Pages

Sunday, January 03, 2010

தை மாதம், விரோதி வருடம் சுப முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகைகள்

தை மாதம், விரோதி வருடம் சுப முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகைகள்

Auspicious Dates based on Drik-Vakya Panchangam, -Thai month - Virothi Varusham (2010)

 

தை மாத பிறப்பு (Makara Sankranthi) மற்றும் தை மாத முடிவு(மாசி மாத பிறப்பு) - சென்னை

 

வரருசி வாக்கிய முறை வியாழன் 14.1.2010 தை மாத முதல் நாள் மாலை 3:32 மணி

13.2.2010 சனிக்கிழமை அதிகாலை 2.25மணி (தமிழ்படி தை 30 வெள்ளி இரவு)

 

ஆரியபட்டீயம் முறை வியாழன் 14.1.2010 தை மாத முதல் நாள் மாலை 3:27 மணி

13.2.2010 சனிக்கிழமை அதிகாலை 2.17மணி (தமிழ்படி தை 30 வெள்ளி இரவு)

 

திருக்கணிதம் முறை வியாழன் 14.1.2010 தை மாத முதல் நாள் மதியம் 12:38 மணி

13.2.2010 சனிக்கிழமை அதிகாலை 1.37மணி (தமிழ்படி தை 30 வெள்ளி இரவு)

 

            தைமாதம் முதல் தேதியிலிருந்து சூரியன் நிராயன மகர ராசியில் (நிராயண 270°முதல் 300° வரை) சஞ்சரிப்பார் அதே நேரத்தில் சூரியன் வடக்கு நோக்கி  பயனிப்பார் இதை உத்திராயண புன்னியகாலம் என்றும் பருவகாலத்தில் "பின்பணி" காலம் (ஹேமந்த ருது) என்றும் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இதை மகரசங்காரந்தி என அழைக்கப்படுகிறது

 

இதர நாடுகளில் தை மாதம் பிறப்பு: சர்வதேச தேதி கோடு துவங்கும் பகுதியின் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பதால் நியூசிலாந்து முதல் இந்தியாவின் மேற்கே  கிரீன்விச் வரை உள்ள நாடுகள் அனைத்தும் இந்தியாவில் கடைபிடிக்கும் அன்றே தை மாத முதல் தேதி ஆகும்.

 

மாத பிறப்பு கணணம்  - சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம்: Makara Sankaranti - Beginning Time

"தை பிறந்தால் வழி பிறக்கும்" திருமணம் கூடிவரும்........!

            தமிழ் மாத பிறப்பு சூத்திரம்: "சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் எந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கிறாரோ அந்த நாளே சூரியன் பிரவேசித்த இராசிக்குரிய மாதம்" ஆகும் என்கிற விதிப்படி கணணம் செய்தால்.

            சூரியனின் நிராயண ஸ்புடம் (புவி சாய்வு கோணம் கழித்து) நிலையான புள்ளி, மாறும் அயனாம்ச வேறுபாடு அடிப்படையில் கொண்டு கணித்த புள்ளிவிபரம் அடிப்படையில்.

            இந்திய மைய நேரம்(IST) உஜ்ஜெயினி பட்டணத்தில் (82 º30´E கிழக்கு தீர்கரேகாம்சம் 23 º11´N வடக்கு அட்சரேகாம்சம்) சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம்  மதியம் 12:38(இந்திய நேரம்)

            அஸ்தமனம் மாலை 6:00 என்கிற நிலையில்(சூரிய அஸ்தமனத்தை கணிக்க பல்வேறு விதமான கணக்கீடுகள் உள்ளன அவற்றை இங்கு விளக்க இடமில்லை)               

                       

18:00 - 12:38 =5:22 மணி வேறுபாடு கிடைக்கிறது (சூரிய அஸ்தமனம் வரை இடையில் உள்ள நேரம்)

            சர்வதேச இந்திய நேரம் வேறுபாடு + மேல் கிடைத்த வித்யாச நேரம் = +5:30 + 5:22 =+10:52 முழுமையாக +11 மணி என்று எடுத்துக்கொண்டால் எந்த நாட்டில் சர்வதேச நேரம் +11(UTC) மணி ஆகிறதோ அந்த நாடுகளில் (23 º11´N வடக்கு அட்சரேகாம்சம் கீழ்) மாலை நேரத்தில் (சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர்) தைமாதம் பிறக்கிறது.

