Pages

Tuesday, November 08, 2011

எது நல்ல பஞ்சாங்கம்

 

     நல்ல பஞ்சாங்கம் என்று பெயர் எடுத்தால் மிகவும் அதிகமான பொறுப்பு உள்ளது

     நல்ல முகூர்த்தம் என்று கணித்தால் வருடத்தில் அதிக பட்சமாக 10கூட தேறாது

 

இதனால் எண்ணற்ற பிரச்சனைகள்

 

·         திருமண மண்டபம் கிடைக்காது

·         ஏழைகள் வீட்டில் திருமணம் செய்தாலும் விலைவாசி பலமடங்கு இருக்கும்

·         ஒரேநேரத்தில் அதிக திருமணம் நடந்தால் பூக்கள், மாலை, காய்கறிகள் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்படும்

·         திருமணம் சார்ந்த புரோகிதர், நாதஸ்வர கலைஞர், சமையல் கலைஞர் என இப்படி இது சார்ந்த கலைஞர்கள் கிடைப்பது கடினமாகிவிடும் கிடைத்தாலும் தரமானவர்கள் கிடைக்கமாட்டார்கள் சம்பளமும் மிக அதிகமாக இருக்கும்

·         சாலை போக்குவரத்து பாதிக்கும், முன்பதிவுகூட செய்ய இயலாது

·         எல்லாவற்றையும் விட மிக அதிக செலவில் மண்டபம் கட்டிய நிலையில் குறைந்த முகூர்த்தநாட்களால் மண்டபத்தை நடத்த இயலாது

·         மேற்படி கலைஞர்கள் வருடத்தில் 10நாளை நம்பி வாழ்க்கையை நடத்த இயலாது.

 

 

     மேற்கண்ட விஷயங்கள் பொருளாதாரம் சார்ந்து இருந்தாலும். சுமாரான முகூர்த்த நாளில் திருமணம் செய்வதால் தோஷம் ஏதும் இல்லை. அதற்குரிய பரிகாரம் செய்தால் போதும் என்கிறது ஜோதிடநூல்கள். இத்தகைய சூழலில் சுமாரான முகூர்த்தங்களை ஏற்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்

 

     எனவே பஞ்சாங்கம் மிகதரமாக அமைந்தாலும் குறைவான முகூர்த்த நாட்களை வெளியிட்டால்  அதை பெரும்பாலும் அனைத்து தரப்பினரும் புறக்கணிக்கிறார்கள் என்பது தான் உண்மை.

 

     குறிப்பாக மக்கள் ஞாயிற்றுக்கிழமை வரும் முகூர்த்த நாட்களை அதிகம் விரும்பி கேட்கிறார்கள்..!! சாஸ்திரங்கள் ஞாயிற்றுக்கிழமையை ஏற்கவில்லை!

 

     இந்த சூழலில்தான் சில பஞ்சாங்கங்கள் நல்ல மற்றும் சுமாரான முகூர்த்தநாட்களை அதிக எண்ணிக்கையில் கணித்து வெளியிடுகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்

 

     முகூர்த்த நாளை குறிக்க அதிகம் பயன்படுத்தப்படும் மூல நூலான காலவிதானம்  பத்ததியில் ஸ்லோகம் 23 மற்றும் 24 என்ன சொல்கிறது என்றால்

 

     "மிகசிறந்த குணங்களுடன், குறைவில்லாத(தோஷமற்ற) நாள் தேவர்களுக்கும் கிட்டாது.

காலபுருஷன் தோஷத்துடனே எப்பொழுதும இருப்பதால் நல்ல நாள் என்று எதும் இல்லை"

 

     எனவே பஞ்சாங்கத்தை பயன்படுத்தி மணமக்களுக்கு பொருத்தமான முகூர்த்தநாளை கணிப்பதுதான் சரியான ஜோதிடரின் பணி.



--
Learn Simple Tamil Email Typing: http://www.prohithar.com/tamiltype
                                                          
Balu. Saravana Sarma

Prohithar - Astrologer

Contact Time IST: 13:30 TO 20:00

Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com