Pages

Friday, October 15, 2010

சரஸ்வதி பூஜை நல்ல நேரம்

சரஸ்வதி பூஜை 16.10.2010 சனிக்கிழமை

 

                        உலகை காக்க அவதாரம் எடுத்த ஜகன்மாதா பராசக்தியை நவராத்திரி 9 நாட்களில் லட்சுமி, சரஸ்வதி, காளியாக வழிபட்டு கடைசி நாளில் மகா நவமி அன்று சரஸ்வதி பூஜை என்றும் ஆயுத பூஜை என்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. வடமாநிலங்களில் காளி பூஜையாக வழிபாடு செய்ப்படுகிறது

 

                   சரஸ்வதி பூஜை அன்று நமது தொழில் கருவிகள், கணக்கு புத்தகங்கள், பள்ளி புத்தகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதி படத்திற்கு வெள்ளை மலர்கள்(மல்லி, சம்பங்கி, வெண்டாமரை) கொண்டு அலங்காரம் செய்து, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி படித்து நெய்வேதியம் செய்து தீபாரதனை செய்ய வேண்டும் முடிவில் உலக நண்மை, தொழில், அறிவு மேன்மை அடைய பிரார்த்தனை செய்திடல் வேண்டும்.

 

          சரஸ்வதி பூஜையில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வழிபட்டு மறுநாள் படித்தல் மிகவும் விசேஷமானது.

 

சரஸ்வதி பூஜை வழிபாடு நல்ல நேரம்

                    மிக நல்ல நேரம்(அஷ்டம சுத்தியான நல்ல நேரம்)

                   காலை  6:30  - 8:00

                   மதியம் 12:30 - 1:20

                   மாலை 5:00 - 6:00

                   மாலை 6:30 - 7:30

 

          சரியான இராகு காலம் காலை 8:56 - 10:25

          சரியான எமகண்டம்  மதியம் 1:23 - 2:52

 

          100 கிராம் நவதான்யத்தை நன்கு ஊரவைத்து, அதில் 1 கிலோ கோதுமை தவிடு, 100 கிராம் வெல்லம் கலந்து குதிரை அல்லது பசுவிற்கு தானம் செய்வது மிகவும் புன்னியமானது.


விஜய தசமி 17.10.2010 ஞாயிறு

           

          மறுநாள் பூஜையில் வைத்த புத்தகத்தை எடுத்து படிக்கவும், தொழில் கருவிகளை கொண்டு தொழிலை துவக்குவது மிகவும் நன்மை தரும். சிறுவர்கள் பள்ளி பாட புத்தகத்தை விஜயதசமியில் படிப்பது மிகவும் பலன்தரும், சரஸ்வதி கடாக்ஷத்தால் அறிவும், கல்வியும் மேம்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள்.

 

          விஜய தசமி அன்று தொழில் துவக்க, புத்தகம் படிக்க நல்ல நேரம்

          காலை 5:30 - 6:30, 9:00 - 9:50, 11:00 - 11:50

 

          சிறுவர்களை பள்ளியில் சேர்க்க 9:00 - 9:50