Pages

Friday, July 20, 2012

இந்த வருடம் ஸாமவேத உபாகர்மா என்று ?

When Nandana Varusha Sama Vedha Upakarma ?

இந்த வருடம் ஸாமவேத உபாகர்மா என்று ?

           

            இந்த நந்தன வருஷம் ஆவணி மாஸத்தில் இரண்டு அமாவாஸைகள் வருவதால் அதிக பாத்ரபத மாஸம் சம்பவித்துள்ளது இந்த ஆவணி மாஸம் மலமாதம் என கருதப்படுவதால்   ஸாமவேத உபாகர்மா நிர்ணயம் குறித்து சாஸ்திர பண்டிதர்களிடையே பலவித அபிப்ராய பேதங்கள் உள்ளன.

            ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்திலும், அயோத்தியா மண்டபம் மற்றும் ஸ்ரீ நரஸிம்ஹப்பிரியா அலுவலகத்திலும் நடைபெற்ற நிர்ணயம் தொடர்பான சதஸ் மற்றும் விவாதங்களில் பஞ்சாங்க கணிதக்ஞர்கள், பஞ்சாங்க வெளியீட்டார்கள் கலந்துக்கொண்டனர். இதில் வேத சாஸ்திர வித்வான்கள் பலர் தங்களின் சாஸ்திரபூர்வமான, மூலகிரந்த விஷயங்களை மிக ஆழமாக விவாதித்துள்ளனர் .

            இப்படிப்பட்ட விவாதங்களில் கலந்துக்கொண்ட ஸ்ரீ. வேலாமூர் கிழநத்தம் வேணுகோபாலன் அவர்களால் அடியேனுக்கு அனுப்பிவைத்த ஸாமவேத உபாகர்மா நிர்ணயம் தொடர்பான மடலை இங்கு எந்தவித திருத்தமும் இன்றி அப்படியே இணைத்துள்ளேன்.

            ஆக்கபூர்வமான விஷயத்தை வெளியிட வாய்ப்பு தந்தமைக்கு ஸ்ரீ. வேலாமூர் கிழநத்தம் வேணுகோபாலன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


http://www.prohithar.in/nandana/Upakarma_Nirnayanam_2012.pdf


           

            22.2.2012 அன்று நடைபெற்ற ஸ்ரீ நரஸிம்மப்பிரியா அலுவலகத்தில் நடைபெற்ற சாமவேத உபாகர்மா நிர்ணய சதஸ் தொடர்பான வீடியோ:

            http://www.youtube.com/watch?v=jFmIm15byVI

            http://youtu.be/yFPg-RBZlb8

           

பாலு சரவண சர்மா
தணிகை திருக்கணித பஞ்சாங்கம்