுக்கு - சந்நியாஸ மஹாளயம்: 4.10.2010 திங்கள்
விதவைகளுக்கு - கஜச்க்ஷமய மஹாளயம்: 5.10.2010 செவ்வாய்
விபத்து, அகால மரணம், துர்மரணம்: சஸ்தரஹத மாளயம்: 6.10.2010 புதன்
மாளய அமாவாசை வியாழன் 7.10.2010
மஹாளய அமாவாசை அன்று பஞ்சாங்கம்
பகல் பொழுது(அகஸ்), சூரிய பிம்ப மத்திமத்திற்கு +3 நிமிடம் வேறுபாடு
சூரிய உதயம் 5:58 சூரிய அஸ்தமனம் 5:55
இராகு காலம்: மதியம் 1:26 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
எமகண்டம்: காலை 5:58 மணி முதல் காலை 7: 27 மணி வரை
சங்கல்பம்:
திருக்கணிதப்படி (தமிழகத்திற்கு மட்டும் பொருந்தும்)
விக்ருதி வரஷம், தக்ஷ்ணாயனம், வர்ஷ ருது, பாத்ரபத(அல்லது கன்யா) மாஸம், அமாவாஸ்ய திதி, உத்திர பல்குனி நட்சத்திரம்(காலை 7:42 வரை பின்னர் அஸ்தம் நட்சத்திரம், பிராம்யம் யோகம்(மதியம் 1.07 வரை பின்னர் ஐந்திரம் யோகம்), சதுஷ்பாதம் கரணம். குரு வாரம்
வாக்கியப்படி (தமிழகத்திற்கு மட்டும் பொருந்தும்)
விக்ருதி வரஷம், தக்ஷ்ணாயனம், வர்ஷ ருது, பாத்ரபத(அல்லது கன்யா) மாஸம், அமாவசை திதி, உத்திர பல்குனி நட்சத்திரம்(காலை 8.10 வரை பின்னர் அஸ்தம் நட்சத்திரம், பிராம்யம் யோகம்(மதியம் 2.30 வரை பின்னர் ஐந்திரம் யோகம்), சதுஷ்பாதம் கரணம். குரு வாரம்
அடுத்த வரும் மாளய அமாவாசைகள்:
வாக்கியம், திருக்கணிதம், சூரிய சித்தாந்தம் முறைகள்
27.10.2011 செவ்வாய்
15.9.2012 சனிக்கிழமை அன்று வரும் அமாவாசை அதிக பாத்ரபத அமாவாசை இதை கணக்கில் கொள்ளக்கூடாது
15.10.2012 திங்கள் கிழமை நிஜபாத்ரபத அமாவாசையே மாளய அமாவாசை
தானம்
கோமாதா:
மாளைய பட்சத்தில் தினமும் காலையில் பசுமாட்டிற்கு 2 கிலோ தவிடு, வெல்லம், உறுவிய அகத்திகீரை ஆகியவற்றை கலந்து ஊறவைத்து காலையில் தானம் செய்யவும்.
மாளய பட்சத்தில் ஏதேனும் ஒருநாளில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யலாம்.
வேதம் கற்பிக்கும் வேதபாட சாலைகளுக்கு மாளைய பட்சத்தில் உதவிசெய்வது மகா புண்ணியமாகும்
காஞ்சி ஸ்ரீசங்கரமட வேத பாடசாலை: +91 44 2722 2115 ( www.kamakoti.org )
ஸ்ரீஸீதாராம குருகுலம் வேதபாடசாலை: +91 44 24361210 (www.vedicgurukulam.com )
சிவாகம வேதபாடசாலை:+91 9444312367
அஹோபிலமட வேதபாட சாலை:+91 44 22397587
ஸ்ரீ சாந்தீபனி வேதபாட சாலை:+91 44 24895875 (www.madhuramurali.org )
தேவார பாடசாலை(தமிழ் வேதம்):+91 9345566947 (www.thevarapadasalai.com )
ஆதரவற்றோர் இல்லங்கள்:
ஆதீஸ்ரர் இல்லம் ஆதரவற்றோர் இல்லம் : 94444 85491
குட்லைப்சென்டர் (மன வளர்ச்சி குன்றியோர்): 2226 4151, 2226 4152
அக்ஷ்யா ஆதரவற்ற முதியோர் இல்லம்: 2276 1658, 98410 08325
சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லம்: 94444 94657, 94448 08915
பவுஷ்ய தீபம் ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்: 2276 1889, 94440 00889
உதவும் உள்ளங்கள் (ஆதரவற்ற குழந்தைகள்): 2226 0612, 6544 6378
ஸ்ரீ சாரதா சக்தி பீடம் ஆதரவற்ற சிறார் இல்லம், பள்ளி: 2276 0612, 2233 3214
மாளைய பட்சம் அன்ன தானம் செய்ய மிகவும் உகந்த காலம் ஆகும்
மாளய பட்ச திதிகளில் தர்பணம் செய்யும் பலன்கள்
பிரதமை: செல்வம் பெருகும் (தனலாபம்)
துவிதியை: வாரிசு பெருகும்(வம்ச விருத்தி)
திருதியை: நல்ல விவாஹ சம்பந்தம்(வரன்) கிட்டும்
சதுர்த்தி: பகைமை விலகி, எதிரிகள் தொல்லை
பஞ்சமி: விரும்பிய பொருள் கிடைக்கும்(ஸம்பத்து விருத்தி)
சஷ்டி: மனதில் தெய்வீக தன்மை மேலோங்கும் (மற்றவர்கள் நம்மை போற்றுவார்கள்)
சப்தமி: மேலுலகம் (பரலோக) ஆசிர்வதிக்கும்
அஷ்டமி: உயரிய அறிவை தரும்(புத்தி)
நவமி: ஏழுப்பிறவிக்கும் நல்ல மனைவியை(கணவனை) தரும்
தசமி: விருப்பங்கள் தடைநீங்கி விரைவில் கிட்டும்
ஏகாதசி: வேத வித்தைகள், கல்வி, கலைகள் கிடைக்கும்
துவாதசி: தங்கம், வைர ஆபரங்கள் சேரும்
திரியோதசி: நல்ல குழந்தைகள், மேதை, கால்நடைச்செல்வம்,நீண்ட ஆயுள்
சதுர்தசி: முழுமையான இல்லறம் (கணவன் - மணைவியுடன் நல்ல வாழ்க்கை)
அமாவாசை: மூதாதையர், ரிஷிகள், தேவர்கள் ஆசிர்வாதம்
Pdf format
Malaya patcham - Malaya amavasai
மாளயபட்சம் - மாளய அமாவாசை
Mahalaya Amavasai 2010, 2011, 2012
© காப்புரிமை 2010 - 28 செப்டம்பர் 2010
Friday, September 17, 2010
புரட்டாசி மாதத்தில் புதிய இல்ல கிரஹப்பிரவேசம் செய்யலாமா?