 

            இனி இதை பாகையாக மாற்றுவோம்:  1 பாகைக்கு  =  4  நிமிடங்கள், 11 மணிக்கு சமமான பாகை கணிக்க

 

            பூமியின்நிலநடுக்கோட்டின்(Equator) வடக்கே 23 º11 N மற்றும் தெற்கே 23 º11 S அட்சரேகை( latitude) க்குட்பட்ட பகுதியில்,  தீர்கரேகை(Longitude) +165 E சர்வதேச தேதி எல்லைக்கோடு  உட்பட்ட பகுதியில் கிரீன்விச் நேரப்படி கிழக்கு +11:00 East மணி நேர வித்யாசத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் 14.1.2010 அன்று தான் தை மாதப்பிறப்பு

            பூமியின் தென்பகுதியில் 23 º11´S அட்சரேகாம்சம் கீழும் (Southern Hemisphere) உள்ள, கிரீன்விச்சிலிருந்து  கிழக்கு 165 º E தீர்காம்சம் வரை உள்ளவர்களுக்கும் 14.1.2010 அன்றுதான் தைமாத பிறப்பு

                         

            குறிப்பு: நில நடுக்கோட்டிற்கு கீழ் தெற்கே உள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தற்பொழுது  கோடைகாலம் எனவே சூரிய அஸ்தமனம் உள்ளூர் நேரப்படி சுமார் 6:45 மணி  ஆகும் இந்த நிலையில் அவர்களுக்கும் 14.1.2010 அன்றுதான் தை முதல் நாள்.

 

            கிரீன்விச் பகுதிக்கு மேற்கே உள்ள நாடுகளில் வட, தென் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் 14.1.2010 அன்றுதான் தை மாத முதல் நாள்

 

            23º11 N வடக்கு அட்சரேகைக்கு (Northern Hemisphere) மேல்  உள்ள நாடுகள், ஜப்பான் வடக்கு ரஷ்யா, வடக்கு, வட கிழக்கு சீனா, தைவான், ஜப்பான்நாடுகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மாதம் பிறப்பதால் மறுநாள் 15.1.2010 அன்று தை முதல் நாள்.

 

            தை முதல் நாள் மாற்றம் இருப்பின் இப்பகுதிகளின் வாஸ்து நாள், கரிநாள், தனியநாள் இவைகளில் மாற்றம் இருக்கும்.

 

பொங்கல் வைக்க சிறந்த நேரம்(தமிழகம்) Auspicious Time for Cooking Sweet rice(Pongal) and Sun Prayer

               

            பொங்கல் அன்று சூரியன் 12:38க்கு பிறகு மகர ராசியில் பிரவேசிப்பதால்

நன்பகல் 12:38 க்கு பிறகு பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடத்துவது நன்று.

z சென்னை சூரிய உதயம்:6:35                                                   z சூரிய அஸ்தமனம்: 18:01                     

z மொத்த பகல் காலம்(அகஸ்):11மணி 26 நிமிடங்கள்

z ராகு காலம்: 1:43 p.m. to 3:09 p.m.                  z எமகண்டம்: 6:35 a.m. to 8:00 a.m

                ராகுகாலம்,எமகண்டம் என்பது பகல் பொழுது மொத்த நேரத்தில் 8ல் 1 பங்கு ஆகும். பகல் பொழுது.இரவுப்பொழுதும் சமமாக வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வரும். அதை

சமாக நாள் என்று அழைக்கிறோம்

 

மிகநல்ல நேரம்:             அன்றைய தினம்  மேஷ லக்னத்தில்  (பரணி நட்சத்திரத்தில்) நன்பகல்

12:38Noon க்கு மேல் பகல் 13:25pm மணி முன்னர் அஷ்டம சுத்தி(8ஆம் இடம் சுத்தம்) அடுப்பு மூட்டுதல், பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு செய்தல்  மிகவும் நன்று

            மாட்டுப்பொங்கல் அன்று கிரஹணம் முன்னரை பகல் 9  மணிக்கு முன்னர் மாட்டுப்பொங்கல் வழிபாடு நன்று. மாலை 4:42 க்கு பிறகு மாட்டுவண்டி ஊர்வலம், கிராம தேவதை, அம்மன் கோயில் வழிபாடு நன்று.

