Pages

Sunday, April 27, 2014

மிகமிக அரிதான குறை கோண மைய நிழல் விலகல் சூரிய கிரகணம் (Non Central Annular Solar Eclipse)

29.4.2014 செவ்வாய் கிழமை இந்திய நேரப்படி காலை 9:22 மணி முதல் பகல் 1:44 மணி வரை சந்திர கீழ்நோக்கு நிலை(கேது - Descending Node) கிரகணம் சம்பவிக்கும்

            ஆஸ்திரேலியா மற்றும் தென்துருவப்பகுதியில் மட்டும் தெரியும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது

            தென்துருவப்பகுதியில் நிகழும் மைய நிழல் விலகல்சூரிய கிரகணம்  5000 ஆண்டுகளுக்கு 68 முறை மட்டுமே நிகழும்

            நுனிப்புல் மேய்வது போன்று சந்திரனின் இரண்டாம் நிலை நிஜநிழல் (Antumbra) துருவப்பகுதி வெளியில் (ஆகாயத்தில்) விழும். சந்திரனின் புறநிழல் (Penumbra) தோற்றத்தால் பூமியின் சிலபகுதிகளில் சூரியன் ஒளி வட்டமாகவும், சில பகுதிகளில் பகுதி வெளி வட்டமாகவும் (Partial Annular Solar Eclipse) இந்த கிரகணம் தோன்றும். இது கிரகண வரிசையில் (Saros) 148வது எண்ணாகும்.

            தொலைவு நிலையில் (Apogee) சந்திரன் விட்டம் சிறியதாகவும், சூரியனின் விட்டத்தைவிட குறைந்தும் இருப்பதால் குறைகோண சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

            தென்துருவப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய அரசின் அறிவியல் துறைகீழ் இயங்கும் கடல் மற்றும் துருவப்பகுதி ஆய்வுநிலையம் (NCAOR) மைத்ரி மற்றும் பாரதி இந்த கிரகணத்தை கண்காணித்து ஆய்வுச்செய்யும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது