Pages

Tuesday, March 22, 2016

புறநிழல் சந்திர கிரகணம் - பஞ்சாங்க விளக்கம்



23.3.2016 புதன்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 03:09 மணி அளவில் நிலவானது புவியின் புறநிழல்வட்டப்பகுதிக்குள் நுழைந்து இரவு 7:27 மணி அளவில் வெளியேறுகிறதுஇதனால் பவுர்ணமி நிலவின் ஒளி சற்று மங்கலாக தோன்றும். கிரகண முடிந்தவுடன் முழுமதி பொலிவுடன் காட்சியளிக்கும்.

சென்னையில் புறநிழல் கிரகணத்துடனே சந்திரன் மாலை மணி 6:19 மணி முதல் துவங்கி கிரணம் முடிவடையும் காலம்வரை தெரியும். இதை வெறும் கண்களால் காணலாம்.
23 March 2016 Wednesday Peunambral Lunar Eclipse


இந்த கிரகணம் வானவியலில் கணித சரிபார்த்தலுக்கு மட்டுமே பயன்படும். மற்றபடி முக்கியத்துவம் ஏதும் இல்லை.

இந்து சாஸ்திரப்படி இந்த புறநிழல் கிரகணம் அனுஷ்டானமற்றதாகும் (தோஷம் அற்றதாகும்)

இந்த கிரகணத்தை அடுத்து வரும் இரண்டு சந்திர கிரகணங்களும் புறநிழல் கிரகணங்களாக அமைந்துள்ளது. 

அடுத்து ஒருவருடம் வரை தமிழகத்தில் சூரிய, நிஜநிழல் சந்திர கிரகணங்கள் ஏதும் இல்லை


பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்