 

தை அமாவாசை வழிபாடு:

 

            இவ்வருடம் தை அமாவாசை தை முதல் நாள் பொங்கல் அன்று வருகிறது. அன்று காலை 10:12 முதல் அமாவாசை துவங்கி மறுநாள் நன்பகல் 12:42 வரை  உள்ளது. மறுநாள் அமாவாசை முடிவில் சூரியகிரஹணம் நடைபெறுகிறது.

            பண்டிகை நாட்களில் அமாவாசை வரும் பொழுது "முதலில் அமாவாசை வழிபாடு" செய்த பின்னர் பண்டிகையை கொண்டாட வேண்டும். எனவே காலையில் 10:15 மணி அளவில் தர்ப்ணம் செய்து வீட்டை தூய்மைபடுத்தி பின்னர் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும்.

            பொங்கல் அன்று வரும் அமாவாசை வழிபாட்டுக்காக தனியாக "படையல் இல்லை", காக்கைக்கு அன்னம் இல்லை. பொங்கல் வழிபாட்டில் சூரிய வழிபாடு முடிந்ததும் காக்கைக்கு அன்னம் வைக்கவேண்டும். மேலும் மறுநாள் 15.1.2010 கிரஹணம் துவக்கத்தில் கிரஹண தர்ப்பணம் செய்தல் நன்று.

                       

            அமாவாசை மற்றும் அயன புண்ணிய கால தர்பண சங்கல்பம்: விரோதி, உத்திராயணம், ஹேமந்த ருது, மகர மாஸம்( சாந்திரமான புஷ்ய  மாஸம், பகுள பட்ச), கிருஷ்ண பட்ச அமாவாஸ்ய, பூர்வாஷாட நட்சத்திரம், குரு வாஸரம்,

கிரஹண புண்ணியகால தர்ப்பண சங்கல்பம்: விரோதி, உத்திராயணம், ஹேமந்த ருது, மகர மாஸம்( சாந்திரமான புஷ்ய மாஸம்- பகுள பட்ச), கிருஷ்ண பட்ச அமாவாஸ்ய, உத்திராஷாட நட்சத்திரம், ப்ருகு வாஸரம் ஸூர்யோப ராக புண்யகாலே திலதர்ப்பணம் கரிஷ்யே. என்று சூரிய கிரஹண துவக்கத்தில் செய்யவேண்டும்.

 

பொங்கல் வழிபாடும் - பசு, காளை, எருமை மாடுகளும்

Animal welfare and Orphanage

                       

                தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும் பொங்கல் ஆகிய மூன்று நாட்களும் காலையில் பசு, காளை, எருமை இவைகளுக்கு கோதுமை தவிடு 3 கிலோ, வெல்லம்  100 கிராம்,வாழைப்பழம்2, ஒரு பிடி அரிசி ஆகியன கலந்து காலையில் (நமது சிற்றுண்டிக்கு முன்னர்) தானம் செய்யவும். பசு மாடு கிடைக்காத சூழலில் அருகில் இருக்கும் பசுவை பராமரிக்கும் "கோசாலை" களுக்கு ஒரு தொகையை தானம் செய்யலாம். அல்லது கிராமத்தில் உள்ள பசு வைத்து பிழைக்கும் ஏழை விவசாயிக்கு பணமாக அனுப்பலாம். தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் பசுவை பாதுகாக்கும் "கோசாலை" முகவரிகள்

சிவ ஆகம வேத பாட சாலை, முடிச்சூர், தொலைபேசி எண்: 6561 9798, 94443 12367

அஹோபில மடம், கிழக்கு தாம்பரம், தொலைபேசி எண்: 2239 7567, 94440 47567                  

பொங்கல் பண்டிகையும் விவசாய கூலித்தொழிலாளர்களும்

Agriculture - Daily wages workers  and  handloom  weavers 

 

            விவசாயத்தில் ஈடுபடும் சிறு விவசாயிகள் இலாபம் இன்றியும், கூலித்தொழிலாளர்கள் குறைந்த வருவாய் காரணமாக மிகவும் வறுமையில் வாடுகின்றனர். நமது வயிறை நிரப்பும் அந்த குடும்பத்தினர் மகழ்ச்சியாக இந்த பொங்கலை கொண்டாட அவர்களுக்கு புத்தாடைகளை வாங்கித்தருவது மகா புண்ணியம் ஆகும்.

            மேலும் பருத்தி ஆடைகளை, கைத்தறி ஆடைகளை வாங்கி ஏழை நெசவாளி, பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்போம். "நம் மானம் காக்கும் அந்த நெசவாளிக்கு அதுவே வெகுமானம் ஆகும்".

