Pages

Wednesday, May 06, 2009

கிணறு மூடுதல் பூஜை

வீட்டின் உயிர்நாடியாக உள்ள நீர்ஆதாரமான கிணற்றினை மூடுவது என்பது மிகவும் கடினமான முடிவாகும். வேறுவழியின்றி நியாயமான காரணங்களுக்காக மூடுவது  என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

            வாஸ்து காரணங்களுக்காக மூடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும் அப்படியை மூடுவதாக இருப்பின் மற்றொரு கிணற்றை தோண்டியபின் பழைய கிணற்றை மூடவும்

            கிணறும், பூஜை அறையும் வீட்டின் இரு கண்கள் போன்றது எனவே புதிய கிணற்றுக்கு பூஜை செய்து மண் எடுத்தபிறகு அந்த மண்ணை கொண்டு பழைய கிணற்றை முறைப்படி பூஜை செய்து மூடவும்

ஆழ்துளை கிணற்றை பாரம்பரிய கிணற்றுடன் ஒப்பிடவேண்டாம்! இட நெருக்கடி காரணத்தால் நகரங்களில் கிணற்றை மூடிவிட்டு ஆழ்துளை கிணற்றை அமைத்து வசிப்பிடத்தினை பெரிதாக்குகிறார்கள் இது நிலத்தின் மதிப்பை அறிந்து செய்வதாக கூறி கிணற்றின் மதிப்பை குறைப்பதாகும். 

நிலநடுக்கத்திற்கு பின்னர்

            ஆழ்துளைகிணறு அமைப்பது எளிதாக தோன்றினாலும், நிலநடுக்கம், நிலஅதிர்வு நிகழ்ந்த உடன் ஆழ்துளை கிணறு முற்றிலும் செயலற்று அல்லது மிகவும் நீர்வரத்து குறைந்தும் போகும் என்பதுதான் உண்மை. இது தான் குஜராத்தில் நடந்தது.

            பாரம்பரிய கிணற்றின் பல நீர்ஊற்று வழிகளில் சிலவற்றில் அடைப்பு ஏற்பட்டாலும் பெரும்பாலும் தண்ணீர் வரத்து குறைவதில்லை என்பதுதான் சிறப்பானதாகும்.

            ஆழ்துளை கிணற்றைவிட பாரம்பரிய கிணற்றின் பயன்பாடுகாலம் மிகவும் அதிகம். நீர்வற்றுவது என்கிற காரணத்திற்காக மூடவேண்டாம் மாறாக மழைக்காலங்களில் "மழைநீர் சேகரிப்பு"  கிணறாக பாவித்தால் மிகவும் பலனுள்ளதாகும்.

 கிணறு மூடுதல் பூஜை

             முன்னோர்கள் காலம்தொட்டு வீட்டின் கிணறு கங்கைக்கு ஈடாக மிகவும் புணிதமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட கிணற்றை மூடும் பொழுது வழிபாடு செய்வது என்பது அதற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.

இலக்னம்:
விட்டின் உரிமையாளர் மற்றும் அவரின் மணைவி நட்சத்திரத்திற்கு உகந்த ஒருநாளில் அஷ்டம சுத்தியுடன் இருக்கும் இலக்னம், ரிஷப, கடக, மகர, மீனம்

நட்சத்திரம்:     
ரோகினி, மிருகசீருடம், பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திராடம், சதையம், உத்திரட்டாதி, ரேவதி

திதி:                
வளர்பிறை திதி துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரியோதசி

கிழமை:          
திங்கள், புதன், வியாழன், வெள்ளி

கிணற்றை முடும்முன்
வீட்டில் உள்ள பிள்ளையாருக்கு வழிபாடு நடத்திய பின்னர்
வெள்ளி, தங்கம், சில்லரைகாசுகள், கங்கைநீர். மஞ்சள்தூள், குங்குமம், வெற்றிலை, பாக்கு,  அருகன்புல், துளசி, வில்வம், தர்பைபுல்,கோமயம் ஆகிய வற்றை கிணற்றில் போடவும்
கிணறு மற்றும் சூரியனுக்கு தீபாராதனை காட்டிய பின்னர் ஒருபிடி மண்ணை கிணற்றில் போட்டு மூடும் பணியை  துவக்கவும்.
அன்றைய தினம் காலை பசுவிற்கு கோதுமை தவிடு 2கிலோ மற்றும் வெல்லம் 250 கிராம் கலந்து தானம் செய்யவும். மேலும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒருவேளை உணவிற்கு உதவிடவும்.