மாளயபட்சத்தில் வீடு மாறாலாமா?
புரட்டாசியில் வீடுகட்ட துவங்குவது எப்படி?
போன்ற ஐயங்களுக்கு விளக்கம் அறிய
கீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும்
http://www.prohithar.com/downloads/purattaci-house_worming.pdf
17.9.2010
Thursday, September 09, 2010
விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு நேரம்
விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு நேரம்
11.9.2010 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று திருக்கணிதப்படி சதுர்த்திதிதியில் பஞ்சமிதிதி தொட்டுக் கொண்டிருப்பதும் பகலில் சித்திரை நட்சத்திரம் அபாரண காலத்தில்(படையல் போடும் காலம்) வியாபித்திருந்து, சனிக்கிழமையில் வருகை தந்துள்ளது மிகவும் சிறப்பானதாகும்.
வழிபாட்டு நேரம்
விநாயகர் சதுர்த்தி அன்று(11.9.2010) காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்கு முன்னர் இலக்னத்தில் சந்திரன்இருக்க, லக்னம் சித்திரை நட்சத்திரத்தின் வழியாக பயணிக்கும் காலம் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த காலம் ஆகும். அந்த நேரத்தில் 7ஆம், 8ஆம் (அஷ்டம சுத்தி) இடம் சுத்தமாக இருப்பதால் இல்லறத்தில் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டு நன்மை கிட்டும், நோய் நீங்கி ஆயுள் விருத்தியடையும்.
மேற்படி நேரத்தில் வழிபட இயலாதவர்கள் காலை 10:30 மணிக்கு மேல் மதியம்12 மணிக்கு முன்னதாக சுப ஹோரையில் வழிபடுதல் நன்று.
சுபம்
--
Learn Simple Tamil Email Typing: http://www.prohithar.com/tamiltype
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com,prohithar@gmail.com
Web: http://www.prohithar.com
Tuesday, June 08, 2010
ஆனி மாத நல்ல நாட்கள், சந்திர கிரகணம் Aani month auspicious Lunar Eclipse
Aani Month auspicious dates
ஆனி மாத சுப நாட்கள்
http://www.prohithar.com/vikruthi/Aani2010.pdf
பகுதி சந்திர கிரகணம் 26.6.2010 முழுதகவல்
Partial Lunar Eclipse 26.6.2010 details
http://www.prohithar.com/vikruthi/chandra_grhanam_26062010.pdf
Web: http://www.prohithar.com
Tuesday, May 18, 2010
சமஸ்கிருதத்தில் - குழந்தை பெயர்கள் Sanskrit - Baby Names
வடமொழி பெயர்கள், பொருள், அகராதி | |
சமஸ்கிருத (வடமொழி) குழந்தை பெயர்களும் பொருளும் | |
வடமொழி அகராதி
| |
மேலும் அதிக தகவலுக்கு
http://www.prohithar.com/babynames/index.html
Friday, May 14, 2010
தமிழ் குழுந்தை பெயர்கள் Tamil Baby Names
5000 Tamil Baby Names
Female Baby Names
பெண் குழந்தை பெயர்கள் பாகம் 1
பெண் குழந்தை பெயர்கள் பாகம் 2
Male Baby Names
ஆண் குழந்தை பெயர்கள் பாகம் 1
ஆண் குழந்தை பெயர்கள் பாகம் 2
Other lingual names and equal Tamil name
மாற்று மொழிக்கு ஈடான தமிழ் பெயர்கள் பாகம் 1
மேலும் அறிய
http://www.prohithar.com/babynames/index.html
www.prohithar.com
Monday, May 10, 2010
வாஸ்து நாள் 2010, 2011, 2012, 2013, 2014, 2015
Vastu Dates for year 2010 to 2015
வாஸ்து நாள் 2010ஆம் வருடம் முதல் 2015ஆம் வருடம் வரை
மேலும் இதில்
- வாஸ்து நேரம் - துல்லியமாக
- வாஸ்து நாள் அன்று இராகு காலம், எமகண்ட நேரம்
- எந்த நட்சத்திரத்தினர் வாஸ்து நாள் அன்று பூமி பூஜை செய்யக்கூடாது
- உண்மையான வாஸ்து நிபுனர் யார்?
