Friday, September 18, 2009
Purattachi Auspicious Dates புரட்டாசி மாதம் நல்ல நாட்கள்
http://www.prohithar.com/virothi/purataci2009.pdf
புரட்டாசி மாத நல்ல நாட்கள்
Purattachi Auspicious Date's
சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை நல்ல நேரம்
Saraswathi, Vijaya dasami Pooja Times
தீபாவளி குளியல் நேரம்
Deepavali holy bath time
தலை தீபாவளி வழிபாடு முழு தகவல்
New couples Deepavali - Best time
தீபாவளி படையல்
Deepavali Padyal (Deepavali Prayer for deceased)
தீபாவளி என்று வருகிறது?
When Depavali falls?
Link: http://www.prohithar.com/virothi/purataci2009.pdf
மேலும் தகவலுக்கு
www.prohithar.com
Wednesday, September 09, 2009
மஹாளய பட்சம் (மாளய பட்சம்) Malaya Patcham 2009
Very Auspicious days for Deceased Ancestors
5.9.2009 – 18.9.2009
வானவியல் கணிதம்: திதி -அமாவாசை ஓர் விளக்கம்
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் ஆகும், 360 பாகையை 30 ஆல் (அமாவாசை முதல் பவுர்னமி வரை உள்ள திதிகள் 30) வகுக்க வருவது 12 பாகை அதாவது ஒரு திதி என்பது 12 பாகை ஆகும் இதில் அமாவாசையை முதலாக வைத்து கணக்கிடும் முறை ஆகும்
அமாவாசை என்பது சூரியனுக்கு மிக அன்மையில் 0 பாகை முதல் 12 பாகையில் சந்திரன் வரும் நாள் ஆகும். துல்லியமாக கணிக்க நிராயண(Sidereal) அளவில் சூரியனின் பாகையிலிருந்து சந்திரனின்(Moon's Earth orbit) புவிவட்ட கோணத்தை கழிக்க மீதம் வரும் தொகையை 12ஆல் (ஒரு திதி என்பது 12 பாகை ஆகும்) வகுக்க வரும் அளவே திதி ஆகும்:
உதாரணம். 18.9.2009 (புரட்டாசி 2) அன்று காலை 5:30 IST மணி அளவில் சூரியன் நிலை 151பாகை14மினிட் இதிலிருந்து சந்திரன் நிலை140பாகை40 மினிட் கழிக்க = 10பாகை:34 மினிட் வருவதால் அன்று அமாவாசை துவங்கி 1பாகை 26 மினிட் கடந்து பெருமளவு நாள் முழுவதும் அமாவாசை உள்ளது
சூரியனின் பாகையிலிருந்து சந்திர பாகை கழிக்க 180 பாகை வரும் நாளே பவுர்னமி ஆகும். மிக விளக்கமாக அடுத்து வரும் வான் இயற்பியல் (Astrophysics) கட்டுரைகளில் தருகிறேன்.
குறிப்பு: திதியின் பாதி அளவே கரணம் ஆகும்(6 பாகை அளவு), கரணம் மொத்தம் 11 ஆகும் அமாவாசை அடுத்த பிரதமை திதியின் பின்பாதியில் "பவ" கரணம் துவங்கும்.
Tithi: The moment of new Moon, or that point of time when the longitudes of Sun and Moon are equal is called 'amavasya'. The tithi is the time taken by the Moon in increasing its distance from the Sun by 12 degrees. The complete revolution of the Moon (29.5 days) occupies 30 tithis for 360 degrees. Since the motions of the Sun and Moon are always varying in speed the length of a tithi constantly alters.
இந்த ஆண்டு (விரோதிஆண்டு) மஹாளய பட்சம் (ஆவணி 20 ஆம் தேதி) 5.9.2009 சனிக்கிழமை அன்று துவங்கி (புரட்டாசி 2ஆம் தேதி) 18.9.2009 வெள்ளிக்கிழமை மாளயஅமாவாசைஅன்று முடிவடைகிறது.
