Pages

Friday, December 01, 2017

மார்கழி மாத திரியோதசி திதி

http://prohithar.com/porur-chennai-prohithar-astrologer.html#11
ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதத்தில் தேய்பிறை திரியோதசி திதி இல்லை.
கார்திகை, தை மாதங்களில் திதியில் சங்கரமன தோஷம் உள்ளது.
பின்னர் வரும் திதி கிராக்கியமானது எனும் விதிப்படியும்,
அதேமாத திதியின் வியாப்தியில் இருப்பதும் விசேஷம் என்பதால்
தை மாதம் முதல் நாள் (14.1.2018) சனிக்கிழமை அன்று பகல் 1:46 மணிக்கு மகர ரவி என்பதால் அதற்கு முன்னர் சிரார்தம் (தெவசம்) செய்வது நன்று
Balu Saravana Sarma
Chennai Prohithar & Chennai Astrologer
www.prohithar.com

chennai prohithar chennai astrologer Balu saravanan

Saturday, November 18, 2017

சுப்ரமண்ய சஷ்டி

Top 10 Astrologer in chennai famous astrologer in chennai, tambaram prohithar


முருகன் வேடம் இட்டு குழந்தைகள் முருகன் போல் அழகு, அறிவு, வீரம் கொண்டு விளங்க வழிபடும் நாள்
குழந்தைகளுக்கு சகோதரன்-சகோதரி பிறக்கவும் இத்தினத்தல் சஷ்டி பூஜை செய்தல் நன்று
சுப்ரமண்ய சஷ்டி 21.11.2017 வெள்ளி

Friday, November 17, 2017

சபரிமலை விரதமும் தீட்டும்


Top 10 Astrologer in chennai famous astrologer in tambaram

விரதம் என்பது தனிப்பட்ட விஷயம், அதை தெவசம், இறப்பு விஷயத்துடன் இணைத்துப்பார்க்க கூடாது.

விரத மாலை அணிவது என்பது பிரம்மச்சர்யம் கடைபிடிக்கிறேன் என்று நம்மை நாமே ஸங்கல்பம் செய்து கட்டுப்படுத்திக்கொள்வதாகும்.

இதில் உணவு, உடை, உறக்கம், காமம் தொடர்பான சுயகட்டுப்பாட்டை கடைபிடித்தலாகும். இதில் இறப்பு தீட்டு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதது.

மிக நெருங்கிய உறவினர், நன்பர் மரணத்திற்குகூட மாலை போட்டதால் செல்லக்கூடாது என்று எந்த விதியும் இல்லை.

விரதகாலங்களில் எளிய உணவு உட்கொள்வதால் விருந்தை தவிற்க வேண்டும் என்பதை தவிற இறப்பு தீட்டிற்கும் தனிமனித விரதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

வாழும் காலத்தில் தாய், தகப்பனார், உறவினர், நன்பர்கள் துயரில் பங்கு பெறவிலை எனில் அது ஒரு வாழ்கை அல்ல.

நல்ல குரு ஆனவர்  தாய், தகப்பனார், உறவு, நட்புகள்தான் வாழ்க்கை என்பதை போதிப்பார்.

விரத நிலை என்பது மாமிசம் தவிற்தல், மடித்துணி அணிதல், இறைவனின் திருநாமத்தை உச்சரித்தல், திருநாமத்தை கேட்டல், ஆடம்பரம் இன்றி தரையில் படுத்தல், இறைவனை கண்களால் வணங்குதல் போன்று உடல் சார்ந்தும், இறைவனை பிராத்தனை செய்தல் எனும் மனத்தால் வழிபடுதல் என்பதாகும் இதில்  "கடமை" என்னும் இறந்தவர் உடலை காண்பதால், தாய்தகப்பனாருக்கு திதி தருவதால் விரதம் எந்த விதத்திலும் குறைந்து விடாது.

பாலு சரவண சர்மா
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர்
9840369677