Pages

Tuesday, January 27, 2015

Amateur radio - Hilltop Contest - Chennai - 24 & 25 Jan 2015

ஹாம்ரேடியோ மலைஉச்சி தொடர்பு போட்டி
Amateur radio - Hilltop Contest - Chennai - 24 & 25 Jan 2015

Chennai Hamradio - Amateur Radio Club - Contest
படங்கள் பாகம் 1:
https://plus.google.com/u/0/photos/112292199305867435143/albums/6108847863174292145

படங்கள் பாகம் 2
https://picasaweb.google.com/116500424012460933787/2ndARSIHilltopContestTEAM3MOA

24 மற்றும் 25 ஜனவரி 2015  அன்று தமிழகம் முழுவதும் உள்ள ஹாம்ரேடியோ தன்னார்வலர்கள் அருகில் உள்ள மலையில் இருந்து தொடர்பு கொண்டனர். இந்த தொடர்பு பயிற்சி மூலம் HF, VHF, UHF அலைவரிசையில் தங்குதடையற்ற அவசரகால தொடர்புநிலை குறித்தும், நிரந்தர தகவல் தொடர்பு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்சியாக சென்னை தன்னார்வ வானொலியாளர்கள் கருங்குழி மற்றும் மலைவையாவூர் மலைகளில் சனி அன்று இரவுமுழுவதும் கண்விழித்து தகவல் தொடர்பு குறித்த விரிவான ஆய்வுகளை செய்தனர். இது ஒருபோட்டி மட்டும் அல்ல மாறாக தொடர்புநிலையில் பல ஆய்வுகளை செய்ய ஒருகளமாகவும் அமைந்தது

இரவு தங்குவதற்காக மலையில் மின்சாரம் மற்றும் அடிப்படை உதவிகளை மலைப்பாளையம் மலையில் உள்ள பெருமாள்கோவில் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து உதவிசெய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Tuesday, January 13, 2015

மன்மத வருட கிரக பெயர்ச்சிகள் - Planet Transit - Graha Peyarchi

மன்மத வருடத்தில் கிரக பெயர்ச்சிகள்

மன்மத வருட கிரக பெயர்ச்சிகள் - Planet Transit - Graha Peyarchi

மன்மத வருடத்தில் மந்த கிரகங்களின் பெயர்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை குரு பெயர்ச்சி(Guru Peyarchi) மற்றும் ராகு, கேது ( Rahu Kethu Peyarchi) பெயர்ச்சியாகும்

சனி பெயர்ச்சி(Saturn Transit) மன்மத வருடத்தில் இல்லை. மேலும் சனி வக்கிர நிலையிலும் விருச்சிக ராசியிலேயே நின்று அருள் பாலிக்கிறார்.

குரு கிரகம் .7.2015 அன்று காலை :25 மணி அளவில் சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறார் (Jupiter transit in to Leo constellation)

ராகு (சந்திரனின் சூரிய பாதை மேல் வெட்டுப்புள்ளி) 9 .1.2016 அன்று பகல்10 :37 மணி அளவில் சிம்ம ராசிக்கும்(Northern Lunar Node transit in to Leo constellation), கேது (சந்திரனின் சூரிய பாதை கீழ் வெட்டுப்புள்ளி) கும்ப ராசிக்கும் (Southern  Lunar Node transit in to Aquarius constellation)துல்லியமான (True)  நிலையில் பிரவேசிக்கிறார்.

சராசரி (Mean)நிலையில் இராகு-கேது 30.1.2015 அன்று அதிகாலை 1:50 மணிக்கு பிரவேஸிக்கிறார். துல்லியமான நிலையே கிரகண கணதத்திற்கு மிக முக்கியமான காரணியாகும்.

பாலு சரவண சர்மா
தாம்பரம் ஜோதிடர், புரோகிதர், பஞ்சாங்க கணிதம்
ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம்

www.prohithar.com
www.thanigaipanchangam.com

மன்மத வருடம் - முகூர்த்த தினங்கள்- Suba dinam

மன்மத வருடம்(2015 - 2016) - சுபமுகூர்த்தநாட்கள்
திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கப்படி முகூர்த்த நாட்கள், பஞ்சகம் கணித்து அதற்கு ப்ரீதியும் தரப்பட்டுள்ளது.
இணைப்பு:
http://www.thanigaipanchangam.com/manmatha/Manmatha_Muhurtham_2015_2016.pdf

Suba dinam - Muhurtham -Manmatha varusham 2015-16, மன்மத வருட பஞ்சாங்கம், சுப முகூர்த்த நாள், நல்ல நாள், சுபதினம்