- வாஸ்து கல்வி எவ்வளவு வருடங்கள் ?
- வாஸ்து மூலாதார நூல்கள், கிரந்தங்கள், சில்ப சாஸ்திர நூல்கள்
- வாஸ்து பூஜை பொருள் பட்டியல்
- வாஸ்து பூஜை முறை
- வாஸ்து பூஜை முன்னேற்பாடுகள்
Vastu Dates for year 2010 to 2015
வாஸ்து நாள் 2010ஆம் வருடம் முதல் 2015ஆம் வருடம் வரை
Web: http://www.prohithar.com
Atchaya Trithiai அட்சய திருதியை 2010, 2011, 2012, 2013, 2014, 2015
சிங்கப்பூர், மலேசியாவில் அட்சய திருதியை அன்று நகை வாங்கிட நல்ல நேரம்அட்சய திருதியை அன்று யார் நகை வாங்கக்கூடாது?
அட்சய திருதியை அன்று எப்பொழுது நகை வாங்கலாம்?
அட்சய திருதியை அன்று தானம் தர்மம்
2011 முதல் 2015 ஆண்டுவரை அட்சய திருதியை வரும் நாட்கள்
மேலும்......
அட்சய திருதியை வரலாறு - தொல்லியல் வரலாறு. எஸ். இராமசந்திரன்
தானம்-தர்மம் Orphanages in and around Tambaram
அட்சய திருதியை அன்று ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்தல் மிகவும் புன்னியமானது. ஆதி சங்கரருக்கு தானம் செய்ததினால்தான் பரம ஏழை வீட்டில் சுபிக்ஷ்ஷம் பெருகியதை எடுத்துக்காட்டும் சிறப்பான நாள் ஆகும். எனவே முடிந்த வரை தான, தர்மம் செய்து அட்சய திருதியையின் முழு பலனை அடைவீர்.
மேலதிகவிபரங்களுக்கு ...Web: http://www.prohithar.com
Monday, February 08, 2010
மாசி மாத பிறப்பும், நல்ல நாட்களும்
மாசி ( Maasi - Mithuna Month) 13th Feb 2010 to 14th March 2010
Auspicious Dates based on Drik-Vakya system, Virothi Varusham
முகூர்த்த நாட்கள், திருக்கணிதம் – வாக்கியப்படி, விரோதி வருஷம்
மாசி மாத பிறப்பு:
தை மாதம்30ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலைக்கு பின்னர் நள்ளிரவில்( ஆங்கிலப்படி சனிக்கிழமை)
u வாக்கியப்படி: 13.2.2010 அதிகாலை 02:27 u திருக்கணிதப்படி: 13.2.2010 அதிகாலை 01:37
மாசி மாதம் பிறக்கும் பொழுது மகாசிவராத்திரி சம்பவிக்கிறது.
மாசி மாத முடிவு:
மாசி மாதம் 30 ஆம்நாள் இரவு(14.3.2010 ஞாயிறு) அன்று நிராயண நிலையில் சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கிறார்
u திருக்கணிதப்படி 10:29 மணி u வாக்கியப்படி இரவு 9:30 மணி
காரடையான் நோன்பு:
14.3.2010 ஞாயிறு அன்று இரவு 8:11 மணிக்கு மேல் 10:30 மணி முன்னர் காரடையான் நோன்பு நூற்கலாம்.
மாசி மாத சுப முகூர்த்த நாட்கள் Maasi Month Auspicious Dates
3 திங்கள் (15.2.2010) After Noon, All ceremonies
மதியம் 12 மணி மேல் நன்று
நிச்சியம், காது குத்தல், மஞ்சள் நீராட்டு விழா, திருமண வரவேற்ப்பு
5 புதன் (17.2.2010) Whole day, All ceremonies
நாள் முழுவதும் நன்று அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பொருத்தமானது.
6 வியாழன் (18.2.2010) Whole day, All ceremonies சுக்கில சதுர்த்தி
நாள் முழுவதும் நன்று – அனைத்து சுப நிகழ்ச்சிகளும்
அதிகாலை கிரஹப்பிரவேசம், கணபதி ஹோமம் நன்று.
7 வெள்ளி (19.2.2010) Whole day, All ceremonies
நாள் முழுவதும் நன்று அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பொருத்தமானது.
13 வியாழன் (25.2.2010) Whole day, All ceremonies
நாள் முழுவதும் நன்று அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பொருத்தமானது.
14 வெள்ளி (26.2.2010) Early morning only, House warming, Ganapathi Homam
அதிகாலை மட்டும் (சூரிய உதயத்திற்கு முன்னர்) கிரஹப்பிரவேசம், கணபதி ஹோமம் நன்று.
