Pages

Wednesday, September 29, 2010

குழந்தை பிறந்த நேரம் நல்ல நேரமா? தோஷமா ?

குழந்தை பிறந்த நேரம் எப்படி
நல்ல நேரமா? தோஷமா ?
விரிவான கேள்வி பதில்

இணைப்பு :

http://prohithar.in/babynames/birth_time_dosham.pdf

29.10.2010

மஹாளய அமாவாசை 7.10.2010 வியாழன் கிழமை

மஹாளய அமாவாசை 7.10.2010 வியாழன் கிழமை

Malaya Amavasai 2010, 2011, 2012


Malaya patcham - Malaya amavasai
மாளயபட்சம் - மாளய அமாவாசை

    

     சந்திர மாத அடிப்டையில் பாத்ரபத மாஸ - பகுள பட்சம் (தேய்பிறை) காலமும் அதன் முடிவில் வரும் அமாவசை மஹாளய அமாவாசை எனப்படும். இது தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதத்தை ஒட்டியும், சில வருடங்களில் ஆவணி மாத இறுதியிலும் வரும்

     மஹாலயம் என்றால் மஹான்களின் இருப்பிடம் என்று பொருள். நமது முன்னோர்கள் பூமியில் 16 நாட்கள் தங்கி தனது சந்த திகளுக்கு நன்மை செய்ய ஆசிர்வதிக்கும் காலம் இது.

     இக்காலத்தில் எமதர்மன் மறைந்த நமது முன்னோர்களை அவர்கிளின் பெற்றோருடன் பூமிக்கு செல்ல அனுமதியளித்து அக்காலத்தில் பூமியில் உள்ள மகன்கள், மகள்கள் அளிக்கும் தர்பணம், தானம் மூலமான உபசாரங்களை எற்க கட்டளையிடுகிறார்.

     இக்காலத்தில் உணவளிக்கமாட்டார்களா என மறைந்த மூதாதையர் ஏங்குவார்கள். அவர்களின் ஆத்மாசாந்திக்காக அன்னதானம் செய்வது மிக அவசியமானது

     மாளயத்தில் அன்னரூபமான சிரார்தம் மிகவும் சிறப்பானது. அதை செய்ய இயலாதவர்கள் அன்னதானம் செய்யலாம்.

 

குறிப்பு:

மாளயத்தில் தர்பணம் செய்துவைக்கும் பிராமணருக்கு தரும் பணம் சம்பளம் (சம்பாவனை) ஆகும் அது தானம் அல்ல!

அவரின் கடமைக்கு தரும் பணத்தை தானம் என்று தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம்.

எனவே தானத்தை தனியாக சரியான வழியில் செய்யவேண்டும்.

 

மாளயபட்சம்:

     மாளயபட்சம் வெள்ளி 24.9.2010 முதல் துவங்கி வியாழன் 7.10.2010 அன்று மாளய அமாவாசையில் முடிவடைகிறது. மாளயத்தில் வரும் திதி, நட்சத்திரம், யோகம் அடிப்படையில் தர்பணம், தான தர்மம் வழிகளில் முன்னோர்களை வழிபட மிகவும் உன்னதமான நாட்கள் கீழே தரப்பட்டுள்ளது

 

     மஹாபரணி: 27.9.2010 திங்கள்

     மஹா வியதீபாதம்: 30.9.2010 வியாழன்

     மத்யாஷ்டமி: 01.10.2010 வெள்ளி

     அவிதவா நவமி: 02.10.2010 சனி

    

     துறவு பூண்டவர்களுக்கு - சந்நியாஸ மஹாளயம்: 4.10.2010 திங்கள்

     விதவைகளுக்கு - கஜச்க்ஷமய மஹாளயம்: 5.10.2010 செவ்வாய்

     விபத்து, அகால மரணம், துர்மரணம்: சஸ்தரஹத மாளயம்: 6.10.2010 புதன்

    மாளய அமாவாசை வியாழன் 7.10.2010

 

மஹாளய அமாவாசை அன்று பஞ்சாங்கம்

 

பகல் பொழுது(அகஸ்), சூரிய பிம்ப மத்திமத்திற்கு +3 நிமிடம் வேறுபாடு

     சூரிய உதயம் 5:58      சூரிய அஸ்தமனம் 5:55

 