This year Mahalayam Patcham beginning from 5.9.2009 Saturday and Ends on 18.9.2009 Friday
மாளய பட்சத்தில் அமாவாசை முன்னால் வரும் நாட்களில் மிகவும் சிறப்பான நாட்கள்
Auspicious days for ancestors - Before Malaya amavasai
Wednesday 09.9.2009 புதன்கிழமை மஹாபரனி (Maha Barani)
Saturday 12.9.2009 சனிக்கிழமை அஷ்டமி (Astami)
Sunday 13.9.2009 ஞாயிறு நவமி, வியாதிபாதம் (Navami, Vaithipaadam)
Tuesday 15.9.2009 செவ்வாய் ஏகாதசி (Ekadasi)
Wednesday 16.9.2009 புதன் துவாபரயுகாதி தர்பணம் (Dwabara Ugadi Tharpanam)
Thursday 17.9.2009 வியாழன் சஸ்தரஹத மாளயம் (Sastrahata Mahalayam)
Friday 18.9.2009 வெள்ளி மாளய அமாவாசை (Mahalaya Amavasai)
வழிபாடு: மேற்படி தினங்களில் தர்பணம், அன்னதானம், ஆத்மாசாந்தி, படையல் வழிபாடு நன்று
Mode of Prayer: perform Tharpanam, Food Donation, Atma Shanthi Prayer
பசு- கோமாதா
மாளயபட்சத்தில் மேல் குறிப்பிட்ட நாட்களில் காலை 2 கிலோ கோதுமை தவிடு, 100 கிராம் வெல்லம், உறுவிய அகத்திகீரை 50 கிராம் எள்ளு ஆகியவற்றை கலந்து ஊரவைத்து பசுவிற்கு தானமாக தரவும்.
தாய் - தகப்பனார் உள்ளவர்கள் இதைசெய்யலாமா?
தகப்பனார் இருந்தும் அவர் மாளயபட்ச வழிபாட்டை செய்யாத நிலையில் மகன், மகள் யார் வேண்டுமானாலும் மாளயபட்ச வழிபாட்டை செய்யலாம். "தர்பணம்" தவிர்த்து பசுவிற்கு தானம், ஆதரவற்றோர் இல்லங்களில் தானம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, ஆத்ம சாந்தி வழிபாடு, வேதபாடசாலைக்கு உதவி போன்ற வழிகள் மூலமாகவும் வழிபாடு செய்யலாம்.
அமாவாசை தினம் என்பது இறைவனடி சேர்ந்த மூதாதையர்களை (பித்துர்களை) நினைத்து அவர்களுக்கு வழிபாடு செய்யும் நாளாகும். நமது முற்பிறவியில் நாம் அனுபவித்த துன்பங்களுக்கும், இனி வரும் பிறவிகளில் நற்பிறவி எடுக்கவும், நம் சந்ததியினிர் நலமுடன் வாழவும் வழிபட மிகவும் புனிதமான நாளே அமாவாசை ஆகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று நீராடி மூதாதையர்களுக்கு படையல், தர்ப்பணம், ஆத்ம சாந்தி பூஜை, பசுவிற்கு அகத்திகீரை தானம் போன்ற வழிபாடுகளை செய்வது வழக்கம். அமாவாசையில் மஹாளய அமாவாசை மிகவும் குறிப்பிடத்தக்கது.
மஹாளய பட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் சந்திர மாதப்படி பாத்ரபதம் (தமிழ்படி ஆவணி, புரட்டாசி மாதங்களில் வரும்) பவுர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை முதல் அமாவாசை வரை 15 தினங்களுக்கு தேய்பிறையில் இறந்த பித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது. இறந்து போனவரின் திதி தெரிந்தால் மாளயபட்சத்தில் வரும் அந்த திதி தினத்தன்றும், தெரியாவிட்டால் மஹாளய அமாவாசை தினத்தன்றும் பித்ருக்கள் நற்கதி அடைய பூஜை செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மஹாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்கள், குறிப்பாக ஆயுதம் மூலமாககொல்லப்பட்டோ, தற்கொலை செய்து கொண்டோ, அல்லது விபத்து மூலமாக அகாலமரணடைந்து போன பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக பூஜைசெய்யும் நாளாகும்.
