சனிப்பெயர்ச்சி பலன்கள் 2009
Sani Peyarchi- Saturn Transits 2009
சனிப்பெயர்ச்சி திருக்கணித முறைப்படி இவ்வருடம் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி புதன் கிழமை நள்ளிரவு 12:00 மணி (வியாழன் கிழமைஅதிகாலை00:00மணி)அளவில் இந்திய முறைப்படி விரோதி வருடம் ஆவணி மாதம் 24ஆம்தேதி புதன் கிழமை சிம்ம இராசியில் இருந்து கன்னி இராசிக்குள் நுழைகிறார். சனிபகவான் 2009 மற்றும் 2010 ஆண்டுகள் முழுவதும் கன்னி இராசியில் மட்டும் சஞ்சரிக்கிறார்.
சனிக்கிரகம் கோள்நிலை விவரம் ( நேரம் காலை 5:29 மணி அளவில்) இந்திய மத்திய நேரம்
Geocentric (Sayana) and Sidereal (Nirayana) Longitude of SATURN at 5h 29m IST
தேதி | சாயணம் | நிராயணம் | இராசி | நட்சத்திரம் |
09-9-2009 | 173 54 03.4 | 149o 54' 15''.4538 | சிம்மம் | உத்திரம் முதல் பாதம் |
10-9-2009 | 174 01 30.2 | 150o 01' 42''.1154 | கன்னி | உத்திரம் இரண்டாம் பாதம் |
ஒரு இராசியில் சனியின் ஆட்சிகாலம் சுமார் இரண்டரை ஆண்டுகளாகும். நவக்கிரகங்களிலையே சனிதான் நீண்ட கால சுற்றுப்பாதை உடையவர் சூரியனை ஒரு சுற்று (12 இராசிகளை) சுற்றிவர சுமார் 30 ஆண்டுகள்(மிக துல்லியமாக 29.46 வருடம்) எடுத்துக்கொள்கிறார். சனிகிரகத்தின் 4 சுற்றுக்கால முடிவு அதாவது 120 ஆண்டுகள்தான் மனிதனின் முழு ஆயுட்காலமாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது, இதனால் சனிக்கிரகத்தை ஆயுட்காரகன் என்றும் கூறுவர்.
சனிப்பெயர்ச்சி பலன் கணிப்பு முறை
சனிக்கிரகம் பெயர்ச்சி அடையும் பலனை ஜென்ம லக்னம், சந்திரன்நின்ற இராசி (சந்திர இலக்னம்) மற்றும் நடப்பு தசா புக்தி, கோசாரம்(நடப்புகோள் நிலை) என்ற 3 நிலைகளின் அடிப்படையில் கணித்தால் தான் முழு பலன் அறிய முடியும், ஆனால் இம்முறையில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பலன்சொல்வது என்பது நடைமுறையில் இயலாததாகும். எனவே இங்கு சந்திரன் நின்ற இராசிக்கும், கூடுதல் சிறப்பு கவனத்துடன் நட்சத்திரங்களுக்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளன.
சனி பார்வை, சனி நிலையால் பலன்
சந்திர இலக்னத்திற்கு 3, 7, 11 ஆம் இடங்களில் சனி இருப்பின் நன்மை
சந்திர இலக்னத்திற்கு 12, 1, 2 ஆம் இடங்களில் சனி இருப்பின் ஏழரை ஆண்டுகள் கடினமான காலம்
சந்திர இலக்னத்திற்கு 4,8 ஆம் இடங்களில் சனி இருப்பின் தீமை
சந்திர இலக்னத்திற்கு 5,7,9,10 ஆம் இடங்களில் சனி இருப்பின் நன்மை தீமை கலந்தும்
மீனம் 7 | மேஷம் 6 | ரிஷபம் 5 | மிதுன 4 |
கும்ப 8 | இராசி நிலை 10-9-2009 காலை 5:30 | கடக 3 | |
மகர 9 | சிம்ம 2 | ||
தனூர் 10 | விருச்சி 11 | துலா 12 | கன்னி சனி |
--
Learn Simple Tamil Email Typing : http://www.prohithar.com/tamiltype
Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Cell : 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email : prohithar@yahoo.com,Prohithar@gmail.com
Web : http://www.prohithar.com