19 புதன் (3.3.2010) சங்கடஹர சதுர்த்தி After 11 AM, All ceremonies
மதியம் 11 மணி மேல் நன்று: நிச்சியம், மஞ்சள் நீராட்டு விழா, திருமண வரவேற்ப்பு
மாலை சங்கடஹர சதுர்த்தி கணபதி ஹோமம் நன்று
20 வியாழன்(4.3.2010) சதுர்த்தி அதிகாலையில் மட்டும் Early morning and Whole day - All ceremonies
அதிகாலை கணபதி ஹோமம், கிரஹப்பிரவேசம் மிகநன்று
நாள் முழுவதும் நன்று அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பொருத்தமானது
21 வெள்ளி (5.3.2010) Early morning only, House warming, Ganapathi Homam, wedding, Baby Naming
காலை 8 மணி வரை நன்று. அனைத்து சுபங்களும் செய்யலாம்
அதிகாலை கணபதி ஹோமம் நன்று
22 சனி (6.3.2010) வாஸ்து நாள்
ஆரம்ப நேரம் காலை 9:35
முடிவு நேரம் காலை 11:05
பூஜை நேரம் காலை10:29 முதல் காலை 11:05 வரை
அடுத்த வாஸ்து நாட்கள்
22 பங்குனி திங்கள் கிழமை (5.4.2010 இந்தியாவில் சில பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது)
10 சித்திரை வெள்ளிக்கிழமை (23.4.2010)
27 வியாழன்(11.3.2010) Whole day, All ceremonies
நாள் முழுவதும் நன்று அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பொருத்தமானது.
28 வெள்ளி (12.3.2010) Early morning only, House warming, Ganapathi Homam
சூரிய உதயம் முன்னர் அதிகாலை கணபதி ஹோமம் நன்று.
29 சனிக்கிழமை (13.3.2010) சனிப்பிரதோஷம் Early morning only, Rudra Homam
அதிகாலை மற்றும் மாலையில் ருத்திர ஹோமம், மிருத்திஞ்ச ஹோமம் மிக நன்று
30 ஞாயிறு (14.3.2010) காரடையான் நோன்பு: Karadayan Nonbu
அன்று சுமங்கலி பூஜை, கோபூஜை, சப்த கன்னிபூஜை, திருமணம் வேண்டி பூஜை செய்ய மிகவும் உகந்த நாள்
இரவு 8:11 மணிக்கு மேல் 10:30 மணி முன்னர் காரடையான் நோன்பு நூற்கலாம்.
www.prohithar.com
Sunday, January 03, 2010
தை மாதம், விரோதி வருடம் சுப முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகைகள்
தை மாதம், விரோதி வருடம் சுப முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகைகள்
Auspicious Dates based on Drik-Vakya Panchangam, -Thai month - Virothi Varusham (2010)
தை மாத பிறப்பு (Makara Sankranthi) மற்றும் தை மாத முடிவு(மாசி மாத பிறப்பு) - சென்னை
வரருசி வாக்கிய முறை வியாழன் 14.1.2010 தை மாத முதல் நாள் மாலை 3:32 மணி
13.2.2010 சனிக்கிழமை அதிகாலை 2.25மணி (தமிழ்படி தை 30 வெள்ளி இரவு)
ஆரியபட்டீயம் முறை வியாழன் 14.1.2010 தை மாத முதல் நாள் மாலை 3:27 மணி
13.2.2010 சனிக்கிழமை அதிகாலை 2.17மணி (தமிழ்படி தை 30 வெள்ளி இரவு)
திருக்கணிதம் முறை வியாழன் 14.1.2010 தை மாத முதல் நாள் மதியம் 12:38 மணி
13.2.2010 சனிக்கிழமை அதிகாலை 1.37மணி (தமிழ்படி தை 30 வெள்ளி இரவு)
தைமாதம் முதல் தேதியிலிருந்து சூரியன் நிராயன மகர ராசியில் (நிராயண 270°முதல் 300° வரை) சஞ்சரிப்பார் அதே நேரத்தில் சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பார் இதை உத்திராயண புன்னியகாலம் என்றும் பருவகாலத்தில் "பின்பணி" காலம் (ஹேமந்த ருது) என்றும் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இதை மகரசங்காரந்தி என அழைக்கப்படுகிறது
இதர நாடுகளில் தை மாதம் பிறப்பு: சர்வதேச தேதி கோடு துவங்கும் பகுதியின் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பதால் நியூசிலாந்து முதல் இந்தியாவின் மேற்கே கிரீன்விச் வரை உள்ள நாடுகள் அனைத்தும் இந்தியாவில் கடைபிடிக்கும் அன்றே தை மாத முதல் தேதி ஆகும்.
மாத பிறப்பு கணணம் - சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம்: Makara Sankaranti - Beginning Time
"தை பிறந்தால் வழி பிறக்கும்" திருமணம் கூடிவரும்........!
தமிழ் மாத பிறப்பு சூத்திரம்: "சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் எந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கிறாரோ அந்த நாளே சூரியன் பிரவேசித்த இராசிக்குரிய மாதம்" ஆகும் என்கிற விதிப்படி கணணம் செய்தால்.
சூரியனின் நிராயண ஸ்புடம் (புவி சாய்வு கோணம் கழித்து) நிலையான புள்ளி, மாறும் அயனாம்ச வேறுபாடு அடிப்படையில் கொண்டு கணித்த புள்ளிவிபரம் அடிப்படையில்.
இந்திய மைய நேரம்(IST) உஜ்ஜெயினி பட்டணத்தில் (82 º30´E கிழக்கு தீர்கரேகாம்சம் 23 º11´N வடக்கு அட்சரேகாம்சம்) சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் மதியம் 12:38(இந்திய நேரம்)
அஸ்தமனம் மாலை 6:00 என்கிற நிலையில்(சூரிய அஸ்தமனத்தை கணிக்க பல்வேறு விதமான கணக்கீடுகள் உள்ளன அவற்றை இங்கு விளக்க இடமில்லை)
18:00 - 12:38 =5:22 மணி வேறுபாடு கிடைக்கிறது (சூரிய அஸ்தமனம் வரை இடையில் உள்ள நேரம்)
சர்வதேச இந்திய நேரம் வேறுபாடு + மேல் கிடைத்த வித்யாச நேரம் = +5:30 + 5:22 =+10:52 முழுமையாக +11 மணி என்று எடுத்துக்கொண்டால் எந்த நாட்டில் சர்வதேச நேரம் +11(UTC) மணி ஆகிறதோ அந்த நாடுகளில் (23 º11´N வடக்கு அட்சரேகாம்சம் கீழ்) மாலை நேரத்தில் (சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர்) தைமாதம் பிறக்கிறது.