மஹாளய அமாவாசை தினத்தன்று உணவிற்காக ஏங்கும் மனிதனுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு, வேதபாடசலையில் பயிலும் மாணவர்களுக்கு அன்னதானம் செய்வதுதான்மிக சிறந்தது என்று உபநிடதங்களும், வேதங்களும், சாஸ்திரங்களும் வலியுறுத்துகிறது.
"தர்பணம் செய்து வைக்கும் பிராமணர்களுக்கு தருவது சம்பளம் (சம்பாவனை) அது தானம், தர்மம் அல்ல"
வெளிநாடுகளில் உள்ளவர்கள்:
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தர்பணம் செய்யலாம்
தர்பணம் செய்ய இயலாதவர்கள் ஆத்ம சாந்தி வழிபாடு செய்யலாம்
பாரதத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அல்லது பூர்வீக கிராமத்து பள்ளிகளுக்கு கணணி வாங்கி தருதல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யலாம்
பழைய கணணி - கம்பியூட்டர் தானம்
தங்களிடம் உள்ள பழைய கம்பியூட்டரை மாளய பட்சத்தில் அருகில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தானம் செய்து புன்னியம் பெறுங்கள். மாணவனும் மகிழ்வான், தேசமும் அறிவார்த்த சமுதாயமாக மாறும்.
படிக்கும் வசதியற்ற மாணவர்கள் சிலருக்கு கணணி தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும், மாணவர்களின் முகவரி அளிக்கப்படும். நேரிடையாக தாங்களே தானம் செய்யலாம்.
Old Computer Donation : Please donate your Old used computer (Working Condition) to nearest poor students on Mahalaya patcham period or on Malya Amaavasai date. I have some poor student address those who requiring computer. Please contact me if you are interested to dentate.
தர்பண சங்கல்பம்: Sankalpam- மாளயம் அன்று சங்கல்பம் - தமிழாக்கம்
கலியுகம்:5111, விரோதி வருடம்(23ஆம் ஆண்டு), தட்க்ஷணாயனம்(சூரியன் தெற்கில் உதயம்), வருஷ ருது (மழைக்காலம்), புரட்டாசி மாதம் (சூரியன் கன்னி இராசியில் அதாவது 150 பாகை மேல் 180 பாகை உள்ளாக) வெள்ளிக்கிழமை (சுக்கிரன் கிரகத்தை குறிக்கும் நாள்) பூரம் நட்சத்திரம் (சந்திரன்133.20 – 146.40 பாகை இடையில் பயணிக்கும் நாள்), அமாவாசை திதி (சூரியனுக்கு அருகில் இணைப்பு நிலையில் சந்திரன் உள்ள நாள்)
சங்கல்பம் என்பது வானவியல் நிலைகளை வடமொழியில் கூறுவதாகும்
தர்பண சங்கல்பம்: Sankalpam
09.09.2009 புதன் மஹாபரணி
விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ரிதௌ ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்யதிதௌ சௌம்ய வாஸர அபபரணீ நக்ஷத்ர யுக்த்தாயாம் அஸ்யாம் பஞ்சம்யாம் புண்யகாலே பித்ருவ்ய மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம் ஸகருஸ்ய காருண்ய பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸக்ரூன் மஹாளய ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..
12.09.2009 சனி மத்யாஷ்டமி
விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ரிதௌ ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ ஸ்திர வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர யுக்த்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம் புண்யகாலே பித்ருவ்ய மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம் ஸகருஸ்ய காருண்ய பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸக்ரூன் மஹாளய ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே..