                அன்மை காலங்களில் கைத்தறி நெசவாளிகளுக்கு கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டது அவர்களின் ஏழ்மைக்கு ஓர் அடையாளம்.

 

சூரிய கிரஹணம் Annular Eclipse of the Sun  Friday 15.1.2010 வெள்ளிக்கிழமை

 

                                    இந்தியாவில்  15.1.2010 வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் அன்று கங்கண சூரிய கிரகணம் காலை துவங்கி மாலையில் நிறைவடைகிறது. இடத்தின் தீர்க, அட்ச ரேகை அளவுகளுக்கு ஏற்ப கிரகண நேரம் வேறுபடும். மிக அதிகமான நேரம் தமிழகத்தின் தென்பகுதியில் தெரியும்.

இடம் Place

துவக்கம் Begin

உச்சம் Greatest

முடிவு End

பூமியில் On Earth

காலை 9:35 AM

பகல் 12:51PM

மாலை 15:38 PM

சென்னை Chennai

காலை 11:25

பகல் 13:30

மாலை 15:16

கன்னியாகுமரி வைர மோதிர காலம்          m துவக்கம் பகல் 13:10 m முடிவு 13:21

 

ஜோதிட பார்வையில் :

கிரஹணம் உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழ்வதால் முன், பின் நட்சத்திரங்களான பூராடம், திருவோணம், 10ஆம்(திரிகோண) நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம் நட்சத்திரத்தினர் நவக்கிரக சாந்தி அர்ச்சனை மற்றும் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் செய்யவும்

Astrological View:

Uthiradam, Pooradam, Thiruvonam, Uthiram, Karthigai stars are affected by Solar Eclipse. Perform Navagrha Archana at temple and Annadanam (offering food ) at  nearest Orphanage

 

தங்கள் பகுதியில் நிகழும் கிரஹண நேரம் கணக்கிட எனது இணையதளத்தினை பார்வை இடவும்

Please Visit my website for calculate Eclipse time for your place

http://www.prohithar.com/eclipse_calculator.html

 

                "உலகத்திலேயே 4500 ஆண்டுகளுக்கு முன்னதாக நாள்காட்டியை முதன் முதலாக  பயன்படுத்தியவர்கள் இந்தியர்களே. அக்கால கட்டத்தில் வானியலில் சிறந்து விளங்கினார்கள். காலம் அறிந்து பயிர் வைத்த சிறந்த நாகரீகத்தினை சார்ந்தும், கிரகணம் பற்றிய அறிவும் அவர்களிடத்தில் இருந்தது. ஆயினும் அவர்கள் பயன்படுத்திய கணக்கீடு முறைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்" - Prof. M.N. Saha (History of calendar, Chapter V, Page 212)

 

மகா சிவராத்திரி ஏன் தை மாதத்தில் வருகிறது?

            மகா சிவராத்திரி சந்திர மாதத்தின் அடிப்படையிலானது. தேய்பிறை சதுர்தசி என்று 15 நாழிகை இரவில் உள்ளதோ அன்று சிவராத்திரி ஆகும்.  "மாக பகுள சதுர்தசி" (சந்திர மாதமான "மாக" மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்தசி திதி) மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

            இது சந்திர மாதம் என்பதால் 29.5306 நாட்கள் ஒருமாதம் என்ற நிலையில் ஒரு சந்திர வருடம் 354.36 நாட்களை கொண்டது, இதனால் ஒவ்வொரு வருடமும் 10.89 நாட்கள் குறைந்து சராசரியாக2.7 சூரிய (தமிழ்) வருடங்களுக்கு ஒரு முறை சந்திர வருடத்தில் ஒரு மாதம் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. எதிர் வரும் சித்திரை மாதத்தில் வரும் சந்திரமான - வைசாக மாதம் "அதிக மாதம்"  எனக்கொண்டு  அதனை அடுத்து வரும் மாதத்தை நிஜ மாதம் என கணக்கிடுகிறார்கள்.

            ஒவ்வொரு வருடமும் இது போல் சிவராத்திரி சுமார் 12நாட்கள் முன்னதாக வந்து 2.7 வருடங்களுக்கொரு முறை மாசி மாத துவக்கத்தில் அல்லது மாசி மாதத்தின் முதல் நாள் வரும். 

 

          19 சூரிய வருடம் சுழற்ச்சியில் தை மாதத்தின் கடைசி நாளில் அல்லது மாசி மாத முதல் நாளில் மஹா சிவராத்திரி வரும் வாய்ப்பு உள்ளது.

