குரு கிரகம் 30பாகை அளவு இடம்பெயர்தல் என்றும் ஒரு(மகர) ராசியில் இருந்து அடுத்த(கும்ப)ராசிக்கு பிரவேசிப்பதையே குரு பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது
திருக்கணித(Drik) முறையில் 19.12.2009 ஆம் தேதி சித்ரபட்ச நிராயண அடிப்படையில் மகரத்தில் இருந்து கும்பத்திற்கு பிரவேசிக்கிறார்.
வாக்கிய(Vakya) முறையில் வரருசி சித்தாந்தம் அடிப்படையில் 15.12.2009ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார்
புவிமைய கோட்பாடு( Geocentric) அடிப்படையில் அயனவேறு பாடு கழிப்பதில் பல்வேறு அயனாம்ச முறைகள் கடைபிடிக்கப்படுகிறது, இதனால் குருப்பெயர்ச்சி தேதியில் மாற்றம் இருக்கிறது
மார்கழி மாதம், விரோதி வருடம் சுப முகூர்த்த நாடகள் மற்றும் பண்டிகைகள்
Auspicious Dates based on Drik-Vakya Panchangam, - Markazi month - Virothi Varusham (2009 – 2010)
மார்கழி மாத சுப நாட்கள்
மார்கழிமாத பிறப்பு மற்றும் முடிவு(தைமாத பிறப்பு)
சித்தாந்தம்
மாத பிறப்பு
மார்கழி மாத முடிவு(தை மாத பிறப்பு)
வரருசி வாக்கிய முறை
:
மார்கழி முதல் நாள்(16.12.2009) புதன்கிழமை
காலை 6:52 மணி
14.1.2010 தை மாத முதல் நாள்
மாலை 3:33 மணி
ஆரியபட்டீயம் முறை
:
மார்கழி முதல் நாள்(16.12.2009) புதன்கிழமை
காலை 6:54 மணி
14.1.2010 தை மாத முதல் நாள்
மாலை 3:27 மணி
திருக்கணிதம் முறை
:
கார்திகை 29 செவ்வாய் இரவு 1:52
(ஆங்கிலப்படி 16.12.2009 புதன் அதிகாலை 1:52)
14.1.2010 தை மாத முதல் நாள்
மதியம் 12:38 மணி
"மாதங்களில் அவள் மார்கழி" _ கவி. கண்ணதாசன்
இறைஉணர்வினை மேலோங்க செய்யும் இம்மாதம், இறைவனை வழிபடும் மாதங்களில் மிகவும் முதன்மையானது இந்த மார்கழி(தனூர் மாஸம்)ஆகும், பக்திமணம் கமழும் இம்மாதம் திருக்கோவில் வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, ஹனுமத்ஜெயந்தி, நடராஜர் அபிஷேகம், ஆருத்திரா தரிசனம், கூடாரவல்லி, போகி பண்டிகைகள் சிறப்பு வாய்ந்தவை.
மார்கழி என்றால் நினைவுக்கு முதலில் வருவது வண்ணக்கோலம் தான். ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும் கோலங்கள் அழகுற போடப்பட்டு கோலப்போட்டி நடைபெறும்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் அவர்களின் ஆராதனை திருநாளும் இம்மாதத்தில் தான் வருகைதந்து இசையால் இறைவனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது, இந்நாளில் திருவையாற்றில் அனைத்து இசை கலைஞர்களின் இசையால் ஆராதனை விழா நடைபெறும்.
திருக்கோவில்களில் வைகறைப்பொழுதில் நாள் ஒன்றுக்கு ஒரு பாசுரம் என சைவ வழிபாட்டில் திருவெம்பாவையும், வைணவ வழிபாட்டில் ஆண்டாள் அருளிய திருப்பாவையும்ஓதி செந்தமிழால் இறைவனை துதிக்கும் சிறப்பான மார்கழி மாதங்களில் உயர்ந்ததாகும்.
é படம்: 2008 ஆம் ஆண்டு கோலப்போட்டியில் பரிசு பெற்றவர்
இறைவனுக்காக அற்பணித்ததால் இம்மாதத்தில் இல்லங்களில் திருமணம், புதுமனை புகுவிழா, நிச்சியதாம்பூலம் போன்ற நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகிறது. இதற்கு முதல் காரணம் விவசாயத்தில் நெல் தலைசாய்து அறுவடை காலம் மற்றும் பெரும்பாலானவர்கள் விரதம் மேற்கொள்வதால் விருந்து உணவு வகைகளை ஏற்பதில்லை என்பதால் இல்ல நிகழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன.