18.09.2009 வெள்ளி ஸர்வ மஹாளய அமாவாஸை
விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ரிதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ப்ருகு வாஸர பூர்வபல்குனி நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
Tuesday, 15.9.2009 செவ்வாய் ஏகாதசி: அஜா : புரட்டாசி(பாத்ரபத) க்ருஷ்ண ஏகாதசியை அஜா என்று சொல்வது. உலகத்தில் பிறப்புடையவன் துன்பமில்லாமல் இருப்பது அரிது. பிறந்ததுமே துன்பக்கடலில் மூழ்குவான். இது இயற்கை. இந்த ஏகாதசியில் வ்ரதம் இருப்பவன் ஏற்பட்ட துன்பங்களிலிருந்து விடுபட்டு அஸத்ருசமான புதுப்பிறவையை அடைவான். எனவே இதற்கு அஜை எனப்பெயர். அரிச்சந்திரன் வ்ருத்தாந்தம் நாம் அறிந்ததே. ராஜ்யத்தை இழந்தவன் மனைவி மக்களைத் துறந்தான். தானும் ஒரு சண்டாளனிடம் அடிமையாய் இருந்தவன். இப்படி பலஅல்லல்களுக்கு ஆளானவன். இவனை கெளதம முனிவர்கண்டார். இரக்கம் கொண்டார். இந்த ஏகாதசியில் வ்ரதமிருந்தால் துன்பங்கள் அகலும் என்றார். இதன்படி இவன் நடந்தான். மனைவியையும் மக்களையும் இராஜ்யத்தையும் பெற்றான். எனவே இதில் உபவாஸம் இருப்பவன் இழந்தவைகளைப்பெற்று ஸுகமடைவான்.
நவராத்திரி:
மாளய அமாவாசை மறுநாள் சனிக்கிழமை 19.9.2009 முதல் நவராத்திரி கொலு பண்டிகை துவங்கி திங்கள் 28.9.2009 விஜய தசமி அன்று முடிவடைகிறது. இவ்வருடம் நவராத்திரி பண்டிகைகள் முழுமையாக உள்ளது.
சரஸ்வதி பூஜை: ஞாயிறு 27.9.2009 விஜயதசமி: திங்கள் 28.9.2009
தர்மம் தலைமுறை காக்கும்
ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் வேதபாடசாலை
ஆதீஸ்ரர் இல்லம் ஆதரவற்றோர் இல்லம் : 94444 85491
குட்லைப்சென்டர் (மன வளர்ச்சி குன்றியோர்) : 2226 4151, 2226 4152
அக்ஷ்யா ஆதரவற்ற முதியோர் இல்லம் : 2276 1658, 98410 08325
சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லம் : 94444 94657, 94448 08915
பவுஷ்ய தீபம் ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றியோர் இல்லம் : 2276 1889, 94440 00889
உதவும் உள்ளங்கள் (ஆதரவற்ற குழந்தைகள்) : 2226 0612, 6544 6378
ஸ்ரீ சாரதா சக்தி பீடம் ஆதரவற்ற சிறார் இல்லம், பள்ளி : 2276 0612, 2233 3214
சிவாகம வேதபாட சாலை : 65129744, 94443 12367
அஹோபில மடம் வைணவ வேத பாட சாலை : 2239 7567, 94440 47567
காயத்ரி ஞானவாபி (ஆதரவற்றோர் இறுதி சடங்கு) : 22212984, 2238 3333
z Please Visit http://www.prohithar.com/mistakes.html for Typing and information Mistakes in this document z
இந்த கட்டுரையில் பிழைகள் இருப்பின் திருத்தப்பட்டு உடன் எனது இணையதளத்தில் "பிழைகள்" பக்கத்தில் வெளியிடப்படும்
மாளய அமாவாசை முழுவிபரம்
Malaya Amavasai Full details
தர்பண மந்திரம் தமிழில்
Tharpana Mantram(Smartha, Vadakalai, Thenkalai)
ஒலி வடிவில் தர்பண மந்திரம் பகுதி1 - பகுதி 2
Tharpana Mantram(Audio- Mp3) Part 1 - Part 2