கடைசியாக தை மாதத்தின் கடைசி நாளில் சிவராத்திரி வந்த வருடம்

            1991 பிப்ரவரி 12 செவ்வாய் கிழமை தமிழ் வருடம் பிரமோதூத வருடம் தைமாதம் 30ஆம் நாள்  இரவு மஹா சிவராத்திரி வந்தது

            1972 தை மாத இறுதி நாளில் மஹா பிரதோஷமும் மாசி 1ஆம் தேதி சிவராத்திரி.

            1953 தை மாத இறுதி நாளில் மஹா பிரதோஷமும், மாசி முதல் நாள் சிவராத்திரியும்.

கடந்த சில வருடங்களில் மகா சிவராத்திரி வந்த நாட்கள்

            11 மாசி (2009)                24 மாசி (2008)                5 மாசி (2007)     15 மாசி (2006)                25 மாசி (2005)                9 மாசி (2004         )

 

தை (விரோதி வருடம்) மிக நல்ல நாள் - நேரம். Thai(makara masa) Month Auspicious Dates

 

            கீழே தரப்பட்டுள்ள நாட்கள் பொதுவாக நல்ல நாட்கள் அது தங்களின் நட்சத்திரத்திற்கு பொருத்தமானதா என்பதை ஜோதிடரிடம் கலந்து ஆலோசிக்கவும்.

 

17.01.2010    ஞாயிறு                        சுக்கில துவிதியை                  

திருவோணம்               மிர்              கும்பம்                         07.30-09.00

 

18.01.2010    திங்                              சுக்கில த்ருதீயை                    

அவிட்டம்                                 சித்த                கும்பம்                         09.00-10.00

 

21.01.2010    வியா                சுக்கில ஷஷ்டி                                     

உத்திரட்                                   சித்த                கும்பம்                         08.30-10.00

 

22.01.2010    வெள்               சுக்கில ஸப்தமி                                   

ரேவதி                                      மிர்               மகரம்               07.00-08.00

 

27.01.2010    புதன்               சுக்கில துவாதசி                                 

மிருகசீரிடம்                 சித்த                மகரம்               06.00-07.30

 

04.02.2010    வியா                கிருஷ்ண ஷஷ்டி                     

சித்திரை                                  மிர்               கும்பம்                         07.30-09.00

 

05.02.2010    வெள்               கிருஷ்ண ஸப்தமி                   

ஸ்வாதி                                                சித்த                கும்பம்                         07.30-09.00

 

12.02.2010    வெள்               கிருஷ்ண துர்தசி                  

உத்திரா                                               சித்த                கும்பம்                         07.00-08.30

 

விரிவாக - தை (விரோதி வருடம்) மிக நல்ல நாள் - நேரம். Detailed auspicious dates and time

 

Sunday,17.1.2010 ஞாயிறு காலை 9:30 மணி மட்டும் Till 9:30 am , All Ceremonies

            அனைத்து விசேஷங்களும் செய்யலாம்.

 

Monday, 18.1.2010 திங்கள் முழுவதும் நன்று Whole day, All Ceremonies

            அதிகாலை கணபதி ஹோமம்,  அனைத்து சுப நிகழ்ச்சிகளும்

 

Tuesday, 19.1.2010 செவ்வாய் சுக்ல சதுர்த்தி - தைமாத சுக்ல சதுர்த்தி மிகவும் விசேஷமானது.

                Very auspicious day for Ganapathi Homam at early morning, அதிகாலை கணபதி ஹோமம் நன்று

 

Wednesday, 20.1.2010 புதன் மாலையில் மட்டும் Evening time only

            நிச்சியம், மஞ்சள் நீராட்டுவிழா, சீமந்தம்.  Auspisious for Betrothal, Puberty ceremony, Pregnant ceremony (Simantham)

 

Thursday, 21.1.2010 வியாழன் முழுவதும் நன்று Whole day

            Early morning Ganapathi Homam, House warming,  and  suitable for all ceremonies

                அதிகாலை கணபதி ஹோமம். கிரஹப்பிரவேசம் மற்றும் நாள் முழுவதும் அனைத்து சுபங்களும்

            குறிப்பு: வளர்பிறையில் வரும் தனியநாள் தோஷம் அற்றது

 

Friday, 22.1.2010 வெள்ளி அதிகாலை முதல் நாள் முழுவதும் Whole day

            Suitable for all ceremonies அனைத்து சுபங்களும்

 

