Pages

Monday, March 12, 2018

பேரிடர் கால தொலை தொடர்பு - ஹாம் ரேடியோ

இந்திய குடிமகன் யாவரும் உரிமம் இன்றி வயர்லெஸ் வைத்துக்கொள்ளலாம்
உரிமம் இல்லாத அவசரகால தகவல் தொடர்பு வாக்கி-டாக்கி வெறும் சில ஆயிரங்கள்தான்
Chennai Hamradio, VU3KVB Saravanan, Trekking

பேரிடர் காலத்தில் செல்போன் வேலை செய்யாது. அந்த நிலையில் இராணுவ ஹெலிகாப்டருடன் நேரிடையாக தொடர்பு கொள்ளலாம்(இராணுவத்தின் தகவல் தொடர்பு எந்த அலைவரிசையிலும் கண்காணிக்கவும், பேசவும் இயலும்)
தேசிய நெடுஞ்சாலை விபத்து உதவி, பொது தகவல் தொடர்புக்கும் "சிடிசன் பேண்டு ரேடியா" இந்திய அரசால் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிமம் தேவை இல்லை
குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்களும் தவறாமல் இதுபோன்ற தகவல் தொடர்பு சாதனத்தை கொண்டு செல்லவேண்டும்.
ஒரு செல்போன் விலையை விட குறைவானது. உயிர் விலை மதிப்பற்றது
மேலை நாடுகளில் அனைவருக்கும் இது குறித்த கல்வி தரப்படுகிறது. அது போல் நமது நாட்டிலும் இது போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்
அரசு சலுகை தந்தும் யாரும் இந்த வாக்கி டாக்கிகளை பயன்படுத்துவதில்லை. இனி வரும் காலத்தில் அனைவரும் தவறாமல் வாக்கி டாக்கியை வாங்கி சொந்தமாக வைத்திருப்பது நல்லது
Chennai Hamradio, VU3KVB Saravanan, VHF, UHF

ஆர்வம் இருப்பின் ஹாம் ரேடியோ உரிமம் கூட பெறலாம் இதற்கு படிப்பு, வயது வரம்பு இல்லை!
மேலும் பேரிடர் தகவல் தொடர்பு குறித்து அறிய கீழ்கண்ட இணையத்தை பார்வை இடவும்
பாலு சரவண சர்மா VU3KVB
தன்னார்வ வானொலியாளர்
Amateur Radio Operator