இராகு காலம்: மதியம் 1:26 மணி முதல் மதியம் 2:55 மணி வரை

எமகண்டம்: காலை 5:58 மணி முதல்  காலை 7: 27 மணி வரை

 

சங்கல்பம்:   

 

திருக்கணிதப்படி (தமிழகத்திற்கு மட்டும் பொருந்தும்)

     விக்ருதி வரஷம், தக்ஷ்ணாயனம், வர்ஷ ருது, பாத்ரபத(அல்லது கன்யா) மாஸம், அமாவாஸ்ய திதி, உத்திர பல்குனி நட்சத்திரம்(காலை 7:42 வரை பின்னர் அஸ்தம் நட்சத்திரம், பிராம்யம் யோகம்(மதியம் 1.07 வரை பின்னர் ஐந்திரம் யோகம்), சதுஷ்பாதம் கரணம். குரு வாரம்

 

வாக்கியப்படி (தமிழகத்திற்கு மட்டும் பொருந்தும்)

     விக்ருதி வரஷம், தக்ஷ்ணாயனம், வர்ஷ ருது, பாத்ரபத(அல்லது கன்யா) மாஸம், அமாவசை திதி, உத்திர பல்குனி நட்சத்திரம்(காலை 8.10 வரை பின்னர் அஸ்தம் நட்சத்திரம், பிராம்யம் யோகம்(மதியம் 2.30 வரை பின்னர் ஐந்திரம் யோகம்), சதுஷ்பாதம் கரணம். குரு வாரம்

 

அடுத்த வரும் மாளய அமாவாசைகள்:

 

வாக்கியம், திருக்கணிதம், சூரிய சித்தாந்தம் முறைகள்

27.10.2011 செவ்வாய்

15.9.2012 சனிக்கிழமை அன்று வரும் அமாவாசை அதிக பாத்ரபத அமாவாசை இதை கணக்கில் கொள்ளக்கூடாது

15.10.2012 திங்கள் கிழமை நிஜபாத்ரபத அமாவாசையே மாளய அமாவாசை

 

தானம்

     

கோமாதா:

மாளைய பட்சத்தில் தினமும் காலையில் பசுமாட்டிற்கு 2 கிலோ தவிடு, வெல்லம், உறுவிய அகத்திகீரை ஆகியவற்றை கலந்து ஊறவைத்து காலையில் தானம் செய்யவும்.

     மாளய பட்சத்தில் ஏதேனும் ஒருநாளில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யலாம்.

   

வேதம் கற்பிக்கும் வேதபாட சாலைகளுக்கு மாளைய பட்சத்தில் உதவிசெய்வது மகா புண்ணியமாகும்

காஞ்சி ஸ்ரீசங்கரமட வேத பாடசாலை: +91 44 2722 2115 ( www.kamakoti.org  )                      

ஸ்ரீஸீதாராம குருகுலம் வேதபாடசாலை: +91 44 24361210 (www.vedicgurukulam.com  )

சிவாகம வேதபாடசாலை:+91 9444312367

அஹோபிலமட வேதபாட சாலை:+91 44 22397587

ஸ்ரீ சாந்தீபனி வேதபாட சாலை:+91 44 24895875 (www.madhuramurali.org )

தேவார பாடசாலை(தமிழ் வேதம்):+91 9345566947 (www.thevarapadasalai.com )

 

ஆதரவற்றோர் இல்லங்கள்:

ஆதீஸ்ரர் இல்லம் ஆதரவற்றோர் இல்லம் : 94444 85491

குட்லைப்சென்டர் (மன வளர்ச்சி குன்றியோர்): 2226 4151, 2226 4152

அக்ஷ்யா ஆதரவற்ற முதியோர் இல்லம்: 2276 1658, 98410 08325

சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லம்: 94444 94657, 94448 08915

பவுஷ்ய தீபம் ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்: 2276 1889, 94440 00889

உதவும் உள்ளங்கள் (ஆதரவற்ற குழந்தைகள்): 2226 0612, 6544 6378

ஸ்ரீ சாரதா சக்தி பீடம் ஆதரவற்ற சிறார் இல்லம், பள்ளி: 2276 0612, 2233 3214

 

மாளைய பட்சம் அன்ன தானம் செய்ய மிகவும் உகந்த காலம் ஆகும்

 