இனி இதை பாகையாக மாற்றுவோம்: 1 பாகைக்கு = 4 நிமிடங்கள், 11 மணிக்கு சமமான பாகை கணிக்க
பூமியின்நிலநடுக்கோட்டின்(Equator) வடக்கே 23 º11 N மற்றும் தெற்கே 23 º11 S அட்சரேகை( latitude) க்குட்பட்ட பகுதியில், தீர்கரேகை(Longitude) +165 E சர்வதேச தேதி எல்லைக்கோடு உட்பட்ட பகுதியில் கிரீன்விச் நேரப்படி கிழக்கு +11:00 East மணி நேர வித்யாசத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் 14.1.2010 அன்று தான் தை மாதப்பிறப்பு
பூமியின் தென்பகுதியில் 23 º11´S அட்சரேகாம்சம் கீழும் (Southern Hemisphere) உள்ள, கிரீன்விச்சிலிருந்து கிழக்கு 165 º E தீர்காம்சம் வரை உள்ளவர்களுக்கும் 14.1.2010 அன்றுதான் தைமாத பிறப்பு
குறிப்பு: நில நடுக்கோட்டிற்கு கீழ் தெற்கே உள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தற்பொழுது கோடைகாலம் எனவே சூரிய அஸ்தமனம் உள்ளூர் நேரப்படி சுமார் 6:45 மணி ஆகும் இந்த நிலையில் அவர்களுக்கும் 14.1.2010 அன்றுதான் தை முதல் நாள்.
கிரீன்விச் பகுதிக்கு மேற்கே உள்ள நாடுகளில் வட, தென் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் 14.1.2010 அன்றுதான் தை மாத முதல் நாள்
23º11 N வடக்கு அட்சரேகைக்கு (Northern Hemisphere) மேல் உள்ள நாடுகள், ஜப்பான் வடக்கு ரஷ்யா, வடக்கு, வட கிழக்கு சீனா, தைவான், ஜப்பான்நாடுகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மாதம் பிறப்பதால் மறுநாள் 15.1.2010 அன்று தை முதல் நாள்.
தை முதல் நாள் மாற்றம் இருப்பின் இப்பகுதிகளின் வாஸ்து நாள், கரிநாள், தனியநாள் இவைகளில் மாற்றம் இருக்கும்.
பொங்கல் வைக்க சிறந்த நேரம்(தமிழகம்) Auspicious Time for Cooking Sweet rice(Pongal) and Sun Prayer
பொங்கல் அன்று சூரியன் 12:38க்கு பிறகு மகர ராசியில் பிரவேசிப்பதால்
நன்பகல் 12:38 க்கு பிறகு பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடத்துவது நன்று.
z சென்னை சூரிய உதயம்:6:35 z சூரிய அஸ்தமனம்: 18:01
z மொத்த பகல் காலம்(அகஸ்):11மணி 26 நிமிடங்கள்
z ராகு காலம்: 1:43 p.m. to 3:09 p.m. z எமகண்டம்: 6:35 a.m. to 8:00 a.m
ராகுகாலம்,எமகண்டம் என்பது பகல் பொழுது மொத்த நேரத்தில் 8ல் 1 பங்கு ஆகும். பகல் பொழுது.இரவுப்பொழுதும் சமமாக வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வரும். அதை
சமாக நாள் என்று அழைக்கிறோம்
மிகநல்ல நேரம்: அன்றைய தினம் மேஷ லக்னத்தில் (பரணி நட்சத்திரத்தில்) நன்பகல்
12:38Noon க்கு மேல் பகல் 13:25pm மணி முன்னர் அஷ்டம சுத்தி(8ஆம் இடம் சுத்தம்) அடுப்பு மூட்டுதல், பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு செய்தல் மிகவும் நன்று
மாட்டுப்பொங்கல் அன்று கிரஹணம் முன்னரை பகல் 9 மணிக்கு முன்னர் மாட்டுப்பொங்கல் வழிபாடு நன்று. மாலை 4:42 க்கு பிறகு மாட்டுவண்டி ஊர்வலம், கிராம தேவதை, அம்மன் கோயில் வழிபாடு நன்று.
தை அமாவாசை வழிபாடு:
இவ்வருடம் தை அமாவாசை தை முதல் நாள் பொங்கல் அன்று வருகிறது. அன்று காலை 10:12 முதல் அமாவாசை துவங்கி மறுநாள் நன்பகல் 12:42 வரை உள்ளது. மறுநாள் அமாவாசை முடிவில் சூரியகிரஹணம் நடைபெறுகிறது.
பண்டிகை நாட்களில் அமாவாசை வரும் பொழுது "முதலில் அமாவாசை வழிபாடு" செய்த பின்னர் பண்டிகையை கொண்டாட வேண்டும். எனவே காலையில் 10:15 மணி அளவில் தர்ப்ணம் செய்து வீட்டை தூய்மைபடுத்தி பின்னர் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும்.