மாத அடிப்படையில் நடைபெறும் தாலிக்கொடி மாற்றுதல் (திருமணப்பெண்)குழந்தைகளுக்கான திருமுடி இறக்கம், சீமந்தம், மஞ்சள் நீராட்டு விழா, பிறந்த நாளில் -ஆயுள் ஹோமம், இறைவழிபாட்டை முன்னிறுத்தி கணபதி ஹோமம், ருத்திர ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியன செய்யப்படுகிறது.
இக்கால கட்டத்தில் பூமத்தி ரேகையின் தென்பகுதியில்உள்ளவர்களுக்கு இப்பொழுது கோடைகாலம்(ஆனி மாதம் = ஜூன், ஜூலை மாத சூழல்). சூரியன் நிராயன (நிர்+அயனம் = புவி சாய்வு கோணம் நீக்கிய சூரிய பயன பாகை) தட்சிணாயன காலத்தில் பயனிக்கும் முதல் மாதமான ஆடி மாதமும், கடைசி மாதமான மார்கழியும் முகூர்த்தங்களுக்கு விலக்கானதாகும்
மார்கழி பூக்கள்(டிசம்பர் பூ) பூத்துகுலுங்கும் மாதம் இது. தலையில் இரட்டை ஜடை பின்னல் போட்டு அதில் அழகுற தொடுத்த மார்கழிப்பூவை சூடி பள்ளிக்கு செல்லும் கிராமத்து மாணவிகளின் அழகே தமிழகத்தின் கலாசார அடையாளம்.
தெருக்களில் பஜனைப்பாடல்கள் பாடி அதிகாலையில் இறைவனை இசையால் வழிபட்டு, பூஜையின் இறுதியில் தரப்படும் அந்த வெண்பொங்கல் பிரசாதம் உண்பது மிகவும் ஆனந்தமான அநுபவம். இசைக்கலை, கோலம் இடல். விதவிதமான பிரசாதம் என மக்களின் கலைகளை போற்றும் மாதம் மார்கழி !
மார்கழி மாத சுப நாட்கள்
ஞாயிறு 20.12.2009
வளர்பிறை சதுர்த்தி, முழுநாளும் நன்று
தாலிக்கொடி மாற்றுதல், கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியன செய்ய உகந்த நாள்.
புதன் 23.12.2009
காலை 6-7:30 கணபதி ஹோமம், காதுகுத்தல், முடி இறக்கம் நன்று
ஞாயிறு 27.12.2009மதியம் 12 மணிவரை
தாலிக்கொடி மாற்றுதல், கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா
புதன் 30.12.2009
முழுவதும் நன்று.
தாலிக்கொடி மாற்றுதல், கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியன செய்ய உகந்த நாள்.
ஞாயிறு 3.1.2010
சங்கடஹர சதுர்த்தி, முழுவதும் நன்று.
கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியன செய்ய உகந்த நாள்.
திங்கள் 4.1.2010 சதுர்த்தி
அதிகாலையில் கணபதி ஹோமம் மிகவும் சிறப்பானது
புதன் 6.1.2010
மாலை 5 மணிவரை மட்டும் நன்று. அனைத்து சுபம்களும் செய்யலாம்
தாலிக்கொடி மாற்றுதல், கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியன செய்ய உகந்த நாள்.
திங்கள் 11.1.2010
முழுநாளும் நன்று, அனைத்து சுபங்களும் செய்யலாம்
தாலிக்கொடி மாற்றுதல், கணபதி ஹோமம், சீமந்தம், காது குத்தல், முடிஇறக்கம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியன செய்ய உகந்த நாள்.