கிணறு மூடவது (தண்ணீர் கிடைக்காமல் தடுப்பது நோக்கில்) பாவமாக சொல்லப்பட்டுள்ளது

  • நம்வீட்டில் நாமே மாற்று ஏற்பாடாக கிணற்றை மூடுவதை பாவம் இல்லை
  • நன்றி கடனாக ஏழைகளுக்கு, பசுவிற்கு தானம் செய்து மூடலாம் இது பாவம் அல்ல(மாற்று கிணறு-ஆழ்துளை கிணறு உள்ள நிலையில் மட்டும்)
  • கிணறு நோண்டும் பொழுது பெருங்கல், எலும்புகள், புதையல் வந்தால் அதை பூமி சாந்தி செய்து மூடவேண்டும் என்று ஆயாதி நூல் கூறுகிறது.
  • தர்மப்படி மாற்று கிணறு இருக்கும் நிலையில், புதிய கிணறு தோண்டும் முன் பழைய கிணறு மூடுவது சரிதான்.

ஆக்கம் 2 ஏப்ரல் 2009

மேலும் விபரம் www.prohithar.com


Tuesday, May 05, 2009

குரு வக்கிரம் - திருமண குருபலன் - Jupiter Retrogression

Jupiter Retrogression and  Auspicious wedding time – Vakra Guru Palan

 வக்கிர குரு பலன் 2009

 திருமணத்திற்கு உகந்த "குருபலன்" காலத்தினை ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் நின்ற இராசியில் இருந்து குரு கிரகம் இருக்கும் இடத்தை வைத்துதான் கூறமுடியும்.
   
    இவ்வருடம் குரு கிரகம் நிராயண முறையில் (Sidereal Longitude ) 1 மே 2009 முதல் 30 ஜூலை 2009 வரை வக்கிர கதியாக (Retrogression) கும்ப ராசியில் ( Aquarius)  வசிக்கிறார்.  பின்னர் மீண்டும் மகர ராசிக்கே( Capricorn) திரும்புகிறார்.

    குரு வக்கிர கதியில் இருக்கும் பொழுதும் சில இராசிகளுக்கு தற்காலிகமாக திருமணத்திற்குரிய நல்ல சூழலை தருவார் இந்த கால கட்டத்தில் எடுக்கப்படும் திருமண முயற்சிகளும் பெரும்பாலும் வெற்றி தரும். இடையில் வரும் குரு வக்கிரத்தில் பெண்-பிள்ளை சம்மதம் தெரிவித்தவுடன், நிச்சிய்ம் செய்து குரு வக்கிர கதியில் முடியும் முன்னர் திருமணம் செய்தல் நன்று. அப்படி இயலாத நிலையில் குரு முழுமையாக நல்ல பலன் தரும் காலத்தில் திருமணத்தை நடத்தல் மிகநன்று.

    பொதுவாக திருமண காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் "குரு பலன்" இருப்பது மிகநல்லது, ஆனால் சில தம்பதிகளுக்கு அப்படி அமைவதில்லை அப்படிப்பட்டவர்கள் மட்டும் பரிகார தானங்களை (ஆதரவற்றோர் இல்லங்களுக்கு) செய்து பின்னர் திருமணத்தை நடத்தலாம். திருமணத்தில் அதிக முக்கியத்துவம் பெண்ணுக்குத்தான் தரப்படுகிறது, ஜாதகங்களும் பெண்ணுக்கு ஆண் பொருந்துகிறானா என்றுதான் கணிக்கப்படுகிறது. திருமண முகூர்த்த கணண விதானத்தில் தாராபலன், சந்திரபலன் எல்லாம் கண்டிப்பாக பெண்ணுக்கு இருத்தல் வேண்டும்.
   
    ஆண், பெண் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,11ல் குரு இருக்கும் காலம்  திருமணத்திற்கு உகந்த மிக நல்ல காலம் ஆகும். அந்த வகையில் தற்பொழுதய குரு வக்கிர காலகட்டத்தில் மேஷம், மிதுன, சிம்மம், துலாம், மகர ராசிகளுக்கு திருமணம் கூடிவரும்.

    ஆண்களுக்கு திருமணம் நடைபெற சூரியனின் பார்வைதான் மிக முக்கியமானதாகும். அடுத்த முக்கியத்துவம் தான் குருவிற்கு தரப்படுகிறது. ஆணின் சந்திரன் நின்ற ராசிக்கு சூரியன் 3,6,11ல் வசிக்கும் காலமே திருமணத்திற்கு உகந்த காலம் ஆகும். அதே நேரத்தில் குருவின் பார்வைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு திருமணம் நடத்துதல் மிகவும் சிறப்பானதாக அமையும்.
   
    குரு பலன் இருந்தால் தோஷம் உள்ள ஜாதகத்தினரின் திருமணமும் தடை நீங்கி கூடும்.