பொங்கல் அன்று வரும் அமாவாசை வழிபாட்டுக்காக தனியாக "படையல் இல்லை", காக்கைக்கு அன்னம் இல்லை. பொங்கல் வழிபாட்டில் சூரிய வழிபாடு முடிந்ததும் காக்கைக்கு அன்னம் வைக்கவேண்டும். மேலும் மறுநாள் 15.1.2010 கிரஹணம் துவக்கத்தில் கிரஹண தர்ப்பணம் செய்தல் நன்று.
அமாவாசை மற்றும் அயன புண்ணிய கால தர்பண சங்கல்பம்: விரோதி, உத்திராயணம், ஹேமந்த ருது, மகர மாஸம்( சாந்திரமான புஷ்ய மாஸம், பகுள பட்ச), கிருஷ்ண பட்ச அமாவாஸ்ய, பூர்வாஷாட நட்சத்திரம், குரு வாஸரம்,
கிரஹண புண்ணியகால தர்ப்பண சங்கல்பம்: விரோதி, உத்திராயணம், ஹேமந்த ருது, மகர மாஸம்( சாந்திரமான புஷ்ய மாஸம்- பகுள பட்ச), கிருஷ்ண பட்ச அமாவாஸ்ய, உத்திராஷாட நட்சத்திரம், ப்ருகு வாஸரம் ஸூர்யோப ராக புண்யகாலே திலதர்ப்பணம் கரிஷ்யே. என்று சூரிய கிரஹண துவக்கத்தில் செய்யவேண்டும்.
பொங்கல் வழிபாடும் - பசு, காளை, எருமை மாடுகளும்
Animal welfare and Orphanage
தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும் பொங்கல் ஆகிய மூன்று நாட்களும் காலையில் பசு, காளை, எருமை இவைகளுக்கு கோதுமை தவிடு 3 கிலோ, வெல்லம் 100 கிராம்,வாழைப்பழம்2, ஒரு பிடி அரிசி ஆகியன கலந்து காலையில் (நமது சிற்றுண்டிக்கு முன்னர்) தானம் செய்யவும். பசு மாடு கிடைக்காத சூழலில் அருகில் இருக்கும் பசுவை பராமரிக்கும் "கோசாலை" களுக்கு ஒரு தொகையை தானம் செய்யலாம். அல்லது கிராமத்தில் உள்ள பசு வைத்து பிழைக்கும் ஏழை விவசாயிக்கு பணமாக அனுப்பலாம். தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் பசுவை பாதுகாக்கும் "கோசாலை" முகவரிகள்
சிவ ஆகம வேத பாட சாலை, முடிச்சூர், தொலைபேசி எண்: 6561 9798, 94443 12367
அஹோபில மடம், கிழக்கு தாம்பரம், தொலைபேசி எண்: 2239 7567, 94440 47567
பொங்கல் பண்டிகையும் விவசாய கூலித்தொழிலாளர்களும்
Agriculture - Daily wages workers and handloom weavers
விவசாயத்தில் ஈடுபடும் சிறு விவசாயிகள் இலாபம் இன்றியும், கூலித்தொழிலாளர்கள் குறைந்த வருவாய் காரணமாக மிகவும் வறுமையில் வாடுகின்றனர். நமது வயிறை நிரப்பும் அந்த குடும்பத்தினர் மகழ்ச்சியாக இந்த பொங்கலை கொண்டாட அவர்களுக்கு புத்தாடைகளை வாங்கித்தருவது மகா புண்ணியம் ஆகும்.
மேலும் பருத்தி ஆடைகளை, கைத்தறி ஆடைகளை வாங்கி ஏழை நெசவாளி, பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்போம். "நம் மானம் காக்கும் அந்த நெசவாளிக்கு அதுவே வெகுமானம் ஆகும்".
அன்மை காலங்களில் கைத்தறி நெசவாளிகளுக்கு கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டது அவர்களின் ஏழ்மைக்கு ஓர் அடையாளம்.
சூரிய கிரஹணம் Annular Eclipse of the Sun Friday 15.1.2010 வெள்ளிக்கிழமை
இந்தியாவில் 15.1.2010 வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் அன்று கங்கண சூரிய கிரகணம் காலை துவங்கி மாலையில் நிறைவடைகிறது. இடத்தின் தீர்க, அட்ச ரேகை அளவுகளுக்கு ஏற்ப கிரகண நேரம் வேறுபடும். மிக அதிகமான நேரம் தமிழகத்தின் தென்பகுதியில் தெரியும்.
