Pages

Wednesday, March 05, 2014

மாசி மகம் - Maasi Magam ஒர் அறிவியல் விளக்கம்

மாசி மகம் - ஒர் அறிவியல் விளக்கம்
வானியலில் இதை occultation என்று கூறுவோம்

Maasi Magam Astronomical Explanation  - மாசி மகம் அறிவியல் விளக்கம்

 சூரியன், பூமி, நிலவு, வியாழன், மகம் ஆகிய ஐந்து வானியல் பொருட்களும் நேர்கோட்டில் வரும் காலமே மாசி மகம் ஆகும். தீர்காம்ஸ (longitude)நிலையில் இது சில நூறு வருடங்களுக்கு ஒரு முறை நிகழம். ஆயினும் தீர்காம்ஸ மற்றும் அட்சாம்ஸ(latitude ) இரு நிலைகளிலும் மிக அரிதாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் வானியல் அதிசமாகும்.

பூமியில் இருந்து காணும் பொழுது:
 சூரியனைகாட்டிலும் மிகப்பெரிய மற்றும் ஆற்றல் கொண்ட கூட்டு நட்சத்திரமான(multiple star systems) மகம் நட்சத்திரத்தை சூரிய மண்டலத்தின் பெரிய கிரகமான ஆபாரமான காந்த ஆற்றல் (Magnetosphere) கொண்ட வியாழன் கோள் மறைக்கும், இந்த வியாழன் கோளை பூமியின் துணைக்கோளான நிலவு மறைக்கும்.

 வருடம் தோறும் குரு கிரகம் சூரியனுக்கு எதிரில் (Opposition) வரும் காலத்தில் மட்டுமே இது நிகழும். மேலும் மகம், குரு, நிலவு மூன்றும் அருகில் வருகை தந்து சூரியனுக்கு (சூரியன் கும்பராசியில் நிற்க) எதிர் நிலையில் இருக்கும் காலமே மாசி மாத பௌர்ணமி, மற்றும் மாசி மகம். இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். ஆயினும் மிக நெருக்கமாக  வருவது அரிய வானியல் நிகழ்வாகும்.

 நிலவு மகம் நட்சத்திரத்தை மறைப்பது, நிலவு குரு கிரகத்தை மறைப்பது நிகழ்வு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். இது போன்ற நிகழ்வுகளை http://www.occultations.org. எனும் இணையத்தில் அறிந்து கொள்ளலாம்

 மாசிமகம் எனும் இறையியலுக்கு பின்புலமாக வானசாஸ்திரவியலில் இந்தியர்களின் கணிதஅறிவே புலப்படுகிறது.

பாலு சரவண சர்மா
www.prohithar.com/tac
http://www.thanigaipanchangam.com