பாலு சரவண சர்மா
புரோகிதர்-ஜோதிடர்-பஞ்சாங்க கணிதர்
ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம்
தாம்பரம் - சென்னை 45
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Monday, January 12, 2015

பொங்கல் பூஜை - பானைவைக்க நல்ல உகந்த நேரம்


ஜய வருடம், தை மாதம் முதல் நாள் 15.1.2015 வியாழன் அன்று பொங்கல் பானைவைத்து பொங்கல் பொங்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நல்ல நேரம்
Pongal Pooja Time 15.1.2015 பொங்கல் பூஜை நேரம்

Pongal- Makar shankaranthi Pooja Time
www.prohithar.com/pongal/index.htm


Pongal Pooja Time 15.1.2015 பொங்கல் பூஜை நேரம்
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Happy Pongal Greetings

Friday, January 09, 2015

தை மாத மடல்

தை மாத சுப நாட்கள் விளக்கம்

Jaya Varusha Panchangam - Thai தைமாதம் - ஜய வருடம்


Keywords: Thai Amavasai, Thai Poosam, Pongal, Thai Kirthigai, Ratha Sapthami, தை அமாவாசை, தை கிருத்திகை, தை பூசம், தை பொங்கல், ரத சப்தமி, 2015, 2015, மன்மத வருட பஞ்சாங்கம்

Tuesday, January 06, 2015

திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் - Betelgeuse star orion constellation - α Orionis

வானவீதியில் ஒருநிஜமான ஆருத்ரா தரிசனம்
திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் 2015- Betelgeuse star orion constellation -  α Orionis
இன்று அதிகாலை முன்னர் வானில் நிலவின் அருகில் திருவாதிரை நட்சத்திரம் மிகஅழகுடன் தோன்றியது. வானம் மிகதெளிவாக இருந்ததால் புகைப்படம் எடுக்க மிகவும் தோதுவாக இருந்தது. 

முழுமதியின் ஒளியால் திருவாதிரை நட்சத்திரம் புகைப்படத்தில் தெளிவாக விழவில்லை, எனவே டெலி லென்ஸ் மூலம் திருவாதிரை நட்சத்திரத்தை மட்டும் தனியாக படம் பிடித்து இந்த படத்தில் 100% என்கிற நிலையில் இணைத்துள்ளேன்

சிவனின் உடுக்கை போன்று தோற்றமளிக்கும் ஓரியான் மண்டலத்தில் தனித்துவத்துடன் இருக்கும் இந்த (சூரியனைகாட்டிலும் 1000 மடங்கு பெரியதான) பிரம்மான்டமான சிவப்பு நட்சத்திரத்தை மார்கழிமாதத்தில் முழுநிலவின் அருகில் தரிசிப்பதுதான் "ஆருத்ரா தரிசனம்"

சராசரியாக 354.37(1 சந்திர வருடம்) நாளுக்கு ஒருமுறை இந்த வானியல் நிகழ்வு நடைபெறும். ஒவ்வொரு வருடமும் சௌரமான தனூர்மாதத்தில் நிலவின் அருகில் திருவாதிரை வரும் காலமே ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது.  சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தனூர்மாதத்தில் "முழுநிலவு"விற்கு மிக அருகில் திருவாதிரை  நட்சத்திரம் (Betelgeuse star - Orion constellation -  α Orionis) வரும்.

வான்வெளியில் முதன்முதலில் திருவாதிரை....
வானில் மிதக்கும் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி முதன்முதலில் 10.12.1996ல் எடுத்த நட்சத்திர படமே திருவாதிரைதான் என்பது சிறப்பான அம்சம் அதனின் இணைப்பை இங்கே தந்துள்ளேன்
http://hubblesite.org/newscenter/archive/releases/1996/04

திருவாதிரை நட்சத்திரம் - ஹப்பிள் தொலைநோக்கி படம்
திருவாதிரை நட்சத்திரம் - ஆருத்ரா தரிசனம் - Betelgeuse star orion constellation -  α Orionis
மன்மத வருடத்தில் ஆருத்ரா தரிசனம் (Arudra Darisanam) ஆங்கில தேதிப்படி 25.12.2015 வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு பின் 26.12.2015 சனிக்கிழமை அதிகாலையில் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் அன்று தவறாமால் வானத்தை பார்த்து நிலவின் அருகில் திருவாதிரை இருக்கும் அழகை கண்டு ரசித்து மகிழுங்கள்.

26.12.2015 Arudra darisanam ஆருத்ரா தரிசனம், திருவாதிரை நட்சத்திரம் - மன்மத வருடம், மார்கழி 10 சனி


பாலு சரவண சர்மா
தாம்பரம் வானவியல் கழகம்
http://www.prohithar.com/tac