இடம் Place | துவக்கம் Begin | உச்சம் Greatest | முடிவு End |
பூமியில் On Earth | காலை 9:35 AM | பகல் 12:51PM | மாலை 15:38 PM |
சென்னை Chennai | காலை 11:25 | பகல் 13:30 | மாலை 15:16 |
கன்னியாகுமரி வைர மோதிர காலம் m துவக்கம் பகல் 13:10 m முடிவு 13:21 |
ஜோதிட பார்வையில் :
கிரஹணம் உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழ்வதால் முன், பின் நட்சத்திரங்களான பூராடம், திருவோணம், 10ஆம்(திரிகோண) நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம் நட்சத்திரத்தினர் நவக்கிரக சாந்தி அர்ச்சனை மற்றும் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யவும்
Astrological View:
Uthiradam, Pooradam, Thiruvonam, Uthiram, Karthigai stars are affected by Solar Eclipse. Perform Navagrha Archana at temple and Annadanam (offering food ) at nearest Orphanage
தங்கள் பகுதியில் நிகழும் கிரஹண நேரம் கணக்கிட எனது இணையதளத்தினை பார்வை இடவும்
Please Visit my website for calculate Eclipse time for your place
http://www.prohithar.com/eclipse_calculator.html
"உலகத்திலேயே 4500 ஆண்டுகளுக்கு முன்னதாக நாள்காட்டியை முதன் முதலாக பயன்படுத்தியவர்கள் இந்தியர்களே. அக்கால கட்டத்தில் வானியலில் சிறந்து விளங்கினார்கள். காலம் அறிந்து பயிர் வைத்த சிறந்த நாகரீகத்தினை சார்ந்தும், கிரகணம் பற்றிய அறிவும் அவர்களிடத்தில் இருந்தது. ஆயினும் அவர்கள் பயன்படுத்திய கணக்கீடு முறைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்" - Prof. M.N. Saha (History of calendar, Chapter V, Page 212)
மகா சிவராத்திரி ஏன் தை மாதத்தில் வருகிறது?
மகா சிவராத்திரி சந்திர மாதத்தின் அடிப்படையிலானது. தேய்பிறை சதுர்தசி என்று 15 நாழிகை இரவில் உள்ளதோ அன்று சிவராத்திரி ஆகும். "மாக பகுள சதுர்தசி" (சந்திர மாதமான "மாக" மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்தசி திதி) மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
இது சந்திர மாதம் என்பதால் 29.5306 நாட்கள் ஒருமாதம் என்ற நிலையில் ஒரு சந்திர வருடம் 354.36 நாட்களை கொண்டது, இதனால் ஒவ்வொரு வருடமும் 10.89 நாட்கள் குறைந்து சராசரியாக2.7 சூரிய (தமிழ்) வருடங்களுக்கு ஒரு முறை சந்திர வருடத்தில் ஒரு மாதம் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. எதிர் வரும் சித்திரை மாதத்தில் வரும் சந்திரமான - வைசாக மாதம் "அதிக மாதம்" எனக்கொண்டு அதனை அடுத்து வரும் மாதத்தை நிஜ மாதம் என கணக்கிடுகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் இது போல் சிவராத்திரி சுமார் 12நாட்கள் முன்னதாக வந்து 2.7 வருடங்களுக்கொரு முறை மாசி மாத துவக்கத்தில் அல்லது மாசி மாதத்தின் முதல் நாள் வரும்.
19 சூரிய வருடம் சுழற்ச்சியில் தை மாதத்தின் கடைசி நாளில் அல்லது மாசி மாத முதல் நாளில் மஹா சிவராத்திரி வரும் வாய்ப்பு உள்ளது.
கடைசியாக தை மாதத்தின் கடைசி நாளில் சிவராத்திரி வந்த வருடம்
1991 பிப்ரவரி 12 செவ்வாய் கிழமை தமிழ் வருடம் பிரமோதூத வருடம் தைமாதம் 30ஆம் நாள் இரவு மஹா சிவராத்திரி வந்தது
1972 தை மாத இறுதி நாளில் மஹா பிரதோஷமும் மாசி 1ஆம் தேதி சிவராத்திரி.
1953 தை மாத இறுதி நாளில் மஹா பிரதோஷமும், மாசி முதல் நாள் சிவராத்திரியும்.
கடந்த சில வருடங்களில் மகா சிவராத்திரி வந்த நாட்கள்
11 மாசி (2009) 24 மாசி (2008) 5 மாசி (2007) 15 மாசி (2006) 25 மாசி (2005) 9 மாசி (2004 )
தை (விரோதி வருடம்) மிக நல்ல நாள் - நேரம். Thai(makara masa) Month Auspicious Dates
கீழே தரப்பட்டுள்ள நாட்கள் பொதுவாக நல்ல நாட்கள் அது தங்களின் நட்சத்திரத்திற்கு பொருத்தமானதா என்பதை ஜோதிடரிடம் கலந்து ஆலோசிக்கவும்.
17.01.2010 ஞாயிறு சுக்கில துவிதியை
திருவோணம் அமிர் கும்பம் 07.30-09.00
18.01.2010 திங் சுக்கில த்ருதீயை
அவிட்டம் சித்த கும்பம் 09.00-10.00
21.01.2010 வியா சுக்கில ஷஷ்டி
உத்திரட் சித்த கும்பம் 08.30-10.00
22.01.2010 வெள் சுக்கில ஸப்தமி
ரேவதி அமிர் மகரம் 07.00-08.00
27.01.2010 புதன் சுக்கில துவாதசி
மிருகசீரிடம் சித்த மகரம் 06.00-07.30
04.02.2010 வியா கிருஷ்ண ஷஷ்டி
சித்திரை அமிர் கும்பம் 07.30-09.00
05.02.2010 வெள் கிருஷ்ண ஸப்தமி
ஸ்வாதி சித்த கும்பம் 07.30-09.00
12.02.2010 வெள் கிருஷ்ண சதுர்தசி
உத்திரா சித்த கும்பம் 07.00-08.30
விரிவாக - தை (விரோதி வருடம்) மிக நல்ல நாள் - நேரம். Detailed auspicious dates and time
Sunday,17.1.2010 ஞாயிறு காலை 9:30 மணி மட்டும் Till 9:30 am , All Ceremonies
அனைத்து விசேஷங்களும் செய்யலாம்.
