Pages

Saturday, June 18, 2016

முன்னோர் வழிபாடு செய்ய சரியான நேரம்


திதி, தெவசம், பித்ரு பூஜை, தர்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை வீடு மற்றும் புனித ஸ்தலங்களில் "அபரான்னகாலம்" என அழைக்கப்படும் பிற்பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலத்தில் செய்யவேண்டும் இந்த காலத்தில் தான் பித்ருக்கள் பூமிக்கு வந்து நமது வழிபாட்டை ஏற்கிறார்கள்.
திதி "அபாரன்ன" காலத்தில் இல்லாத நாட்களில் "குதப காலம்" என அழைக்கப்படும் நன்பகல் 11:36 முதல் 12:36 மணி வரையிலான காலத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யவேண்டும்.
இந்த காலத்தில் திதி இருக்கும் அடிப்படையில் தான் பஞ்சாங்கத்தில் "சிரார்த திதி" தீர்மானிக்கப்படுகிறது.
-------------------------------------------------------------------
சூரிய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் தினமும் மாறும் எனவே உள்ளூர் சூரிய உதய அஸ்தமன அடிப்படையில் DMS முறையில் மணி,நிமிட கணிதம் செய்து நிஜமான அபாரான்ன காலம் மற்றும் குதப காலம் கணிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது
அபான்னகாலம் துவக்கம்
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 5) * 3 + சூரிய உதயம்
அபான்னகாலம் முடிவு
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 5) * 4 + சூரிய உதயம்
குதப காலம் துவக்கம்
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 15) * 7 + சூரிய உதயம்
குதபகாலம் முடிவு
((சூரிய அஸ்தமனம் - சூரிய உதயம்) / 15) * 8 + சூரிய உதயம்
-------------------------------------------------------------------
ராகு காலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் முன்னோர் வழிபாட்டிற்கும் தொடர்பில்லை.
இந்த காலத்தில் திதி செய்யும் வரை முதியோர், உடல்நலம் குன்றியோர், கர்பினிகள், சிறார் போன்றவர்கள் நீராகரம் பருகலாம்.
முற்றிலும் பட்டினி இருப்பது சிலரது உடலுக்கு ஆகாது என மருத்துவர் கூறும்பொழுது சற்று நீராகாரம் பருகிய பின்னர் திதி செய்யலாம். இதற்கு தோஷம் இல்லை.
தர்மம்: இந்த காலமே முன்னோர்கள் நினைவாக தான-தர்மங்கள் செய்ய மிகவும்உ கந்த காலமாகும்.
http://prohithar.com/amavasai/aparanna-kalam-kudapa-kalam-pitrupooja-thevasam-amavasai-thanrpanam.gif

பாலு சரவண சர்மா
புரோகிதர்- ஜோதிடர் - பஞ்சாங்க கணிதக்ஞர்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
prohithar@gmail.com 9840369677