Pages

Tuesday, January 06, 2015

திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் - Betelgeuse star orion constellation - α Orionis

வானவீதியில் ஒருநிஜமான ஆருத்ரா தரிசனம்
திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் 2015- Betelgeuse star orion constellation -  α Orionis
இன்று அதிகாலை முன்னர் வானில் நிலவின் அருகில் திருவாதிரை நட்சத்திரம் மிகஅழகுடன் தோன்றியது. வானம் மிகதெளிவாக இருந்ததால் புகைப்படம் எடுக்க மிகவும் தோதுவாக இருந்தது. 

முழுமதியின் ஒளியால் திருவாதிரை நட்சத்திரம் புகைப்படத்தில் தெளிவாக விழவில்லை, எனவே டெலி லென்ஸ் மூலம் திருவாதிரை நட்சத்திரத்தை மட்டும் தனியாக படம் பிடித்து இந்த படத்தில் 100% என்கிற நிலையில் இணைத்துள்ளேன்

சிவனின் உடுக்கை போன்று தோற்றமளிக்கும் ஓரியான் மண்டலத்தில் தனித்துவத்துடன் இருக்கும் இந்த (சூரியனைகாட்டிலும் 1000 மடங்கு பெரியதான) பிரம்மான்டமான சிவப்பு நட்சத்திரத்தை மார்கழிமாதத்தில் முழுநிலவின் அருகில் தரிசிப்பதுதான் "ஆருத்ரா தரிசனம்"

சராசரியாக 354.37(1 சந்திர வருடம்) நாளுக்கு ஒருமுறை இந்த வானியல் நிகழ்வு நடைபெறும். ஒவ்வொரு வருடமும் சௌரமான தனூர்மாதத்தில் நிலவின் அருகில் திருவாதிரை வரும் காலமே ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது.  சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தனூர்மாதத்தில் "முழுநிலவு"விற்கு மிக அருகில் திருவாதிரை  நட்சத்திரம் (Betelgeuse star - Orion constellation -  α Orionis) வரும்.

வான்வெளியில் முதன்முதலில் திருவாதிரை....
வானில் மிதக்கும் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி முதன்முதலில் 10.12.1996ல் எடுத்த நட்சத்திர படமே திருவாதிரைதான் என்பது சிறப்பான அம்சம் அதனின் இணைப்பை இங்கே தந்துள்ளேன்
http://hubblesite.org/newscenter/archive/releases/1996/04

திருவாதிரை நட்சத்திரம் - ஹப்பிள் தொலைநோக்கி படம்
திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் - Betelgeuse star orion constellation -  α Orionis
மன்மத வருடத்தில் ஆருத்ரா தரிசனம் (Arudra Darisanam) ஆங்கில தேதிப்படி 25.12.2015 வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு பின் 26.12.2015 சனிக்கிழமை அதிகாலையில் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் அன்று தவறாமால் வானத்தை பார்த்து நிலவின் அருகில் திருவாதிரை இருக்கும் அழகை கண்டு ரசித்து மகிழுங்கள்.

26.12.2015 Arudra darisanam ஆருத்ரா தரிசனம், திருவாதிரை நட்சத்திரம் - மன்மத வருடம், மார்கழி 10 சனி


பாலு சரவண சர்மா
தாம்பரம் வானவியல் கழகம்
http://www.prohithar.com/tac