Monday 25.1.2010 திங்கள் வாஸ்து நாள் Vastu Date

 

வாஸ்து நேரம் (சென்னை): காலை 9:48 மணி முதல் காலை 11:18 வரை,

            மிகவும் சிறப்பான நேரம் 1.42 முதல் 11.18 வரை,       

            ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00மணி வரை, எமகண்டம்:  காலை 10:30 முதல் நன்பகல் 12:00 வரை

            சித்திரை நட்சத்திரத்தினருக்கும், துலா ராசியினருக்கும் அன்று சந்திராஷ்டமம் எனவே அவர்கள் அன்றைய   தினம் வாஸ்து             பூஜை     செய்யக்கூடாது.

          Vastu Time(Chennai): Starting time 9:48 am, End Time: 11:18 am,

            Pooja Time 10:42am  to 11:18am, Ragu Kalam: 7:30am to 9:00am           

            Emakandam: 10:30am to12:00 noon,

            Inauspicious to Thulam Rasi and Chandrastamam for Chitra Nakshtram.

Image: Boomi devi படம்: பூமி தேவி

 

Wednesday, 27.1.2010 புதன் நாள் முழுவதும் நன்று Whole day

            Suitable for all ceremonies from early morning, அதிகாலை முதல் அனைத்து சுப நிகழ்ச்சிகளும்

 

Thursday, 28.1.2010 வியாழன் மாலை மட்டும் Evening only

            Auspisious for Betrothal, Puberty ceremony, Pregnant ceremony (Simantham) நிச்சியம், சீமந்தம், மஞ்சள் நீராட்டு விழா

 

Friday, 29.1.2010 வெள்ளி மதியம் 3 மணி வரை மட்டும் (Till evening 3PM)

            Early morning Ganapathi homam, Hair offering, Ear pierce, and all ceremonies (except Wedding) அதிகாலை கணபதி   ஹோமம், காலை திருமுடி இறக்கம், காது குத்தல் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கு நன்று

 

Thai Poosam. 30.1.2010 Saturday தைப்பூசம்

                        வாக்கிய கரணம் பஞ்சாங்கப்படி சனிக்கிழமை 30.1.2010 அன்று மதியம் 12:40 மணி வரை பௌர்னமி உள்ளது

                        சிங்கப்பூர், மலேசியா உள்ளூர் நேரப்படி 15:10 வரை தைப்பூச வழிபாடு மிக நன்று.

 

Tuesday, 2.2.2010 செவ்வாய் சங்கடஹர சதுர்த்தி Sankadahara Chathurthi

            Early morning and Evening Ganapathi homam(Auspicious day for ganapathi homam)

                அதிகாலை மற்றும் மாலை கணபதி ஹோமம் மிகவும் சிறப்பானது.

 

Wednesday, 3.2.2010 புதன் அதிகாலை 7 மணி வரை Till Morning 7 am only

            Best day for Ganapathi homam, கணபதி ஹோமம் நன்று

 

Thursday, 4.2.2010 வியாழன் முழுவதும் நன்று Whole day

            அதிகாலையில் இருந்து அனைத்து சுப நிகழ்ச்சிகளும் செய்யலாம்

            From early morning to Night for all ceremonies

 

Friday, 5.2.2010 வெள்ளி  முழுவதும் நன்று Whole day

            அதிகலை கணபதி ஹோமம் மிகவும் நன்று. நாள் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் செய்யலாம்

            From early morning to Night -  Suitable for all ceremonies

 

Thursday, 11.2.2010 வியாழன் காலை 10 மணிக்கு மேல் நாள் முழுவதும் நன்று After 10 AM to Night

            Suitable for all ceremonies அனைத்து சுப நிகழ்ச்சிகளும்

 

Friday, 12.2.2010 வெள்ளி அதிகாலை முதல் பகல் 10:30 மணி வரை நன்று Early morning to 10:30 am

            Suitable for all ceremonies அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நன்று.

 

இறைத்தொண்டில்

பாலு சரவண சர்மா

பரம்பரை புரோகிதர்- ஜோதிடர்

எண் 9, 4வது தெரு, கல்யாண் நகர், தாம்பரம்(மே), சென்னை 45, பாரத நாடு.

தொலைபேசி: 91 44 2226 1742, 91 98403 69677

மின்னஞ்சல்: prohithar@gmail.com        இணையம்: www.prohithar.com

3.1. 2010