மாளய பட்ச திதிகளில் தர்பணம் செய்யும் பலன்கள்

பிரதமை: செல்வம் பெருகும் (தனலாபம்)

துவிதியை: வாரிசு பெருகும்(வம்ச விருத்தி)

திருதியை: நல்ல விவாஹ சம்பந்தம்(வரன்) கிட்டும்

சதுர்த்தி: பகைமை விலகி, எதிரிகள் தொல்லை

பஞ்சமி: விரும்பிய பொருள் கிடைக்கும்(ஸம்பத்து விருத்தி)

சஷ்டி: மனதில் தெய்வீக தன்மை மேலோங்கும் (மற்றவர்கள் நம்மை போற்றுவார்கள்)

சப்தமி: மேலுலகம் (பரலோக) ஆசிர்வதிக்கும்

அஷ்டமி:         உயரிய அறிவை தரும்(புத்தி)

நவமி: ஏழுப்பிறவிக்கும் நல்ல மனைவியை(கணவனை) தரும்

தசமி: விருப்பங்கள் தடைநீங்கி விரைவில் கிட்டும்

ஏகாதசி:          வேத வித்தைகள், கல்வி, கலைகள் கிடைக்கும்

துவாதசி: தங்கம், வைர ஆபரங்கள் சேரும்

திரியோதசி:    நல்ல குழந்தைகள், மேதை, கால்நடைச்செல்வம்,நீண்ட ஆயுள்

சதுர்தசி:         முழுமையான இல்லறம் (கணவன் - மணைவியுடன் நல்ல வாழ்க்கை)

அமாவாசை: மூதாதையர், ரிஷிகள், தேவர்கள் ஆசிர்வாதம்

 

Pdf format

Malaya patcham - Malaya amavasai
மாளயபட்சம் - மாளய அமாவாசை

 

Mahalaya Amavasai 2010, 2011, 2012

© காப்புரிமை 2010                - 28 செப்டம்பர் 2010

www.prohithar.com

Friday, September 17, 2010

புரட்டாசி மாதத்தில் புதிய இல்ல கிரஹப்பிரவேசம் செய்யலாமா?

புரட்டாசி மாதத்தில் புதிய இல்ல கிரஹப்பிரவேசம் செய்யலாமா?
மாளயபட்சத்தில் வீடு மாறாலாமா?
புரட்டாசியில் வீடுகட்ட துவங்குவது எப்படி?
போன்ற ஐயங்களுக்கு விளக்கம் அறிய
கீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும்

http://www.prohithar.com/downloads/purattaci-house_worming.pdf
17.9.2010

Thursday, September 09, 2010

விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு நேரம்

விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு நேரம்

               

        11.9.2010 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று திருக்கணிதப்படி சதுர்த்திதிதியில் பஞ்சமிதிதி தொட்டுக் கொண்டிருப்பதும் பகலில் சித்திரை நட்சத்திரம் அபாரண காலத்தில்(படையல் போடும் காலம்) வியாபித்திருந்து, சனிக்கிழமையில் வருகை தந்துள்ளது மிகவும் சிறப்பானதாகும்.

 

வழிபாட்டு நேரம்

 

        விநாயகர் சதுர்த்தி அன்று(11.9.2010) காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்கு முன்னர் இலக்னத்தில் சந்திரன்இருக்க, லக்னம் சித்திரை நட்சத்திரத்தின் வழியாக பயணிக்கும் காலம் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த காலம் ஆகும். அந்த நேரத்தில் 7ஆம், 8ஆம் (அஷ்டம சுத்தி) இடம் சுத்தமாக இருப்பதால் இல்லறத்தில் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டு நன்மை கிட்டும், நோய் நீங்கி ஆயுள் விருத்தியடையும்.

 

        மேற்படி நேரத்தில் வழிபட இயலாதவர்கள் காலை 10:30 மணிக்கு மேல் மதியம்12 மணிக்கு முன்னதாக சுப ஹோரையில் வழிபடுதல் நன்று.

 

சுபம்



--
Learn Simple Tamil Email Typing: http://www.prohithar.com/tamiltype

Balu. Saravana Sarma
Prohithar - Astrologer
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com,prohithar@gmail.com
Web: http://www.prohithar.com