பரிகாரங்கள்:
   
    வியாழன் கிழமைகளில் குளத்துடன் உள்ள ஆகம முறையிலான சிவன் கோவிலில் இருக்கும் தட்சக்ஷிணா மூர்த்தி அல்லது குரு கிரகத்திற்கு முன் அமர்ந்து தட்க்ஷிணா மூர்த்தி ஸ்லோகம், குரு காயத்ரி மந்திரங்களை ஜபிக்கவும்.

    ஆதரவற்றோர் இல்லத்திற்கு மூக்குகடலை 2கிலோ வாங்கி தரவும். ஜென்ம நட்சத்திரம், ஜென்ம வாரத்தில் மஞ்சள் நிற ஆயத்தஆடைகளை (Ready Made Dress) வாங்கித்தந்து தானம் செய்யவும்
   
    பரிகாரங்கள் தர்ம சிந்தனை அடிப்படையில் அமைந்தால் பலன் நிச்சியம் உண்டு

    ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வக்கிர குரு(Retrogression) மற்றும் நேர் குரு(Direct) பலன்(சந்திரன் நின்ற இராசிக்கு) .................இது குறித்து மேலும் முழு தகவல் அறிய 
www.prohithar.com

கத்திரி – அக்னி நட்சத்திரம் (Agni Nakshtra – Kathiri)

ஜோதிட பார்வை:
 
தோற்றப்பொலிவு புவி மையக்கோட்பாட்டின்அடிப்படையில் நிராயண சூரியன் பரணி நட்சத்திரத்தில் மூன்றாம்  பாதத்தில் பிரவேசிக்கும் காலம் முதல்  ரோகினி நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் பிரவேசிக்கும் காலம் வரை கத்திரி நாட்களாகும்.
   
 Sun Sidereal longitude  from 20o00'  to Sidereal longitude 13.20 (43o20') days are called Agni Nakshtra – Kathiri. This year falls on 4th May  2009 and ends on 28th May 2009

இவ்வருடம் கத்திரி: திங்கள் 4 மே 2009 மதியம் 1:21 மணி முதல்  வியாழன் 28 மே 2009 மாலை 6:15 வரை.
இதில் சித்திரை மாதத்தின் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் மிக அதிக வெப்ப நாட்கள் என்று பாரதீய வானியலாளர்கள் கணித்து அதற்கு  அக்னி நட்சத்திர உச்ச நாட்கள்  என்று அழைத்தார்கள்
   
கத்திரி காலத்தில் வரும் அக்னி நட்சத்திர உச்சகாலம் என்று அழைக்கப்படும் 8 மே முதல் 21 மே வரை மிக வெப்பகாலம் ஆகும். கத்திரியில் சில விசேஷங்களை மட்டும் தவிர்க்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது.

கத்திரி காலத்தில் செய்ய தகுந்தவை:
 
திருமணம், நிச்சியம், பெண்-மாப்பிள்ளை பார்த்தல், உபநயனம், பொது கட்டிடங்கள்(சத்திரங்கள், அரசு கட்டிடங்கள்) கட்டுதல், பரிகார ஹோமங்கள் போன்றவை செய்ய தகுந்தவையாகும்

கத்திரி காலத்தில் செய்யக்கூடாதவை:

மொட்டை அடித்தல், நிலம் தோண்டுதல், வீடு கட்ட துவக்கம், மரங்கள், செடிகள் வெட்டுவது, தோட்டம் அமைப்பது, விதை விதைத்தல், புதிய குடியிருப்பு பகுதி  அமைப்பது(பிளாட் போடுவது) போன்றவை செய்யக்கூடாது

அறிவியல் பார்வை:
   
 பூமி 23.5 பாகை சாய்வான நிலையில் சீரான அச்சில் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றுகிறது அப்படி சுற்றும் பொழுது பூமியின் வடபுலம் (Northern Hemispheres)6 மாதங்களும் அடுத்து தென்புலம்(Southern Hemispheres) 6 மாதங்களும் சூரியனின்ஒளி விழும் வகையில் உள்ளது நேராக சூரியன் விழும் காலம் கோடை என்றும், சாய்வாக சூரியனின்ஒளி விழும் காலம் குளிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய மாற்றமே புவியின் பருவநிலை மாற்றத்தின்முக்கிய காரணியாகும்
   
The seasons are caused by a combination of things. The Earth is tilted (23.5 Degree) as it moves around the sun. Direct sunlight produces more heat than the indirect light.
Direct sunlight days are called as summer where the heat will be maximum which are known as "Agni Nakstra – Kathiri "
   
இதில் சூரியனின்கதிர் நேர்கோணத்தில் விழும் காலமே கத்திரி ஆகும். இக்காலத்தில் சூரியனின் மிக அதிக பட்ச வெப்பம் பூமியின் மீது தாக்கும். (படம் காண்க)

மேலும் தகவல்களுக்கு  www.prohithar.com