மார்கழி (விரோதி வருடம்) மிக நல்ல நாள் - நேரம்
05 20.12.2009 ஞாயி சுக்கிலசதுர்த்தி திருஓ அ தனுஸ் 07.00-08.00
12 27.12.2009 ஞாயி சுக்கிலதசமி அச்வினி சி தனுஸ் 06.30-07.30
15 30.12.2009 புதன் சுக்கிலசதுர்தசி ரோஹிணி சி மகரம் 08.00-09.30
2206.01.2009 புதன் கிருஷ்ணஷஷ்டிஉத்திரம் அ மீனம் 11.00-12.00
27 11.01.2010 திங் கிருஷ்ண ஏகாதசி அனுஷம் சி மகரம் 06.00-07.30
சஷ்டி: 22.12.2009 செவ்வாய் அன்று வருவது மிகவும் சிறப்பானதுபிரதோஷம்: 29.12.2009, 12.1.2010
கிருத்திகை: 28.12.2009 திங்கள் மாலை மற்றும் 29.12.2009 செவ்வாய் காலை மிகவும் சிறப்பானது
ஏகாதசி: 28.12.2009 திங்கள் வைகுண்ட ஏகாதசி, 11.1.2010 திங்கள் சர்வ ஏகாதசி திதி
சந்திர கிரஹணம்: (31.12.2009இரவு - 01.01.2010 அதிகாலை)Partial Eclipse of the Moon, 31.12.2009 - 01.01.2010
அறிவியல் பார்வை:
மார்கழி மாதம் 16 வியாழன் (31.12.2009) இரவு 10:45 மணி அளவில் துவங்கி அதிகாலை 3 மணி (1.1.2010)வரை பகுதி சந்திரகிரஹணம் (Partial Eclipse) நிகழ்கிறது. இது இந்தியாவில் தெரியும். "பகுதி சந்திரகிரஹணம்" என்றால் பூமியின் உண்மையான நிழல்(Umbra) மற்றும் அடுத்த மறைநிழல்(Penumbra) பகுதியில் சந்திரனின்விட்டத்தில்குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நிகழும் கிரஹணம் ஆகும்.
சந்திரனின் விட்டத்தை(2,159mi = 3,474kilometers)விட பூமியின் விட்டம் (7,926.41 miles = 12,756.32 kilometers). சுமார் 3.6 மடங்கு பெரியது எனவே பூமியின் நிழல் பகுதியை சந்திரன் கடக்க அதிக நேரம் எடுக்கும். முழு சந்திர கிரஹனம் மிகநீண்டு இருக்கும். இது பகுதி சந்திரகிரஹணம் என்பதால் மிக குறைந்தளவு நேரமே நிகழ்கிறது. 31.12.2009 அன்று நிகழும் சந்திரகிரஹணம் அதிகபட்டசமாக மறைநிழல் பகுதியில் துவங்கி முடியும் நேரம் 4மணி 11நிமிடங்கள், இதில் உண்மையான கிரஹண நேரம் இரவு 12:22 முதல் 01:24 வரை 62 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
ஜோதிட பார்வையில் : கிரஹணம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழ்கிறது,எனவேதிருவாதிரை, முன்பின் நட்சத்திரங்களான மிருகசீருஷம், புனர்பூசம், திரிகோணத்தில் அமைந்துள்ள (பத்தாம் நட்சத்திரங்கள்) சுவாதி, சதையம் நட்சத்திரத்தினர் நவக்கிரக சாந்தி அர்ச்சனை மற்றும் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யவும்
Astrological View: Thiruvadirai, Swathi, Punarpoosam, Mirugasirusham stars are affected by eclipse. perform Navagrha Archana and perform Annadanam (offering food ) to nearest Orphanage
Eclipse will be visible in the region covering Alaska, Australia, Indonesia, Asia, Africa, Europe including the British Isles and the Arctic regions.
The beginning of the umbral phase will be visible from the extreme south-eastern part of Australia, middle of South and North Pacific Ocean and extreme Solomon Is.The ending of the umbral phase will be visible from North and South Atlantic Ocean and Greenland.
The beginning, the middle and the ending of the eclipse will be visible from all parts of India.
அறிவியல் பார்வையில் சந்திரகிரஹணம் ஆய்வு செய்யும் அளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல, எனவே இதை அறிவியலாளர்கள் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை.
தங்கள் பகுதியில் நிகழும் கிரஹண நேரம் கணக்கிட எனது இணையதளத்தினை பார்வை இடவும்
Please Visit my website for calculate Eclipse time for your place
திருப்பாவை, திருவெம்பாவை நூல்களை கோவிலுக்கு வருபவர்களுக்கும், கிராமத்தில் - அரிஜன குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தானம் செய்தல் மகா புன்னியம்.
அரிஜன குடியிருப்புகளில் உள்ள கோவில்களுக்கு மார்கழிமாத வழிபாட்டின் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவிசெய்து இந்து மதநெறிகளை வளர்க்கவும், மதமாற்றத்தினை தடுக்கவும் முன்வாருங்கள். இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள்.