Monday, 18.1.2010 திங்கள் முழுவதும் நன்று Whole day, All Ceremonies
அதிகாலை கணபதி ஹோமம், அனைத்து சுப நிகழ்ச்சிகளும்
Tuesday, 19.1.2010 செவ்வாய் சுக்ல சதுர்த்தி - தைமாத சுக்ல சதுர்த்தி மிகவும் விசேஷமானது.
Very auspicious day for Ganapathi Homam at early morning, அதிகாலை கணபதி ஹோமம் நன்று
Wednesday, 20.1.2010 புதன் மாலையில் மட்டும் Evening time only
நிச்சியம், மஞ்சள் நீராட்டுவிழா, சீமந்தம். Auspisious for Betrothal, Puberty ceremony, Pregnant ceremony (Simantham)
Thursday, 21.1.2010 வியாழன் முழுவதும் நன்று Whole day
Early morning Ganapathi Homam, House warming, and suitable for all ceremonies
அதிகாலை கணபதி ஹோமம். கிரஹப்பிரவேசம் மற்றும் நாள் முழுவதும் அனைத்து சுபங்களும்
குறிப்பு: வளர்பிறையில் வரும் தனியநாள் தோஷம் அற்றது
Friday, 22.1.2010 வெள்ளி அதிகாலை முதல் நாள் முழுவதும் Whole day
Suitable for all ceremonies அனைத்து சுபங்களும்
Monday 25.1.2010 திங்கள் வாஸ்து நாள் Vastu Date
வாஸ்து நேரம் (சென்னை): காலை 9:48 மணி முதல் காலை 11:18 வரை, மிகவும் சிறப்பான நேரம் 1.42 முதல் 11.18 வரை, ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00மணி வரை, எமகண்டம்: காலை 10:30 முதல் நன்பகல் 12:00 வரை சித்திரை நட்சத்திரத்தினருக்கும், துலா ராசியினருக்கும் அன்று சந்திராஷ்டமம் எனவே அவர்கள் அன்றைய தினம் வாஸ்து பூஜை செய்யக்கூடாது. Vastu Time(Chennai): Starting time 9:48 am, End Time: 11:18 am, Pooja Time 10:42am to 11:18am, Ragu Kalam: 7:30am to 9:00am Emakandam: 10:30am to12:00 noon, Inauspicious to Thulam Rasi and Chandrastamam for Chitra Nakshtram. Image: Boomi devi படம்: பூமி தேவி |
Wednesday, 27.1.2010 புதன் நாள் முழுவதும் நன்று Whole day
Suitable for all ceremonies from early morning, அதிகாலை முதல் அனைத்து சுப நிகழ்ச்சிகளும்
Thursday, 28.1.2010 வியாழன் மாலை மட்டும் Evening only
Auspisious for Betrothal, Puberty ceremony, Pregnant ceremony (Simantham) நிச்சியம், சீமந்தம், மஞ்சள் நீராட்டு விழா
Friday, 29.1.2010 வெள்ளி மதியம் 3 மணி வரை மட்டும் (Till evening 3PM)
Early morning Ganapathi homam, Hair offering, Ear pierce, and all ceremonies (except Wedding) அதிகாலை கணபதி ஹோமம், காலை திருமுடி இறக்கம், காது குத்தல் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கு நன்று
Thai Poosam. 30.1.2010 Saturday தைப்பூசம்
வாக்கிய கரணம் பஞ்சாங்கப்படி சனிக்கிழமை 30.1.2010 அன்று மதியம் 12:40 மணி வரை பௌர்னமி உள்ளது
சிங்கப்பூர், மலேசியா உள்ளூர் நேரப்படி 15:10 வரை தைப்பூச வழிபாடு மிக நன்று.
Tuesday, 2.2.2010 செவ்வாய் சங்கடஹர சதுர்த்தி Sankadahara Chathurthi
Early morning and Evening Ganapathi homam(Auspicious day for ganapathi homam)
அதிகாலை மற்றும் மாலை கணபதி ஹோமம் மிகவும் சிறப்பானது.
Wednesday, 3.2.2010 புதன் அதிகாலை 7 மணி வரை Till Morning 7 am only
Best day for Ganapathi homam, கணபதி ஹோமம் நன்று
Thursday, 4.2.2010 வியாழன் முழுவதும் நன்று Whole day
அதிகாலையில் இருந்து அனைத்து சுப நிகழ்ச்சிகளும் செய்யலாம்
From early morning to Night for all ceremonies
Friday, 5.2.2010 வெள்ளி முழுவதும் நன்று Whole day
அதிகலை கணபதி ஹோமம் மிகவும் நன்று. நாள் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் செய்யலாம்
From early morning to Night - Suitable for all ceremonies
Thursday, 11.2.2010 வியாழன் காலை 10 மணிக்கு மேல் நாள் முழுவதும் நன்று After 10 AM to Night
Suitable for all ceremonies அனைத்து சுப நிகழ்ச்சிகளும்
Friday, 12.2.2010 வெள்ளி அதிகாலை முதல் பகல் 10:30 மணி வரை நன்று Early morning to 10:30 am
Suitable for all ceremonies அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நன்று.
இறைத்தொண்டில்
பாலு சரவண சர்மா
பரம்பரை புரோகிதர்- ஜோதிடர்
எண் 9, 4வது தெரு, கல்யாண் நகர், தாம்பரம்(மே), சென்னை 45, பாரத நாடு.
தொலைபேசி: 91 44 2226 1742, 91 98403 69677
மின்னஞ்சல்: prohithar@gmail.com இணையம்: www.prohithar.com
3.1. 2010